திங்கள், 11 ஏப்ரல், 2011
GROWTH ! WHERE IS JOB?
மாண்டெக்சிங் அலுவாலியாவிற்கும் திமுகவிற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, எப்படின்னா டெல்லியில் எந்த ஆட்சி அமைந்தாலும் இவங்க பதவியில் இருப்பாங்க. முதல்ல சொன்னவரை வேலைக்கு வெச்சிருக்கணும் வெள்ளை மாளிகை சொன்னதா விக்கிலீக்ஸ் சொல்லுது, அப்படிப்பட்டவர் தலைமையில் திட்டக்கமிஷன் இருந்தா நாட்டோட பொருளாதாரம் இப்படி Jobless growth ல தான் இருக்கும்.
நாட்டோட பொருளாதாரம் 8 சதம் உயர்வு, 10 சதவீதத்தை தொட்டுவிடுவோம் சொல்றாங்க ஆன பத்துவருஷமா வேலைவாய்ப்பை அரசும் உருவாக்கவில்லை தனியார் நிறுவனக்களும் உருவாக்கவில்லை. Organised sector என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் ஊழியர்கள் 1999ம் ஆண்டிலிருந்து 2008வரை சுமார் 6 இலட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கிறதா ஆய்வறிக்கை சொல்லுது. 2001 மக்கள் தொகையைவிட இப்போதுள்ள மக்கள் தொகை 18.14 கோடி உயர்ந்திருக்குது, ஆன வேலைவாய்ப்பை அரசு உருவாக்குவதற்குப் பதிலாக காலியான பணியிடத்தை கூட நிரப்பலை. 1999ம் ஆண்டில் 1.94கோடி பேர் பொதுத்துறையில் அல்லது அரசு வேலையில் இருந்தார்கள், ஒவ்வொரு வருடமாக தேய்ந்து தேய்ந்து 2008ம் ஆண்டு நிலவரப்படி 1.76 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. எங்க வேலை வாய்ப்பை உருவாக்குனாங்க தெரியல. பத்துவருட காலமாக தனியார் நிறுவனங்கள் எவ்வளவோ புதிதாக தொடங்கப்பட்டிருக்கு, ஆனா இதுவரைக்கு 1 கோடிபேருக்கு கூட வேலை கொடுக்கல.
அரசோட அறிக்கைதான் சொல்லுது...........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
ஹரிஹரன் அவர்களே! மாண்டெக் சிங் பற்றி எழுதியது சரிதன். There is a difference between growth and developement..புதிய புதிய சாலைகளைப் போடுவது Growth. பழுது பட்ட சாலைகளை செப்பனிட்டு சீர்திருத்துவது Developement. இந்தப் பாவிகள் இரண்டையும் போட்டு குழப்புவார்கள் ---காஸ்யபன்
தோழரே! திட்டக்கமிஷனிலிருந்து மாநிலங்களுக்கு நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஏனென்றால் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு Plannin Alocation Fund குறைவாக இருப்பது தெரிகிறது. அதற்கு என்ன காரணம், வெரும் அரசியல் காரணமா? அல்லது அந்த மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு அதிக வ்ருவாய் கிடைக்கிறது என்பதற்காகவா? கொஞ்சம் விளக்குங்கள்.
கருத்துரையிடுக