திங்கள், 27 ஆகஸ்ட், 2012

ஏசியாட்டிக் சொசைட்டி- உருவான கதை

இந்தியாவில் இருபெரும் இதிகாசங்கள் என்று மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் கூறுகிறார்கள் ஆனால் இப்போது கீதை தான் மிகவும் பிரபலமடைந்துவருகிறது. கீதையை ஒருமுறை கூட படிக்காதவர்கள் அதன் ஒரு சுலோகத்தைக் கூட முழுமையாக கேட்காதவர்கள் கூட அதன் பெருஞ்சிறப்பை பேசிவருகிறார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தவர்கள் வெளியிட்ட கீதை வாசித்துப் பார்த்தேன். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை அதை வாசிப்பதற்கே அடிப்படை ஞானம் வேண்டும் போல். அதிலுள்ள சில சுலோகங்கள் டிவியில் மகாபாரதம் போடும்போது சில நிமிடங்களுக்கு வசனம் வரும் அது தான் ஞாபகத்தில் இருக்கிறது. யதா யதா தர்மஸ்ய.... இதை கேட்டால் சேகுவேராவின் வரிகளில் உலகில் எந்த மூலையில் அநியாயத்தைப் பார்த்து நீ கோபம் கொண்டால் என்னுடைய தோழனே என்று சொன்னமாதிரி இருக்கும். ஆனால் பகவான் கிருஷ்ணன் மோசமான கலியுகம் தோன்றுவதற்கு முன்பே த்வாபர யுகத்தின் முடிவில் மரணமடைந்து விட்டான். எப்போது தோன்றுவான் என்று தெரியவில்லை. சில ஊர்களில் பாறைகளில் இயேசுவருகிறார் என்று எழுதியது ஞாபகத்திற்கு வருகிறது, எனக்கு எல்லாம் ஒன்று தான்.பகவத்கீதை சுதந்திரப் போராட்டகாலத்தில் திலகர், அரவிந்தகோஷ்,பங்கிம் சந்திரர் போன்றோர்களுக்கு ஆதர்சமாக விளங்கியது.
ஜோசப் இடமருகு என்ற பகுத்தறிவுவாதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார், அவர் பகவத் கீதையைப் பற்றி ஆய்வு நூலை எழுதியுள்ளார். 1953ல் ‘கிறிஸ்து ஒரு மனிதன்’ என்ற நூலை எழுதியதற்காக அவரை இயேசு மதம் அவரை மதநீக்கம் செய்தது, இதைப் பார்த்த காலடி ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த சுவாமி ஆக்மானந்தர் அவருக்கு கடிதம் எழுதி தன்னை சந்திக்குமாறு கூறியிருந்தார். அவருடன் விவாதித்தபிறகு அங்குள்ள நூலகத்திலுள்ள சுவாமி விவேகானந்தர், இந்துமத பண்டிதர்கள் நூல்களை படிப்பதர்கு வாய்ப்பளித்தார். கீதையின் விளக்க உரைகள் பல்வேறு அறிஞர்கள் எழுதியா நூலகளை படித்திருக்கிறார் அதற்குப் பின்னர் தான் ஆய்வு நூலை எழுதியுள்ளார். இவருடைய மகன் தான் சணல் இடமருகு சில மதங்களுக்கு முன்பு மும்பையில் இரு தேவாலயத்தில் மேரியா? இயேசு ? தெரியவில்லை ஒரு சிலையின் கண்களிலிருந்து நீர் வந்திருக்கிறது, அதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து அதனால் சர்ச்சை? க்குள்ளானார்.ஜோசப் இடமருகு எழுதிய “ பகவத் கீதை ஓர் ஆய்வு” என்ற நூலில் ஒரு தகவல் தருகிறார். பகவத் கீதையின் புகழை இன்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகமெல்லாம் சென்று சேர்ப்பதற்கு முன்பே கீதை புகழ்பெறுவதற்கு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காரணமாக இருந்துள்ளனர் என்கிறார். 18ம் நூற்றாண்டில் உண்டான தொழிற்புரட்சியால் ஐரோப்பாவில் பல புதிய கொள்கைகள் தலைதூக்கின. அரசர்களுக்கும் மதத்திற்கு எதிராக பேசுவதில் மக்கள் திறமை காட்டினார்கள். 1789 ல் பிரான்சில் புரட்சி ஏறப்ட்டதை அடுத்து அதன் அலைகள் பிரிட்டனையும் அடைந்தன. இந்த அலைகள் வேகமாக பிரிட்டிஷ் காலனிகளில் தங்கள் ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங் அதற்காக கண்டுபிடித்த மார்க்கம் இந்தியர்களை அவர்களுடைய பழைய மதங்களின் பால் திருப்புவதேயாகும். வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு “ஏசியாட்டிக் சொசைட்டி” தொடங்கியதன் பிண்ணனி இதுதான். 1785ம் ஆண்டிலேயெ வாரண் ஹேஸ்டிங்க் வேண்டுகோளுக்கிணங்க சார்லஸ் வில்கின்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் ஆரம்பிக்கப் பட்ட போர்ட் வில்லியம் கல்லூரியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் முதலிய நூலகளின் ‘மகத்து’வத்தை வெளியே கொண்டுவர பிரிட்டிசார் முயற்சித்தபோது அதன் ஒருபக்கத்தைத்தான் நாம் பார்த்தோம். இந்தியாவுக்கு ஏற்றது இந்த மத நூல்களின் அடிப்படையில் அமைந்த பழைய நாகரீகம்தான் என்றும் , வெளிநாட்டில் உண்டாகின்ற புதிய சிந்தனைகளைவிட அது மகத்தாஅது என்றும் அவர்கள் பிரச்சாரம் காரணம், ஐரோப்பாவில் வளர்ந்துவந்த புரட்சிக்கருத்துகள், பகுத்தறிவ்ய் சிந்தனைகள் இந்தியாவில் பரவிவிடக்கூடாது என்ற எண்ணம் தான். இது ஓரளவுவரை நிறைவேறவும் செய்தது. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத சிந்தனை தோன்றுவதற்கு காரணமாக இருந்தார்கள் கடைசியில் மத அடிப்படியில் இருகூறாக பிரித்துவிட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போது ஏசியாட்டிக் சொசைட்டி மிகப்பெரிய நூலகமாக காலத்தின் பெட்டகமாக இருந்துவருகிறது என்பது நல்லசெய்தியும் உண்மையும் கூட.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தேசமென்பது மண்ணல்ல..

