சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் , குடியரசுத்தலைவர் மாதிரி “நாடு மிகச்சிறந்த” தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன் அது போலியான உதட்டளவில் தெரிவிக்கிற அஞ்சலி. இல்லையென்றால் அவர் மக்களை பிரதேச ரீதியிலும், மதரீதியிலும் பிரிவினை செய்தவரை ஒரு பொறுப்பான தலைவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முன்னாள் உச்ச்நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு “நான் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமாட்டென் என்று கட்டுரை எழுதினார் அது ஹிந்து நாளிதழ் பிரசுரித்தது. அந்த கட்டுரையில் பாரதியின் “முப்பதுகோடி முகமுடையாள்” என்ற வேற்றுமையில் ஒற்றுமையை சீரழித்த தலைவர் என்றார். இந்தியத்திரு நாட்டில் ஒரு குடிமகன் எங்கே வேண்டுமானால் சென்று வேலை செய்யலாம், தொழில் செய்யலாம் ஆனால் அந்திய மாநிலத்தவரால் சொந்தமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவே அவர்களை விரட்டுவோம் என்ற பிரிவினை அரசியல் செய்தவர். அவருடைய அரசியல் எல்லாம் மக்கள் விரோத அரசியல் எமர்ஜென்சியை ஆதரித்தார், மும்பையில் தொழிற்சங்கவாதிகளுக்கெதிராக முதலாளித்துவவாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஒழித்துக்கட்டினார். பத்திரிக்கை ஆசிரியர் என்று தான் நடத்திய ‘சாம்னா’ வில் துவேசம் பரப்பினார். இப்படிப்பட்ட தலைவரின்மீது மரியாதை எப்படிவரும்.
அவருடைய இறுதி ஊர்வலம் நிகழ்ந்த நாளில் கடைகளெல்லாம் அடைத்து வீதிகளே வெறிச்சோடிக் காணப்பட்டது இது மரியாதைமிக்க தலைவர்ருக்கான அஞ்சலி செலுத்த அல்ல மாறாக தொண்டரடிப்பொடிகள் வன்முறை செய்து நாசம் விளைவிப்பார்கள் என்ற அச்சம் தான் காரணம் என்று இரண்டு பெண்கள் பேஸ்புக் ல் கமெண்ட் செய்திருந்தார்கள். அவர்களை போலீஸ் கைதுசெய்தது. அதற்கு பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மார்க்கண்டேய கட்ஜூ மஹாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதினார். அந்த பெண்களை விடுவிக்கவேண்டும், கைதுசெய்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க உரிமைகூட இல்லை, இந்த கருத்தால் பொதுமக்களுக்கு எந்த குந்தகமும் ஏற்படபோவதில்லை, பொய் இல்லை, தேசவிரோதமில்லை, ஆனாலும் போலீஸ் வன்முறையாளர்களுக்கு விசுவாசம் காட்டுகிறது.
அந்நிய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆள்வதற்கு மதரீதியாக பிளவுபடுத்திவிட்டு ஆட்சி செய்தார்கள், பால்தாக்கரே போன்ற வலதுசாரி சக்திகள் மக்களை மொழி , இன, மத ரீதியாக பிளவுபடுத்தி பெரும்பான்மையினரின் செல்வாக்கை பெற்று அதில் ஆட்சி செய்கிறார்கள். மொழியால், மதத்தால், வேறுமாநில மக்கள் என சிறுபான்மையினராக இருக்கின்ற மக்கள் எப்போதும் ஒரு அச்சத்திலேயே வாழவைத்தார். ஈழத்தை ஆதரித்தார் என்று அவரின் புகழ்பாட பெரியாரின் சீடர்களில் சிலர் புகழ்அஞ்சலி செலுத்தத்தவரவில்லை.
பால்தாக்கரேவின் மறைவால் நாடு ஆகப்பெரிய தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக