புதன், 25 ஏப்ரல், 2012

வீட்டுக்கு ஒரு நூலகம்


வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்
புத்தகங்கள் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் - ஜெயகாந்தன்


முன்னெல்லாம் இப்படி உலகப்புத்தக தினத்தை கொண்டாடினார்களா என்பது தெரியவில்லை, தமிழ்நாட்டில் வாசிப்பை ஒரு இயக்கமாக நடத்திவருகிறார்கள் என்பது ஆரோக்கியமான சூழல். புத்தகங்களைக் கண்டால் காததூரம் ஓடும் அளவுக்கு நமது கல்விமுறை அமைந்துவிட்டது. ௨௦ கிலோ எடையுள்ள மாணவன் அல்லது சிறுவர் சிறுமிகள் அதே எடையுள்ள புத்தகங்களை பள்ளிகளுக்கு சுமக்கிறார்கள். வீட்டுக்கும் வந்து அதே புத்தகங்கள் வீட்டுப்பாடம் என்ற பெயரில் துரத்துகிறது. எல்கேஜி யிலிருந்து டியூசன் ஆரம்பமாகிறது என்றால் எந்த அளவிற்கு கல்வி வர்த்தகமாகிப் போனது. சிறுவர்கள் எப்படா இந்த பள்ளிக்கூடத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று ஏங்க ஆரம்பிக்கிறார்கள். பெற்றோர்கள் ஏதோ பந்தயத்திற்கு அனுப்புவது போல குழந்தைகளை தயார் செய்கிறோம். பாடப்புத்தகத்தைத் தவிற வேறெந்த புத்தகத்தையும் பார்த்திருத மாணவ /மாணவிகள் வளர்கிறார்கள். புத்தகம் என்றாலே சிறுவயதிலேயே வெறுப்பாகிவிடுகிறது. புத்தகம் வாசிப்பதற்கும் கல்விமுறைக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த முறை மாற்றப்படவேண்டுமானால் கல்வியில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும், அதற்கு ஒரு படியாக தமிழகத்தில் `சமச்சீர்கல்வி`யை எப்படி ஒழிப்பது என்று பார்க்கிறார்கள் கல்விவர்த்தகர்களும் அவர்களுக்கு துணைபோகும் அரசும்.

ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் சிங்கப்பூர் அனுபவத்தை பகிர்ந்தார். அங்கே அரசாங்கம் “வாசியுங்கள் சிங்கப்பூர்” என்ற இயக்கம் நடத்தி உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் எழுதுகிறவர்களை அழைத்து இவர்களெல்லாம் படைப்பாளிகள் இவர்களை வாசியுங்கள் என்று கோடிக்கணக்கில் புத்தகங்களை வாங்கி நூலகத்திற்கு மக்களை செல்லுங்கள் என்று அரசாங்கமே செய்கிறது. இந்தியாவில் சமீபத்தில் பார்த்தோம், மேற்குவங்கத்தில் நூலகங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கும், சில நாளிதழ்களை வாங்குவதற்கும் தடை செய்த மம்தாபானர்ஜி கம்யூனிசத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று உலகம் கொண்டாடுகிற மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற மேதைகளின் சிந்தனைகளை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கினார். வாசியுங்கள் விருப்பமுள்ளதை எதைவேண்டுமானாலும் என்பது சுதந்திரம். இதைவாசிக்காதே என்பது பாசிசம். அவரவர் விருப்பமுள்ளதை அவரவர் வாசிக்கட்டும். தமிழகத்தில் இடதுசாரிகள் நடத்துகிற புத்தகத்திருவிழாவில் ஜோதிடம், மதம் பற்றிய புத்தகங்கள் விற்காமல் இருக்கிறார்களா? ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் இருக்கும். மதம் என்பதும் ஒரு புத்தகம் தானே, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான்,இந்துக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல் எத்தனையோ நூல்கள் எல்லாமே புத்தகங்கள் தான். இன்று உலகத்தை வழிநடத்துவது பொருளாதாரம் என்றால் அதுவும் புத்தகம் தான். ஆடம்ஸ்மித் எழுதிய welath of nation அல்லது கார்ல்மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய Das capital அல்லது இரண்டையும் கலந்து அமல்படுத்துகிற நாடுகளைப் பார்க்கின்றோம்.

ஜான்பெர்க்கின்ஸ் எழுதிய Confessions of an Economic Hit Man பற்றி ஒரு இந்தோனேசிய சகஊழியரிடம் பேசினேன், அவர் இந்தோனேசியாவைப் பற்றி ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதிய்ருக்கிறார். அது உண்மைதானா என அவரிடம் கேட்டேன். ஆம் இன்றும் எங்கள் நாட்டில் துரப்பணம் செய்யப்படும் கச்சா எண்ணெய் பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டுவருகிறது என்றார். இதைக் கேட்ட மற்றொருவர் தயவுசெய்து இதைப்பற்றி பேசாதீர்கள் என் ரத்தம் கொதிக்கிறது என்றார். இந்த உண்மைகளை தவிர்த்துவிட்டு ஆன்மிகம் நோக்கி செல்லவும்,வெறும் பொழுதுபோக்கு சாதனங்களை நாடவும் நாம் சென்றுவிடலாம். அதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அறியாமை நம்மை அமைதியாக இருக்கச்செய்யும்,அறிவுபெற்று சிந்திப்பவர்கள் கவலைப்படுகிறார்கள்.அந்த அறிவை புத்தகங்கள் தான் தருகின்றன.