ஒரு தேசபக்தனா நீ?


சொல்லாதே சப்தமிட்டு அதை!

தற்புகழ்ச்சி நல்லதல்ல் ஒருபோதும்!

சாதனைகளை அமைதியய்ச் செய்!

மக்கள் முடிவுசெய்யட்டும் அதுகண்டு!எலும்பு வரை நம்து தேசத்தைச் சுரண்டி

பிணந்திண்ணிகள் உறிஞ்சிவிட்டன,

நம்பாதே அந்தப் பிசாசுகளை ஒருபோதும்!

மற்றவர்கள் மகிழ்வதுகண்டு

மகிழ்ந்திடு சோதரா நீயும்.

வாழ்க்கைப் போரில் நீ

உணர்ந்து நட

ஒற்றுமையின் பாடத்தை.ஆனந்தத்தில் செல்வந்தர் திளைக்க

நாள்முழுதும் அழும் பாவப்பட்டோர்,

ஆனந்தம் இவர்க்கு எப்படி வரும்?

ஆகவே நண்பனே! சுயநலத்தை மற,

சக மனிதர்க்கு உதவிக்கரம் நீட்டு,

தேசமென்றால் மண்ணல்ல, மக்களே!

தேசமென்றால் மண்ணல்ல, மக்களே!

மனிதர்கள், மனிதர்கள் அவர்களே தேசம்!

கரங்களோடு கரம் கோர்த்து

இணைந்து மக்கள் நடை போடட்டும்

அனைத்து நம்பிக்கைகள் நன்மைகளோடு

வாழ்ந்து,இயங்கி,நேசித்து சிரிக்கட்டும்!வேறுபடலாம் மனித நம்பிக்கைகள்

ஆனால் அதர்கு அர்த்தமென்ன.

சமூகம் முழுவதன் ஆன்மா ஓர்நாள்

எழுந்து வள்ர்ந்து எப்போதும் பிரகாசிக்கும்.

ஒரு மரத்தைப்போல ஒரு தேசமும்

அன்பினால் பூத்துக் குலுங்கட்டும்!

உழைக்கும் மக்களின் வியர்வை அலைகள்

அந்த மரத்தின் வேர்களுக்கு நீரூற்றட்டும்

செல்வத்தை அது வாரிவழங்கட்டும்!

பசுந்தளிர் இலைகளின் மறைவில்

ஒரு பறவை கீதம் பாடும்!

அதைக்கேட்டு அனைத்து இதயங்களிலும்

தேசபக்திப்பாடல் பீறிடெழும்! ---------- குரஜாடா அப்பாராவ் (தெலுங்கு) எழுதிய கவிதை

காந்திகிராம் பல்கலைக்கழகம் உருவானகதை...
கடந்த நூற்றாண்டிலேயே மதுரையில் பெரிய நிறுவனமான இருந்த இன்றைய டி.வி.எஸ். நிறுவனத்தை உருவாக்கிய டி.வி.சுந்தரம் அய்யங்காரின் மகள் செளந்திரம் இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். சிறிதுகாலத்திற்குப் பின்னர் பள்ளியில் படித்து அதன்பின் புதுதில்லி லேடி ஹார்டிஞ் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்துபடித்தார். அங்கே அவருக்கு தேசிய இயக்கத்தின் மீது மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது.அச்சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற ஹரிஜன் சேவா சங்க மாநாட்டிற்கு வந்த கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ஊழியர் ஜி.ராமச்சந்திரனுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய ஆங்கிலப் புலமையும் சேவை மனப்பான்மையும் செளந்திரத்தை ஈர்த்தது. மருத்துவப்பட்டம் பெற்றபின் செளந்திரம் சென்னைக்கு வந்து ஹரிஜன சேவா சங்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே மருத்துவராகவும் பணியாற்றி ஏழைகளுக்கு தொண்டாற்றினார். ஜி.ராமச்சந்திரனும் தமிழ்நாடு ஹரிஜனசேவா சங்கத்தின் பொறுப்பாளராக சென்னைக்கு வந்தார். செளந்திரம்- ராமச்சந்திரன் நட்பு தொடர்ந்து திருமணம் செய்வதென்று முடிவுசெய்தனர்.

