ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
மன்னர்களின் புலிவேட்டை
மேல இருக்கிற படத்தை இணையத்தில் மெயில் பார்க்கிறவங்க எல்லாரும் பார்த்திருப்பாங்க, இதமாதிரி இன்னும் நிறைய படங்களை அனுப்பி இந்தியா வீரத்திலும் கலாச்சாரத்திலும் போன நூற்றாண்டிலேயெ முன்னேறியிருந்ததுன்னு சொல்லி கதை விடுறாங்க. அந்தமாதிரி பிரச்சாரத்தை ஒரு கூட்டம் பசுத்தோல் போர்த்திக்கிட்டு பண்ணிகிட்டு இருக்கு. இப்ப இந்த விவரத்தைப் பார்ப்போம் ,இந்தியாவில இப்ப லேட்டஸ்டா எடுத்த புலிகளின் எண்ணிக்கை சுமார் 1700, இதுவே 1947ல 20,000 புலிகள் இந்தியாவில இருந்திருக்கு. போன நூற்றாண்டுல 100,000க்கும் மேல. எப்படி குறைஞ்சது எல்லாம் நம்ம நாட்ட வெள்ளைக்காரனுக்கு முன்னாடி ஆண்ட 565 மஹாராஜாக்களும்,நவாபுகளும் அப்புறம் வெள்ளைக்காரங்களும் செஞ்ச வீரதீரவிளையாட்டு தான் காரணம்.
இப்ப இருக்கிற பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது, அதோட எட்டாவது மஹாராஜா யாதவீந்திர சிங். அவரோட மாளிகையில் புலி, சிறுத்தை ,மான் போன்றவற்றின் தோல்களை தரைவிரிப்பாக பயன்படுத்தியிருக்கிறான், அவ்வளவு வனவிலங்கை வீர விளையாட்டுங்கிற பேர்ல வேட்டையாடியிருக்கிறார். அப்புறம் நம்ம பக்கத்துல இருக்கிற மைசூர் மஹாராஜா வேட்டையாடிய சிறுத்தை, புலிகள், யானைகள்,காட்டெருமைகள் இவைகளை சேமித்துவைக்க அரண்மனையில் இருபது அறைகள் ஒதுக்கியிருக்கிறார். இன்னொருத்தர் பரத்பூர் மன்னர், அவரோட எட்டாவ்து வயதிலேயெ புலிவேட்டையை ஆரம்பிச்சிட்டாரு, அவரோட 35 வயசு வரைக்கும் வேட்டையாடிய புலிகளின் தோல்களை ஒன்றாக சேர்த்து அரண்மனையின் வரவேற்பறையில் ஒரு முனையிலிருந்து மற்றொருமுனை வரைக்கும் தரைவிரிப்புகளாக பயன்படுத்தும் அள்விற்கு புலிகளை வேட்டையாடியிருக்கிறாரு. கடைசியா குவாலியர் மஹாராஜா மொத்தம் 1400 புலிகளை கொன்றிருக்கிறார், அவரோட அனுபவத்தை வைத்து ‘புலி வேட்டைக்கு ஒரு வழிகாட்டி’ என்கிற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அதப்படிச்ச வெள்ளைக்காரங்களும் அவங்க பங்குக்கு மிச்சமிருந்த புலிகளை வேட்டைக்குப் போயி சாகசம் செய்தாங்க.
நாட்டுமக்கள் பசியிலயும், பஞ்சத்துலயும் இருந்ததெல்லாம் அவங்களுக்கு தெரியல, எப்ப பார்த்தாலும் கேளிக்கை தான். வேட்டைக்குப்போறது, வெளிநாட்டுக்குப் போயாவது கோல்ப் வெளையாடுறது அப்புறம் அந்தக்காலத்திலிருந்து கடைசிராஜா வரை ஒரே விசயத்துல ஒற்றுமையாக இருந்திருக்காங்க, அது தான் ‘அந்தப்புறத்தை’ மேம்படுத்துவது. இப்படி இந்தியாவில மஹாராஜாக்களும் வெள்ளைக்காரங்களும் அப்புறம் கொள்ளைக்காரங்களும் புலியை வேட்டையாடிதற்கு பிராயசித்தமாகத்தன் புலிகளை இந்தியாவின் ‘தேசிய விலங்காக’ அறிவித்திருக்கிறார்களோ??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ஹரிஹரன் அவர்களே! கி.மு 300ம் ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வனகுடிகள் தங்களுக்குப் பிடித்தமான உணவாக மயிலைப் பிடித்து உண்பார்கள். அதனால் அவர்களை மௌரியர்கள் என்றார்கள்.அவர்கள் தான் சந்திரகுப்தன்,அசொகன் போன்ற வர்களின் முன்னோடிகள். சிறுவயதில் அசொகன் மூர்க்கனாக, ஸ்திரிலொலனாக இருந்தான். ஒரு நாளைக்கு ஒரு மயிலயாவது வறுத்து சாப்பிட்டு விடுவான். பின்னாளில் மயிலை வதைப்பதை தடை செய்தான்.(Ancient History by K.C.Chowthiri)---காஸ்யபன்
கருத்துரையிடுக