உலகப்புத்தக தினத்திற்காக எழுதவேண்டியதை முழுசா எழுதமுடியல..

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தீக்கதிர் வாசியுங்கள்

சுதந்திரபோராட்ட காலத்தில் பத்திரிக்கை வாசிப்பது கூட அரசியல் தான். இப்பொதும் அப்படித்தான் நாம் எந்தப் பத்திரிக்கையை வாசிக்கிறோமோ அந்த கருத்துக்கள் நம்மை உருவாக்குகின்றன. வெகுஜன பத்திரிக்கைகளில் நடுநிலை என்று எந்தப் பத்திரிக்கையும் இல்லை அவர்கள் கட்சி சார்பற்றவர்களாக இருக்கலாம் ஆனால் வர்க்க சார்பு இல்லாமல் எந்த பத்திரிக்கையும் இல்லை. அப்படி இடதுசாரிக் கட்சிகளின் பத்திரிக்கைகள்தான் பாட்டாளிவர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கின்றன. தமிழகத்தில் ‘தீக்கதிர்’ நாளிதழ் பாட்டாளி மக்களின் குரலாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு சொந்தமாக நாளிதழ் கிடையாது அந்த தேவையை மற்ற தளத்திலுள்ள பத்திரிக்கைகள் பூர்த்திசெய்கின்றன. தமிழகத்தில் திமுக நடத்தி வருகிற ‘முரசொலி’ யை வாசித்தால் கலைஞர் உரைகள் மட்டும் தான். அதையும் கழக கண்மனிகள் வாசிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இத்தனை பெரிய கட்சியின் நாளிதழுக்கு அதன் விற்பனை, சந்தாதாரகள் தீக்கதிரை விட குறைவு தான். அவர்கள் நாளிதழ், வார இதழ் நடத்துவதற்கு, தொலைக்காட்சி நடத்துவதற்கு பொருளாதார ரீதியில் எந்தப் பிரச்ச்னையும் இல்லை. 2ஜி அலைக்கற்றை தொடர்பாக சலுகை அனுபவித்தவர்கள் கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.இவர்களுடைய அரசியல் இப்படி.

சமீபத்தில் மேற்குவங்கத்தில் நூலகத்திற்கு வாங்கப்படும் பத்திரிக்கைகளில் சிலவற்றை தடைசெய்திருக்கிறார்கள், அங்கெ வங்கமொழியில் வெளிவருகிற கட்சியின் ‘கணசக்தி’ நாளேட்டை நூலத்தில் வாங்கக்கூடாது என்பதற்கு வேறுசில பத்திரிக்கைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். யாரெல்லாம் ஆட்சியை விமர்சிக்கிறார்களோ அந்தப் பத்திரிக்கைகளுக்கு தடை. இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் பத்திரிக்கைகளின் விற்பனை, வாசிக்கும் பழக்கம் அதிகம். ‘கணசக்தி’ நாளிதழ் அங்கே ஒவ்வொரு தெருவின் முனையிலும் தட்டிபோர்டில் ஒட்டப்பட்டிருக்கும். பத்திரிக்கை வாங்கமுடியாதவர்கள் அதைப் படிப்பார்கள். 1999ம் ஆண்டில் நான் மேற்குவங்கத்தில் கொஞ்சகாலம் பணியாற்றினேன். வங்கமொழியில் வெளியாகும் தினசரிகள் 5க்கும் குறையாது, அதேபோல் ஆங்கில நாளிதழ்களும் சுமார் 5நாளிதழ்கள் the statasman, the telegrapgh, the asian age, hindustan times, The Hindu எனவெளியாகின்றன. ஹிந்தியிலும் 4 தினசரிகள் வெளியாகின்றன. அவையெல்லாம் ஆளும் இடதுமுண்ணனிக்கு எதிரான பிரச்சாரம் செய்துகொண்டிருந்தன. அவற்றை கட்சியின் நாளேடான ‘கணசக்தி’ முறியடித்தது. கடந்த தேர்தலில் இடதுமுண்ணனியை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்த்தன் முக்கிய காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் இடதுசாரி எதிர்ப்பும் ஒரு பிரதான காரணம்.மலையாளத்தில் கட்சியின் நாளேடாக ‘தேசாபிமானி’ , தெலுங்கில் ‘பிரஜாசக்தி’ வரிசையில் நான்காவதாக தமிழில் ‘தீக்கதிர்’ நாளிதழ் வகிக்கிறது. இதை வாசிப்போர் பாட்டாளிகள் மட்டுமெ, மற்ற வெகுஜன நளிதழ்கள் விளம்பரவருமானத்தில் பத்திரிக்கை நடத்திவருகிற வேளையில் ‘தீக்கதிர்’ நாளிதழ் அதன் சந்தாதாரர்களை மட்டுமே நம்பி செயல்படுகிறது. ஆண்டு தோறும் தீக்கதிரின் வளர்ச்சிக்காக மக்களிடம் வீதிவீதியாக நிதிவசூல் செய்யப்படுகிறது அதன் விற்பனையும் அதிகரித்துவருகிறது.

