ஞாயிறு, 29 மே, 2011

ஆப்பரேசன் அஜாக்ஸ்

ஒரு மக்கள்நல அரசு பன்னாட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கினால் என்ன விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதற்கு முதல் உதாரணம் தான் ஈரான். 1951ம் ஆண்டு ஈரான் நாட்டில் இயற்கை வள்ங்களையும் மக்களையும் சூறையாடிவந்த ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் தான் Anglo-Iranian Oil Company (AIOC), இது பிரிட்டிஷ் பெட்ரோலிய (BP) நிறுவனத்தின் முன்னோடி நிறுவனம். அச்சமயத்தில் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். பெட்ரோலியம் தொடர்பான அனைத்து நிறுவனக்களையும் அவற்றின் சொத்துக்களையும் தேசிய உடைமையாக்கிவிட்டார். அதே ஆண்டில் டைம் பத்திரிக்கை அவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வுசெய்தது. பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனத்தை ஈரான் தேசியமயமாக்கியதால் இங்கிலாந்து மிகவும் கோபமடைந்து இரண்டாம் உலகப்போரின் கூட்டாளியான அமெரிக்காவின் உதவியை நாடியது.

ஈரான் நாட்டை இராணுவத்தலையீடு மூலம் தன்வழிக்கு கொண்டுவருவதில் சிக்கலாக சோவியத்யூனியன் இருந்தது. அதற்கு மாற்றுவழியைக் கண்டது சிஐஏ. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்டின் பேரன் கெர்மிட் ரூஸ்வெல்ட் சிஐஏ வின் உளவாளியாக ஈரான் சென்றார். ஈரான் நாட்டில் பணத்தை வாரியிறைத்து வன்முறைகளை தூண்டினார், நிறைய ஆர்ப்பாட்டங்கள் தெருச்சண்டைகளை நிகழ்த்தினார். இதன் மூலம் மொஸாடெக் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுமாறு பார்த்துக்கொண்டார. முடிவில் மொஸாடெக் பதவியிலிருந்து தூக்கப்பட்டு சாகும்வரை வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் பிரிட்டிஷ் உளவுத்துறையான M16னும் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பெயர் ஆப்பரேசன் அஜாக்ஸ்.

வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அவமானத்தால் உலகில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இராணுவத் தலையீட்டிற்குப் பதிலாக சூழ்ச்சிகளை பயன்ப்டுத்த நினைத்தது. ஈரானில் அதற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதே உத்தியை கையாள எண்ணியது.

தகவல் : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- ஜான் பெர்க்கின்ஸ்

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே ! அந்த்aப் புத்தகத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா செய்த அழிவுயை பதிவிடுங்கள் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன் .

Unknown சொன்னது…

யூடியூப் பக்கத்தில் தமிழ் பொக்கிஷம் சேனலில் இதைப்பற்றி விரிவாக கூறி உள்ளார்