மதச்சார்பின்மையின் தேவை..
உலகப்போர்களில் கொல்லப்பட்ட மனிதர்களைவிட மதமோதல்களில் கொல்லப்பட்ட
மனிதர்களின் எண்ணிக்கை அதிகம். மதம், மொழி, இனம் காரணமாக மக்கள் கொல்லப்படுகிறார்கள்,
இதில் அரசியல் அதிகாரம் சம்பந்தப்படுள்ளதால் இது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தெற்காசியாவை
எடுத்துக்கொள்வோம், சார்க் நாடுகளில் இந்தியாவைத்தவிற எல்லா நாடுகளும் மத அடிப்படையிலான
ஆட்சி செல்வாக்கில் இருகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை `இந்துத்துவா` சக்திகளால்
செயலிலந்துவருகிறது. இன்னும் தேசத்தை முழுமையான `இந்து நாடாக` மாற்றவில்லையென்றாலும்
அதற்க்கான கருத்தாக்கத்தில் நடுத்தரவர்க்க இந்துக்களை தன்பக்கத்தில் ஈர்த்துள்ளது.
தற்பொது ஆசியாவில்தான் அதிகமான மக்கள் மதமோதல்களால் கொல்லப்பட்டுவருகிறார்கள்.
ஒரு தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் அந்த தேசத்தை அந்த மதத்தின் தேசமாக மாற்றிவருகிறார்கள்.
இந்தியாவைச் சுற்றிலும் எல்லா நாடுகளும் ஏதோ மதம் சார்ந்த அரசுகளாகவே இருக்கிறது. பாகிஸ்தானில்
ஷரியத் சட்டம் நடைமுறையிலுள்ளது. அங்கே சிறுபான்மை இந்துக்கள், கிரிஸ்தவர்கள் இரண்டாம்தர
குடிமகன்களாக நடத்தப்படுகிறார்கள். இதே காரணத்தை வைத்து இந்தியாவில் `இந்துத்துவா`
சக்திகள் இங்குள்ள முஸ்லீம்களை இரண்டாம்தர குடிமகன்களாக நடத்தவெண்டும், இந்தியாவை
`இந்து ராஷ்டிரமாக` மாற்றவெண்டும் என அரசியல் செய்கிறார்கள். அதில் பெருவாரியான நடுத்தரவர்க்க
இந்துக்களை தன்பக்கத்தில் ஈர்த்துள்ளார்கள் என்பதே மோடியின் வெற்றி. பாகிஸ்தானில் சிறுபான்மை
மக்களுக்கெதிராக மதநிந்தனை வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன. இன்னும் மதவெறி தலைக்கேறி
சன்னிபிரிவு அடிப்படைவாதிகள் ஷியாபிரிவு மக்களை கொன்றுவருகிறார்கள்.
வங்கதேசம் பெயருக்கு மதச்சார்பற்ற நாடு, அந்த நாடே மொழி அடிப்படையில்
தோன்றியிருந்தாலும் 1980களில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு முஸ்லீம்களுக்கு முன்னிரிமை
அளிக்கப்பட்டு இந்துக்களை கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்குகிறார்கள். அங்கேயும் மத அடிப்படைவாதிகள்
முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற அரசியல் செய்துவருகிறார்கள். சிறுபான்மை இந்துக்கள்
தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் எங்கோ
நடக்கும் ஒரு மதவன்முறை அடுத்த தேசத்தின் சிறுபான்மை மக்களை பாதிக்கிறது. வங்கதேசத்திலும்
பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதாக இந்தியாவில் `இந்துத்துவா` சக்திகள்
முஸ்லீம்களுக்கெதிராக மதவெறியை தூண்டுவதும், அதே மதவெறியை பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும்
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறுபான்மை இந்துக்களுக்கெதிராக தூண்டுவதும் நடந்தேறிவருகிறது.
இலங்கையில் அரசியல் மோதல் மொழி அடிப்படையில் நடந்தேறியது, அங்கேயும்
சிங்கள பெளத்த பேரினவாத அடிப்படைவாதம் தமிழ் மக்களையும் கிழக்குப்பகுதி முஸ்லீம்களின்
மீதும் வன்முறை ஏவுகிறது. சமீபத்தில் பர்மாவில் ரோஹிங்கா முஸ்லிம்கள் மீது இன அழிப்பு
நடந்தேறிவருவதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த சிலவருடங்களாகவே பெளத்த மத அடிப்படைவாதிகள்
சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிராக வன்முறை ஏவிவிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்காசிய
நாடுகளில் தஞ்சம்தெடி புறப்பட்டு கடலில் தத்தளித்து நிறைய மக்கள் உயிரிழந்ததாக செய்திகள்
நெஞ்சை உலுக்குகின்றன. கடலில் தத்தளித்த மக்களை இந்தோனேசியா ஏற்றுக்கொண்டதோடு பிரச்சனை
ஓயவில்லை. பர்மாவின் ஜனநாயகத்திற்காக போராடிய ஆங் சான் சூகி பெள்த்த மத வன்முறைக் கண்டித்து
அறிவிக்கை விட்டதாக செய்திகளே இல்லை. இதற்கிடையே இந்தோனேஷியாவின் ஜிகாதி இயக்கத்தலைவர் அபுபக்கர்
பஷீர் மியான்மர் புத்தவாதிகளுக்கு எதிராக புனித யுத்தம் நிகழ்த்தப்போவதாக அறைகூவல்
விடுத்திருக்கிறார்.
