சனி, 14 நவம்பர், 2020

compressor

 

என்னுடைய வேலை சம்பந்தப்பட்ட பதிவு தான்., கடந்தமார்ச் மாதத்தில் shutdown சமயத்தில் chlorine gas  compressor புதிதாக மாற்றினோம்அது ஜெர்மன் தயாரிப்புPGW என்ற நிறுவன தயாரிப்பு இப்போது Siemens நிறுவனத்துடன் 

இணைக்கப்பட்டுவிட்டது . 

புதிய இயந்திரத்தை மாற்றும் போதே பழைய compressor  அந்த நிறுவனம் சரிசெய்து தரவேண்டும்அதை refurbishment என்கிறோம்பழய்ய இயந்திரத்தை அனுப்பும் முன்பு gas testing செய்து அந்தresult  ஜெர்மனுக்கு அனுப்பியபோது இயந்திரத்தின் உள்ளே குளோரின் வாயு இருப்பதால்dismantle செய்து de contaminate அதாவது கெமிக்கல் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்து பின்னர்assemble செய்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


இந்த Compressor குளோரின் வாயுவை அதிக அழுத்தமடையச் செய்ய பயன்படுகிறதுபொறியாளர்இந்த பணியை என்னிடம் ஒப்படைத்தார் .


Workshop ல் ஒரே நாளில் top casing, rotor, bearings, labyrinth எல்லாவற்றையும் dismantle செய்தாகிவிட்டதுஆனால் casingல் diffuser or diaphragm என்ற பாகத்தை நீக்கவேண்டும்நிறுவனம் ஆரம்பித்து 20 வருடகாலத்தில் பலமுறை maintenance வேலை நடந்திருக்கிறது ஆனால்ஒருமுறைகூட அந்த பாகத்தை dismantle செய்யப்படவில்லை பல ஆண்டுகளுக்கு முன்புமுயற்சித்தபோது dismantle செய்யமுடியவில்லை அப்படியே விடப்பட்டது

இந்த முறை கண்டிப்பாக dismantle செய்யப்படவேண்டும் ஏனென்றால் அது ஜெர்மனுக்கு சுத்தம்செய்துதான் அனுப்பவேண்டும்அதற்கான special tools  நாங்களே design செய்து fabrication செய்தோம். Special tool fix செய்வதற்கு drill and tap செய்தோம்அதற்கு portable magnetic stand drilling machine பயன்படுத்தினோம் , dismantle செய்யவேண்டிய diaphragm cast iron material கொண்டு உருவாக்கப்பட்டது. Cast iron என்பது brittle தன்மை கொண்டதுஅதிர்வை தாங்கும் சக்திஉண்டு , ductile குணம் கிடையாதுசம்மட்டி கொண்டு அடித்தால் bend ஆகாது உடைந்துவிடும்ஆனால் drill செய்வது எளிது


Special tool  stud bolt கொண்டு பொருத்தி அதற்காக 50 டன் எடை தூக்கும் இரண்டு ஹைடராலிக்ஜாக்கிகள் வைத்தோம். Hydraulic pump கொண்டு jack lifting செய்தோம் 500 bar pressure ஏற்றினாலும் ஒரு அசைவும் இல்லை

எனவே casing heat செய்தால் சிறிது expansion கிடைக்கும் அப்போது diaphragm release ஆகிவிடும்இரண்டு cutting set கொண்டு heating செய்தோம் top casing ல் 4 segments bottom casingல் 4 segments remove பண்ணவேண்டும்.

ஒரு diaphragm segment எடுக்க இரண்டு நாட்களாகிவிட்டதுஒரு நம்பிக்கை துளிர்ந்ததுஇனிஇதேபோல் heating செயது jack மூலம் எடுத்துவிடலாம்ஆனால் diaphragm க்கும் casing க்கும்இடையில் acid sludge கழிவு நிறைந்திருந்ததுஇதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை ஜெர்மன்காரனுக்கு தெரிந்திருக்கவேண்டும் அதனால் தான் dismantle செய்து அனுப்பு என்கிறான்.

