புதன், 20 ஏப்ரல், 2011

பதிவுலகம் - நம்ம பார்வை

என்றைக்கும் இல்லாத அளவிற்கு என் வலைப்பூவின் நேற்றைய ‘ஊழல் ஒழிஞ்சிபோச்சு’ இடுகையை தமிழிஷில் 19 பேர் வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தவறான தலைப்பை இட்டதற்காக வருந்துகிறேன். எதிர்பாரமல் சும்மா வைத்த தலைப்புதான்.,ஆனால் இது மார்கழி பஜனை சீசன் மாதிரி ஊழலுக்கு எதிர்ப்பு சீசன் என்றபடியால் இந்தப்படிக்கு வரவேற்பு நல்கியிருக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

நானும் எப்படியாவது வாசகர்கள் படிக்கிற மாதிரி எழுதனும்னு நினைக்கிறேன், யாராவது ஒரு வார்த்தை நல்லா எழுதுறீங்க சொன்னா..அவ்வளவு தான் அதுக்காகவாவது இன்னும் எழுதனும் மனுசனோட இயல்பு தானே? இந்த வலைப்பக்கம் விசிட் அடிச்சதே நண்பர் விஜயன் அவர்களின் ‘சல்லடை’ வலைப்பூ மூலமாத்தான். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது இப்படி தமிழ்ல எழுதறுது, விவாதிக்கறதுக்கு ஒரு தளம், மேடை இருக்குன்னு. எல்லாபதிவர்களும் தனக்குப் பிடிச்ச வலைப்பக்கங்களை அறிமுகம் செய்றாங்க, அதனாலே எல்லையே கிடையாது. ஒரு தளத்துக்கு போயாச்சுன்னா நீங்க உலகத்தை சுத்துனமாதிரி கடைசியில உங்க வலைப்பூவுக்கே வந்துறலாம். ஆச்சரியமா இருக்கு, முன்னாடி பொதுவெளியில எழுதுறதுன்னா அது பேப்பர்காரனுக்கு ‘அன்புள்ள ஆசிரியருக்கு’ அப்படின்னு ஆரம்பிச்சு உங்க பேப்பர் மாதிரி உண்டா கொஞ்சம் புகழ்ந்து எழுதுனா, ரெம்பவாட்டி எழுதுனா கொஞ்சம் கருணை பண்ணி ஒருவாட்டி தலையங்கத்துக்கு கீழே உங்க பேரோட கடிதத்தை போடுவாங்க. நானும் தினமணிக்கு நிறையவாட்டி கடுதாசி போட்டேன், அவங்க எப்படி எல்லா வாசகரோட கடிதத்தையும் போடமுடியுமா? ஆனா இப்ப வலைப்பூவுல நம்ம எழுத்தை யாருவேணுமின்னாலும் படிக்கலாம் (பொறுமையிருந்தா ?முடிஞ்சா). என் பிரெண்ட் ஒருத்தருக்கு இந்தமாதிரி வலைப்பூ இருக்கு, நிறையபேரு தமிழ்ல எழுதுறாங்க, நிறைய விசயத்தைப் பத்தி அரசியல்,சினிமா,சுற்றுலா, காமெடி, காமிக்ஸ்,சிறுகதைகள், சமையல் இப்படி நிறைய கேட்டகரியிருக்குன்னு சொன்னேன். அவரு சொன்னாரு அதெல்லாம் வெட்டிவேலை, சும்மா வேலையத்தவங்க வாயிலவந்த்த எழுதிகிட்டு அப்புறம் தேர்தலுக்கு முன்னாடி பார்த்தா ஒரே திமுக எதிர்ப்புஅலை அதுவேற அவருக்கு கோவம் வந்துருச்சு. யாருமே ஜெயலலிதா ஆட்சிக்கு வரணுமின்னு திமுகவை எதிர்க்கல, அவங்க குடும்பம் , அமைச்சர்கள் அப்புறம் ஸ்பெக்ட்ரம் இதெல்லாம் சேர்த்து அவங்க செஞ்ச நல்ல காரியத்தையும் கெடுத்துரிச்சு.