மத்தியகிழக்கில்
போரில்லாத குண்டுவெடிக்காத நாளே கிடையாது, எங்காவது தினமும் போரால் மனிதவெடிகுண்டுகளால்
கொல்லப்பட்டுவருகிறார்கள். 2003ல் ஈராக்கில் தொடக்கிவைத்த போர் இன்னும் ஓயவில்லை, ஆதி
நாகரீகவளர்ச்சியோடு தொடர்புடைய பாக்தாத் இன்று சின்னாபின்னமாகி யிருக்கிறது. சன்னி-ஷியா
மோதல், குர்து இனமோதல், இப்போது ஐ எஸ் படைகள் ஷியா பிரிவு மக்களை கொன்றுவருகிறார்கள்.
லிபியாவில் கடாபியை கொன்றுவிட்ட ஏகாதிபத்தியம் அங்கே எண்ணையை சூறையாடமுடியாமல் செய்வதிறியா
திகைக்கிறது. அம்மண்ணில் வாழ்ந்த மக்கள் போரினால் அவதிப்பட்டு மத்தியதரைக்கடலைத் தாண்டி
ஐரொப்பாவிற்குச் சென்றால் கொஞ்சம் நிம்மதி கிடைக்குமென்று கடலில் ஜலசமாதியாகிறார்கள்.
சிரியா அமைதியாகத்தான்
இருந்தது, இந்தப்பகுதியிலேயே மதச்சார்பற்ற தன்மையோடு விளங்கியது. லிபியாவிற்கு அடுத்து
அங்கெ ஆயுதமழை.. ஆயுத வியாபாரிகளுக்கு நல்லகாலம். கூலிப்படையினர் தங்கள் தோள்களில்
சர்வசாதாரணமாக ஏ.கே.47 துப்பாக்கிகளையும் யூனிபார்ம் இல்லாமல் தெருக்களில் திரிகிறார்கள்.
குண்டு துளைக்காத சுவர்களே சிரியாவில் இல்லை, அந்தப்போரில் ஐ.எஸ் இணைந்துவிட்டது. தாய்தந்தையுடன்
மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறுவர்கள், குழந்தைகள் எல்லாம் முகாம்களில் அடுத்தவெளை சோறுகிடைக்குமா
என அலைந்துகொண்டிருபதை செய்திகளில் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. வளைகுடா செய்தித்தாளில்
5 வயதுமதிக்கத்தக்க சிறுவன் கையில் இயந்திரத்துப்பாக்கி!!. பொம்மையாகக்கூட குழந்தைகள்
கையில் ஆயுதங்கள் கூடாது என நினைக்கும்பொது இப்படியான சிரியாவின் குழந்தைகள் வாழ்க்கை.
ஒரு மாதம்கூட
ஆகவில்லை இன்னொரு போர், ஏமன் கிளர்ச்சியாளர்களுகெதிராக சவுதியும் அமெரிக்க ராணுவமும் ஹெதி போராளிகளை
ஒடுக்கிறார்கள். சாலைகள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கின் போர்களில்
ஆயுதவியாபாரமும் எண்ணெய் அரசியலும் இருப்பது கண்கூடு.
இந்தியா
மற்ற தெற்காசிய நாடுகளைப் போலல்லாது இத்தனை கோடி மக்களைக்கொண்டு இதுநாள் அமைதியாக இருந்ததற்கு
காரணம் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சாசனச்சட்டம்தான்.. மதத்தை தேசத்தின் மதமாக
மாற்றிய நாடுகளின் வரலாறுகளைப் பரீசிலித்தால் இந்தியா `இந்து ராஷ்ட்டிரா` வாக மாறவெண்டுமா?
சமயசார்பற்ற நாடாக நீடிக்கவெண்டுமா என முடிவுசெய்யவெண்டும். சாதியை வைத்து அரசியல்
செய்வதை சகிக்கமுடிய்வைல்லை என்று கூறும் பிரதமர் மோடி பெரும்பான்மை மத அடிப்படிவாதத்தை
வளர்த்து ஆட்சியைப்பிடித்ததை மக்கள் பார்த்துவருகிறார்கள்