இரண்டு casingல் இருந்து எல்லா diaphragm களை நீக்க ஒருவாரத்திற்கும் மேலானது , இந்தவேலையின் போது முதுகுவலி வேற இரண்டு நாட்கள் நிமிர்ந்து நடக்கவே இயலவில்லைஆனால்வேலை success ! பொறியாளர் என்னை பாராட்டினார் என்னுடன் வேலை செய்த சக டீம்நண்பர்கள்களையும் நன்றாக உழைத்தார்கள்.

ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறதுபொறியாளர்டெக்னீசியன் , உதவியாளர் என கற்றுக்கொள்ள எல்லோரிடமும் ஞானம் உள்ளது.

வெள்ளி, 13 நவம்பர், 2020

கிராபைட்- அனுபவங்கள்

கிராபைட்- அனுபவங்கள்

நான் குவைத்தில் ரிபைனரியில்  வேலை செய்தபோது “ COKE" எனும் உற்பத்தி பொருளைப் பார்த்திருக்கிறேன். க்ருட் ஆயிலை சுத்திகரிப்பு செய்யும்போது பெட்ரோல், டீசல், மண்ணெண்னெய், எரிவாயு, போன்ற பொருட்களை பல்வெறு நிலைகளில் தயாரித்தபின்னர் தார் போன்ற கழிவு எஞ்சியிருக்கும், அதிலிருந்து ரோடு போட உப்யோகிக்கும் தார் செய்யலாம், இல்லையென்றால் அதை இறுக்கி ‘பொடி’ போல் செய்தால் அது ‘ PETCOKE" எனப்படும் பெட்ரொலியம் கோக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை சிறுசிறு கட்டிகளாக மாற்றி எரிபொருளாக உபயோகிக்கலாம். ஆனால் கார்பன் அதிகமாக வெளியெறுவதால் சுற்று சூழலுக்கு உகந்ததல்ல என்பதால் அதை மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள். அதை வைத்து ‘கிராபைட்’ தயாரிக்கிறார்கள்.

‘கிராபைட்’ கொண்டு பென்சில் தயாரிக்கலாம். பேட்டரிகளில் உடைத்துப்பார்த்தால் அதில் கார்பன் தண்டு இருக்கும் அதை செய்யலாம். இன்னும் அதன் தன்மை கொண்டு அதிக வெப்பநிலையை தாங்குவதால் இரும்பு உற்பத்தி செய்யப்படும் பவுண்டரிகளில் பயன்படுகிறது. கெமிக்கல் தொழிற்சாலைகளில் ஹைட்ரோகுளோரிக் அமிலங்கள் உற்பத்தி செய்யப்படும் கலன்கள் செய்ய பயன்படுகிறது.

மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும், ஒரே திறமை, பண்பு நலன்கள் எல்லொருக்கும் வாய்க்காது. அதேபொன்று பொருட்களுக்கு தனிமங்கள் அல்லது மெட்டீரியல்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பு நலன்கள் உண்டு. இரும்பு மக்களின் பயன்பாட்டில் அதிகம் உப்யொகிக்கும் உலோகம். உறுதி வாய்ந்த மனிதனை ‘இரும்பு மனிதர்’ என்று சொல்கிறோம் அந்த இரும்பு கடல்நீரில் போட்டால் துரும்பு பிடித்து ஒன்றுமே இல்லாமல் போய்விடும். கண்ணாடி உடைந்துவிடும் தன்மை கொண்டது ஆனால் எந்தவொரு அமிலத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. பிளாஸ்டிக் வெப்பத்தால் , அதிகவெயிலடித்தாலே உருகிவிடும் தன்மை கொண்டது ஆனால் சல்ப்யூரிக் ஆசிட் ஊற்றிவைத்தால் பிளாஸ்டிக் ஒன்றும் ஆகாது. இரும்பை ஆசிடில் போட்டால் கரைந்துவிடும். 

இரும்பு, அலுமினியம், டைட்டானியம், காப்பர், ப்ளாஸ்டிக், மரம், கிராபைட் என ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியான பண்புகள் உண்டு.