ஆனால் சுந்தரம் அய்யங்காரும், அவர் குடும்பத்தினரும் இதற்குச் சம்மதிக்கவில்லை ஏனென்றால் ஜி.ராமச்சந்திரன் கேரளத்தின் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்.

எனவே, 1940ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருவரும் வார்தா காந்தி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்தியைச் சந்தித்து தங்கள் திருமணத்தை நடத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.இவ்விருவரையும் நீண்டகாலமாக நன்கறிந்த காந்திஜி, காங்கிரஸ் காரியக்குழு கூட்டம் நடைபெற்ற நவம்பர் 2ம்தேதி நாடு முழுவதுமிருந்துவந்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணத்தை எளிமையாக நடத்திவைத்தார்..இச்செய்தி அடுத்தநாள் காலையில் செய்தித்தாளில் வெளியாகி டி.விஎஸ். குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்விருவரின் முன்முயற்சியால் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் காந்தியமுறையில் துவங்கப்பட்ட ஆர்மபப்பள்ளி மற்றும் ஆரம்பசுகாதார நிலையம்தான் காலப்போக்கில் பெரும் வளர்ச்சிகண்டு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமாக இன்று விளங்கிவருகிறது. இரண்டாயிரத்திற்கு அதிகமான மாணவர்களைக்கொண்ட அந்த பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் மிகப்பெரிய கிராமியப் பல்கலைக்கழகமாகும். தேசபக்த கலப்புத்திருமணம் என்பது இதன் பின்னணியில் உள்ளது என்பது பலர் அறியாத ஒன்று.ஜி.ராமச்சந்திரன் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பல ஆண்டுகள் செயல்பட்டார். செளந்திரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

(என்.ராமகிருஷ்ணன் எழுதிய “கம்யூனிஸ்ட்களும் கலப்புத்திருமணமும்” புத்தகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்)

சனி, 18 ஆகஸ்ட், 2012

கலாச்சாரக் காவலர்கள்


 விடுமுறையில் நான் கோவையில் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் எனது நண்பன் வீட்டிற்கு வந்ததால் மதிய உணவிற்கு சிக்கன் செய்யலாம் என்று கடைத்தேருவிற்கு சென்றிருந்தேன். வழக்கமாக வாங்கும் கடையில் கோழி ஸ்டாக் இல்லை. அடுத்த கடைக்கு போகலாமென்று நடந்தேன்.  வரிசையாக சிக்கன் ஸ்டால்கள் மூடப்பட்டிருந்தன. காரணம் தெரியாமல் சாலையில் தொடர்ந்தேன். அங்கு ஒரு சிக்கன் கடை திறந்து ஆட்கள் இருந்தார்கள். அருகில் சென்றபோது அவர்கள் கடையை முடச்சொன்னார்கள் இன்று கோகுலாஷ்டமி தெரியாதா உனக்கு? என்று கடைக்காரரிடம் 'காவி' வீட்டி கட்டியவர் பைக்கிலிருந்து சவுண்ட் கொடுத்தார். நான் சென்று ஒரு கிலோ சிக்கன் என்றேன். காவி ஆசாமி என்னுடைய 'அடையாளத்தை'  நோக்கினார். நான் சிக்கன் வெட்டும் வாகை பார்த்துக்கொண்டீயிருந்தேன். மீண்டும்  ஒரு கஸ்டமர் வந்ததால் இடத்தை காலி செய்தார். கடைக்காரரரிடம் பேசியபோது புலம்பினார், புதுசு புதுசா சொல்றானுங்க இப்ப ரெண்டு கஸ்டமர் வராட்டி இன்னைக்கு பொழப்பு போயிருக்கும் என்றார். 

அரசாங்கம் காந்தி ஜெயந்தி அன்றுதான் மதுபானம் கசாப்புக் கடைகளை முடச்சொல்லியிருக்கிறது, கர்நாடக சட்டசபையில் மக்கள் பனி என்றும் பாராமல் 'நீலப்படம்' பார்த்த கலாச்சாரக்காவலர்கள் தமிழகத்திலும்  தங்கள் அஜெண்டாவை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்துக்களில் கருப்பசாமியை மசான்க்கொல்லை தெய்வங்களை வணங்குபவர்களுக்கும் கோகுலாஷ்டமிக்கும்  என்ன சம்மந்தம்? இன்னும் இந்தியாவில் வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையுல்லாம் அவர்கள் காணவில்லை. கலாச்சாரக்காவலர்கள் ஒருபக்கம் ’’ஒருமுகப்படுத்துதல்’ வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.