 நான் சென்னையில் இருந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியைப்பற்றி அறியப்பெற்ற பின்புதான் தீக்கதிர் நாளிதழ் பற்றி கேள்விப்பட்டேன். தினசரிகள் விற்கிற கடைகளில் கிடைக்கவில்லை. முதலில் எப்படி பத்திரிக்கைவாங்குவது என்று தெரியாமல் பத்திரிக்கை அலுவலத்திற்கு சந்தா கட்டி தபாலில் வரவழைத்து வாசித்தென். பின்னர் கட்சியின் பகுதிசெயலாளரே அதை சந்தாதாரகளின் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தார். அதில் வருகிற செய்திகள் /கட்டுரைகள் விழிப்புணர்வு ஏ்ற்படுத்தின. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, சினிமாமோகத்தை பரப்பிவருகிற வெகுஜன நாளிதழ்களில் அப்போது தினமணியில் மட்டுமெ த்லையங்கம், கட்டுரை என்பது வெளிவரும். உலகமயம், தனியார்மயம், தாராளமயத்திற்கெதிராக இப்போது வணிகர்கள், சிறுதொழில் செய்வோர், விவசாயிகள், இன்றைக்கு போராடிவருகிறார்கள். தீக்கதிர் மட்டுமெ உலகமயத்தின் தீமைகளை மக்களிடம் கொண்டுசென்றது. விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற மானியங்களால் நாடு பொருளாதார சிக்கல்களை சந்திப்பதாக அரசு சொவதை அப்படியே வாந்தியெடுத்த ஊடகங்கள் மக்களை நம்பவைத்தது. பெட்ரோல், டீசல் எரிபொருளுகளின் விலை ஏன் உயர்த்தப்படுகிறது இப்போது இணையத்தில் விவாதித்துக்கொண்டு ‘வரிகள்’ மூலகாரணம் என்பதை பத்தாண்டுகளுக்கு முன்பே கட்சியின் நாளேட்டில் வாசித்திருக்கிறேன். கட்சிப்பத்திரிக்கை என்றால் எல்லாம் ஒருபக்க நியாயம் மட்டுமெ எழுதுவார்கள் என்றே பொதுமக்கள் வாசிப்பதை தவிற்க்கிறார்கள். நாட்டின் கல்வி, பொருளாதாரம், விலைவாசி, வரிவிதிப்புமுறை கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை கட்டுரைகள் வாயிலாக அறியமுடிகிறது. பன்னாட்டு மூலதனம் மூலமாக நாடு முன்னேறுகிறது என்ற அரசின் பொய்கள் மற்ற பத்திரிக்கைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற மின்சாரக்கட்டண சலுகையின் காரணமாக தமிழக்த்தின் மின்வாரியம் நஷ்டப்படுகிறது என்ற தகவல் நம்மிடம் வந்துசேரவில்லை. உலகமயக்கொள்கையால் ஊழலின் அளவு அதிகரிக்கும் என்று எச்சரித்தது ‘தீக்கதிர்’ அதை இன்றைக்கு 2ஜி அலைக்கற்றை, சுரங்க ஊழல் போன்றவற்றில் காண்கிறோம். பெருநிறுவனக்கள் செய்கிர வரிஏய்ப்பு ஒருபக்கம், அதை தள்ளுபடி செய்த மத்திய அரசாங்கம் கடந்த ஆறுஆண்டுகாலத்தில் 25 இலட்சம் கோடிகள் வரிவகைகளில் பெரிய முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்ததன்மூலம் நாடு இழந்திருக்கிறது. மறுபக்கம் மானியக்குறைப்பு என்ற பெயரில் விலைவாசி சாதாரண மக்களை நெருக்குகிறது.

 மக்களுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க மறுக்கிற பத்திரிக்கைகள் வர்க்கநலனோடு இயங்குகிறார்கள் என்பது தெளிவு. இதை எதிர்க்கவேண்டுமானால் மாற்று ஊடகம் அவசியம் அந்த தேவையை ‘தீக்கதிர்’ செய்துவருகிறது. இணையத்திலும் தீக்கதிர் நாளிதழ் வெளியாவதால் வெளிமாநிலத்தில் ,வெளிநாட்டில் பணிசெய்கிறவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இன்றைக்கு தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடுகிற நாளிதழ்கள் இந்திய சுதந்திரப்போரில் கறுப்பு தினமான “ஜாலியன் வாலாபாக்” படுகொலை நாள் இன்று என்று எந்த நாளிதழும் சொல்லவில்லை. எனவே வாசியுங்கள் தீக்கதிர்.