வெள்ளி, 23 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் - 2

மதம் என்பது மனிதர்களின் அந்தரங்கமானது பொதுவெளியில் , பணியிடங்கள், கல்விக்கூடங்கள் அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் எந்த கடவுளையும் வணங்கும் வழக்கத்தை நிறுவனமோ அரசோ அனுமதிக்கக்கூடாது, மனிதர்களும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். தைவானில் மக்கள் அப்படி நடந்திகொள்கிறார்கள் என்று அண்மையில் வாசித்தேன். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை மதச்சார்பற்ற இந்தியாவில் பெரும்பாலான அரசு அலுவலங்களில பெரும்பான்மை மதத்தின் கடவுளர்கள் சுவர்களில் அமர்ந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தனியார் அல்லது நிறுவனத்திலும் வெள்ளிதோறும் கடவுள் வழிபாடு நடைபெறுகிறது. சாதாரண மனிதனின் பக்தியை மதவெறியாக்குகிற வலதுசாரி அரசியல் அதை பயன்படுத்திக்கொள்கிறது.

சாமியார்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் கூட்டு என்பது இயற்கையானது, அதில் எங்கள் நிறுவனத்தின் உடமையாளரும் விதிவிலக்கல்ல.  ஐரோப்பாவில்  முதலாளித்துவம்   வளர்வதற்கு முன்பு மதகுருக்கள் (போப்) நிலப்பிரபுக்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.  சங்கராச்சாரியார்  எனக்குத் தெரிந்து ஆலைக்கு மூன்று முறை விஜயம்! செய்திருக்கிறார். அப்படி ஒருமுறை வந்திருந்தபோது எல்லோரையும் ஓரிடத்திற்கு அழைத்து அவரிடம் ஆசிர்வாதம் பெறுவதர்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அவரை சென்று வணங்கினார்கள் உடனே அவர் பிரசாதம் வழங்கினார். தொட்டால் தீட்டு என்பதை கடைபிடிக்கூடியவர். இந்த நிறுவனம் வியாபார போட்டியின் சதியால் முடக்கப்பட்டது ஆனால் சாமியார் கெட்ட ஆவி இருக்கிறதென்று சுற்றுச்சுவர் வழியே சென்று அதை விரட்டினார். மீண்டும் ஒரு முறை ஆலையில் கட்டப்பட்ட விநாயகர் ஆலய கும்பாபிசேகத்திற்கு வந்தார். சாமியார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள், அதே போல் பெரிய முதலாளிகளும் அவர்களிடம் செல்வார்கள். சில சமயங்களில் சமரசம், பதவி உயர்வு வாங்கித் தருவது போன்ற வேலைகளையெல்லாம் சாமியார்களை நாடினால் கிடைக்கும். இந்திய நாட்டின் எல்லா குடியரசுத்தலைவர்களும் விதிவிலக்காக கே..ஆர்.நாராயணன் காஞ்சிபுரம் வந்திருக்கிறார்கள். இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களும் அதில் ஒருவர். அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் சிறந்த குடியரசுத்தலைவர் எனவே அவரை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சிலர் வலைத்தளங்களில் எழுதினார்கள். ஆனால் அவர் சிறந்த மனிதர் அப்பளுக்கற்றவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவருடைய கொள்கைகள் மக்களை பிரதிபலிப்பதில்லை. உதாரணம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை வரவேற்றார், மாணவர்கள் கனவு காணவேண்டும் என்று இந்தியா முழுதும் பள்ளி மாணவர்களிடையே பேசினார் அரசுப்பள்ளியைவிட மேல்தட்டு பிள்ளைகளிடம் பேசினார், அரசாங்கப் பள்ளிகளை இவர் நினைத்திருந்தால் தரம் உயர்த்தியிருக்க முடியும் ஆனால் தமிழக் அரசாங்கப் பள்ளிகளை பார்த்தால் மற்ற இந்தியாவின் அரசுப் பள்ளிகள் இதைவிட மோசம்தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார்,என்றாலும் “கடவுள்” பதவிகள் காலியாய் கிடப்பது எதனால்? கவலைக்குரிய விசயம்.