இங்கே ‘கிராபைட்’ அனுபவங்கள் பற்றி சொல்கிறேன். ஹைட்ரொ குளோரிக் அமிலம் என்பது நம்முடைய வயிற்றில் ஜீரணத்திற்கு, உணவுப்பொருளை எரிப்பதற்கு பயன்படும் அமிலம் ஒவ்வொரு மனிதனுடைய வயிற்றிலும் ஏன் விலங்குகள், பறவைகளின் வயிற்றிலும் கூட இருக்கலாம். அந்த அமிலத்தை நம்முடைய வயிறு அல்லது குடல் தாங்குகிறது ஆனால் உள்ளங்கையில் அதே அமிலம் பட்டால் வெந்துவிடும். அந்த அமிலத்தில் இரும்பே கரைந்துவிடும் சில நாட்களில்.  அந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நான் வேலைசெய்கிற நிறுவனத்தில் அந்த அமிலத்தை உற்பத்தி செய்கிறார்கள், எப்படியென்றால் ஹைட்ரஜன் மற்றும் குளோரின் வாயுவை எரிக்கும்போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் கிடைக்கிறது. ஹைட்ரஜன் என்பது எரியும் தன்மைகொண்டது ‘எரிபொருள்’ ஆனால் அரிக்கும் தன்மை கிடையாது. குளோரின் என்பது நச்சுவாயு, அந்த குளோரினைக் கொண்டு நீரை சுத்தம்செய்கிறார்கள், எங்கேயென்றால் நீச்சல்குளத்தில்  தேங்கிநிற்கும் நீரில் பலநூறு பேர் குளிக்கிறார்கள் அப்படியெ தேங்கிய நீரில் ஒரு மாதம் கழித்து குளித்தால் சொறி சிரங்கு வந்துவிடும், அதனால் அந்த நீரில் குளோரின் சிறிது கலக்கிறார்கள். நீர் சுத்தமாகிறது. குளோரின் வாயு உப்பை ‘ Electrolyzer' மூலம் தயாரிக்கிறார்கள். அந்த குளோரின் வாயுவை ஒரு breath செய்தால் மூச்சு நின்றுவிடும் அவ்வளவு கொடியவாயு. அந்தவாயுவை கலன்களில் சேமித்துவைக்கக் கூடாது என சிலநாடுகளில் பாதுகாப்புவிதிகள் இருக்கின்றன. அந்தவாயுவை ‘Ethylene' உடன் கலந்து EDC-VCM எனப்படும் PVC தயாரிப்புக்கான மூலப்பொருளை உற்பத்தி செய்கிறார்கள்.
ஆக இந்த ஹைட்ரோகுளோரிக் அமில தயரிப்பில் இரும்பை கலனாக பயன்படுத்தினால் சிலநாட்களில் கலன் ஓட்டை விழுந்துவிடும் அதனால் பாதுகாப்பானதுஅல்ல. டைட்டானியம் என்பது விலை அதிகம் அதுவும் ஏற்றதல்ல.. Hastalloy எனப்படும் உலோகம் இந்த அமிலத்தை தாங்கும் ஆனால் அதன் விலை மிக அதிகம், ஆனாலும் அந்த உலோகத்தை கலன்களாக பயன்படுத்தமுடியாது. ப்ளாஸ்டிக் அமிலத்தை தாங்கும் ஆனால் வெப்பத்தை தாங்காது. அமிலத்தையும், வெப்பத்தையும் தாங்கி நிற்பது இந்த ‘கிராபைட்’ என்படும் உலோகம்? தான்.
இந்த ‘கிராபைட்’ கலன்களை கையாளும் போது மிகவும் கவன்ம் தேவை, இரும்பை கையாளுவது போன்று கையாண்டால் சுக்குநூறாகிவிடும். கடந்த இரண்டுமாதமாக ‘கிராபைட்’ கலன்களில் வேலைசெய்து மிகவும் அலுத்துவிட்டது, ஆனாலும் ஒரு திறமை வள்ர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.