பலரகமா எழுதறவங்கள் இங்க பார்க்கலாம்,இந்தியப்பண்பாடு ங்கிற 12ம் வகுப்பு புஸ்தகத்தை சும்மா வாசித்தேன், அதுல ஒரு இடத்தில சூத்திரர்களைப் பத்தி இப்படிஎழுதியிருக்கு “முதல் மூன்று (பிராமணர்,சத்திரியர் மற்றும் வைசியர்) பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளை செய்தல்,நிலத்தை உழுது பயிரிடுதல் இவர்களது பணிகளாகும்.தமக்கு இடப்பட்ட பணிகளை நிறைவேற்றி உண்டுவாழும் சுகவாழ்க்கையை அனுபவித்தார்கள்” ந்னு எழுதியிருக்கு. ( அந்த அழுத்தம் மேல்சாதிக்காரங்க கொடுத்தது)அடப்பாவிகளா யாரோட பார்வையிது., கோளாரால்லாயிருக்கு நமக்கு தெரியுது. ஆனா இந்தப் பாடத்தை எழுதுனவருக்கு யார்கிட்டயும் பொல்லாப்பே இல்லை.,அத மாதிரி சிலபேரு யாருக்கும் பொல்லாப்பு இல்லாதமாதிரி எழுதுவாங்க, யப்பா, பின்னூட்டத்தை பாத்துட்டு ஒருத்தரும் திட்டல அப்படி சிலரு. ‘சந்திப்பு’ எழுதுன மறைந்த செல்வபெருமாள் மகஇக வோட அரசியல்பத்தி பின்னூட்டங்களைப் பத்தி கவலப்படாம நாகரீகமா எழுதுனாறு. தீராதபக்கங்கள், அடர்கறுப்பு, தோழர் காஸ்யபன் பக்கம், எஸ்ரா,தருமி,கசியும் மெளனம், மருதன், தமிழ்வீதி இவங்க பக்கங்களை தொடர்ந்து வாசிப்பேன். ஒவ்வொருத்தருக்கும் அவரை மாதிரி எழுதனும்னு ஒரு ஆசயிருக்கும். எனக்கும் அந்த கொஞ்சபேரு ‘முன்னத்திஏரா’ இருக்காங்க. பொதுநல நோக்கத்திற்க்காக கட்சியில வேலைபார்க்கிறது சாதாரணவேலை கிடையாது, கட்சி கொடுக்கிற ஊதியத்தை வச்சுகிட்டு குடும்பத்தை சமாளிக்கவேண்டும், அதுவும் வீட்டில் ஒத்த கொள்கையில்லாவிட்டால் ரெம்ப கஷ்டம்தான். அதேமாதிரி கிடச்ச நேரத்துல எழுதுறதும் கஷ்டமான விஷயம்தான் ,ஆனா எப்படி நேரத்தை ஒதுக்கி எழுதமுடிதுன்னு தெரியல. பெரியார் அந்தக்காலத்திலேயெ பெண் விடுதலையைப் பத்தி பேசியிருக்காரு, வாழ்ந்திருக்காரு. அதுல, ஆண்களைப் பார்த்து.. காலையில எந்திருச்சவுடனே மனைவிபோட்ட காப்பியக் குடிச்சிகிட்டே பேப்பரு படிக்கிறயே அந்த அம்மா அதக்கப்புறம் பலகாரம் பண்ணி , அவங்களும் வேலைக்கு கெளம்பி ..அந்தம்மா எப்ப பேப்பர் படிக்கிறதுண்ணு யோசிச்சயான்னு கேட்கிறாறு? இன்னைக்கும் நம்மளப் பார்த்து கேட்குறமாதிரிதான் இருக்கு. ஆனா அதுக்கு அவரே விடையும் சொல்றாறு, காலையில் ஹோட்டல்ல காபி வாங்கிட்டுவா, அப்புறம் ரெண்டுபேரும் வேலைக்கு பைக்குல போங்க போகும்போது நல்ல ஹோட்டல்ல டிபன் சாப்பிடுங்க., அப்படி சமுதாயத்தில் பொதுசமையல் அறை இருக்கனுமுன்னு யோசிச்சுயிருக்காரு. எனக்கு அது ஒரு கனவாத்தான் தெரியுது,ஆனா நடக்கும்னு நம்பிக்கையிருக்கு.முன்னாடி ஒருவாட்டி ஒரு பிளாகரை ஏதோ ஒரு கம்பெனி நோக்கியான்னு நெனக்கேன், அவரை வெளிநாட்டுக்கு அவங்க செலவுல சுற்றுலா கூட்டிகிட்டு போனாங்க. அவரு அந்த கம்பெனி செல்போன்களைப்பத்தி ஒவ்வொரு மாடல் அப்படி இப்படி சிறப்புங்கிறதை எழுதுனாராம். கம்பேனிக்கு காசில்லாம விளம்பரம்தான? நம்ம பிளாக்கை நிறையபேரு பார்த்தா ஏதாவது கம்பெனிக்காரன் உங்க பிளாக்குல ‘விளம்பரம்’ போட்டுக்குலாமா? அப்படியிருக்கான்னு தெரியல. எழுத்தாளர்கள் சிலரு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பாங்க, ஆனா பத்திரிக்கை இவங்க எழுதுனத அப்படியே போடமாட்டாங்க, அவங்க ’பார்வை’ போயிருமே. அந்த எழுத்தாளர்கள் அவங்க ஒரிஜினலா எழுதுனத அவங்க வலைப்பூவில சுதந்திரமா எழுதமுடியுது.

வாழ்க பதிவுலகம் !!!!

3 கருத்துகள்:

ஜிஎஸ்ஆர் சொன்னது…

சொல்ல வந்த விஷயங்கள் கோர்வையாய் இருந்தால் படிப்பதற்கும் நீங்கள் சொல்ல் வருவதை புரிந்துகொள்ளவும் வச்தியாய் இருக்கும் மேலும் ஒரு பாரவுக்கும் அடுத்த பாரவுக்கும் போதிய இடைவெளி கொடுத்தால் படிக்க இன்னும் எளிமையாய் இருக்கும்

hariharan சொன்னது…

வருகைக்கு நன்றி ஜிஎஸ்ஆர் அவர்களே, உங்கள் கருத்துரை மேம்படுத்த உதவுகிறது.

பெயரில்லா சொன்னது…

ஹரியின் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது எனக்கு பெருமையா இருக்கு ஏன்னா அவர் என்னைப்பாத்து ப்ளாக் எழுதறதா சொல்லியிருக்காரு. வாழ்க ஹரி!

எல்லாரும் ப்ளாக் ஆரம்பிக்கிறான்கலேன்னு நானும் ஆரம்பிச்சேன் சல்லடை வருசத்துக்கு ஒரு இடுகை வருது ஏன்னா நாய் வாய் வச்சாப்பல எல்லா காரியத்தையும் செய்ய நெனச்சு ஒண்ணுலயும் உருப்படியா செய்ய முடியாம FOCUS இல்லாம போய்க்கிட்டுருக்கு

சும்மா புகழனும்மேன்னு சொல்லலே. ஹரியின் திறமை வளர்ந்து வரும் வேகத்தை பார்க்கும் போது அவர் ஜோதியாய் மின்னுவார் என்பதில எனக்கு சந்தேகமே இல்லை

விஜயன்