பொது இடங்களில் பக்தியை சிலர் அதிகமாகக் காட்டுவார்கள், அவர்களை பெரிய பதவியில் இருப்பவர்களுக்குப் பிடிக்கும். இறைவழிபாட்டோடு துதிபாடுகிற வாய்ப்புகளும் கிடைக்கும். அரசாங்க மந்திரிகள் அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு அரசு அதிகாரிக்ளை பயன்படுத்திக் கொள்வார்கள் மறுப்பு ஏதும் தெரிவ்க்கமுடியாது. அப்படியே ஒரு பெரிய மேலாளர் வீட்டு திருமணம் நடைபெற்றது, எங்கள் துறை மேலாளர் எங்களை OD யில் அந்த வேலைக்கு அனுப்பினார், சிலர் அதை கவுரகமாக்அ விரும்பி ஏற்றார்கள் சிலர் வெறுப்போடு செய்தார்கள். நானும் காஞ்சி கார்த்திகேயனும் டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த பெரிய மண்டபத்தில் விழாவிற்கு வருகிறவர்களை வரவேற்று பன்னீர் தெளிப்பது, இனிப்பு வழங்குவதில் இருந்தோம். அப்போது வருகிற முகம் தெரியாத மனிதர்களிடம் பிலிப்பினோ சேல்ஸ் கேர்ள் மாதிரி செய்ற்கையாக புன்னகை செய்யவேண்டும். கார்த்தி நன்றாக காமெடி செய்வான். அதே பெரிய மேலாளர் பணி ஓய்வில் சென்றார். அவருக்கு துறைசார்ந்த பரிசுப் பொருள் வழங்கவேண்டும் என்று எங்கள் மேலாளார் வசூலித்தார். நான் ஒரு பைசா தரமுடியாது என்று கைவிரித்தேன், சுப்ரமணி என்ற பொறியாளர் தம்பி நீ மட்டும் தரமா இருந்தா அது நல்லாயிருக்காது உன்மேல மேலாளர் கோபம் கொள்வார் என்றார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபோது சிலரும் என்னோடு பணம் கொடுக்கவில்லை. தனியார் துறையில் ஊழல் இல்லையென்று பலர் நம்புகிறார்கள், நிலைமை அப்படியில்லை. வாய்ய்பு கிடைக்கும்போது முடிந்தவரை பார்க்கிறார்கள் வடிவங்கள் மாறுகின்றன. அதிகமான இயந்திரங்கள் ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியானது. அதற்கு Import duty செலுத்தவேண்டும், அரசாங்கம் ஒரு சலுகை அறிவித்தது அதாவது EPCG scheme அதன்படி இறக்குமதி செய்த இயந்திரங்களின் மதிப்பிற்கு நிங்கள் தயாரித்த பொருட்களை ஏற்றுமதிசெய்து கிடைப்பதில் பேலன்ஸ் செய்து கொள்ளலாம். இது ஒரு சலுகை.இப்படி எண்ணற்ற சலுகைகள் தொழிலபதிகளுக்கு கிடைக்கும். சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் வரிகள் சம்பந்தமாக கடந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேடுகளுக்கு தள்ளுபடி செய்த பணம் 25.7 இலட்சம் கோடி தலைசுற்றுகிறதா? 2ஜி எல்லாம் சாதாரணம்.
ttp://www.thehindu.com/opinion/columns/sainath/to-fix-bpl-nix-cpl/article3223573.ece . அதைப்பற்றியெல்லாம் பொதுமக்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது, ஆனால் விவசாயிகள் வாங்கிய கடன், ரேசனுக்கு தெண்டமாக மானியம், எரிபொருள் மானியம் எல்பிஜி மானியம் என ஏகப்பட்ட புளுகுகளை அவிழ்த்துவிடுவார்கள்,இந்த பத்திரிக்கைகள் அதற்கு தகுந்தமாதிரி எழுதுவார்கள்.

இப்படி நம் ஒருவர் நண்பர் கஸ்டம்ஸ் கிளியன்ரன்ஸ் க்காக செல்வார், வெகுநாட்கள் அவர் கம்பெனியைவிட clearing agent office அமைந்துள்ள secondlane beach தெருவில் அதிகம் இருப்பார். நானும் போர்ட் டிரஸ்ட், அந்த்  கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜெண்ட் அலுவலத்திற்கு சென்றிருக்கிறேன். அந்த ஏரியாவில் உயர்தர சைவ, அசைவ ஹோட்டல்கள் அதிகம். எங்கெல்லாம் ல்ஞ்சப்பணம் அதிகமாக புரள்கிறதோ அங்கே இப்படி செலவுசெய்ய இடங்கள் இருக்கும், என் நண்பர் ஆங்கிலம் நுனிநாக்கில் பேசுவான் அதனால அவனுக்கு ஏற்ற வேலையாக மாறியது.  ஒரு நிறுவனம் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் காணிக்கையை எப்படி கணக்கில் எழுதுவார்கள்? என்று தெரியவில்லை. miscelineous??? நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல் என்று பொதுமக்கள் நானும் தான் பேசுவோம்! ஆனால் ஏசுநாதர் எவனொருவன் தவறு செய்யவில்லையோ  அவன் இந்த வேசியின் மீது கல்லெறியலாம் என்று கொடுத்த கல்லை பத்திரமாக மேல் பாக்கெட்டில் வைத்திருக்கிறோம். சிறிய கல் பெரிய கல் என்ற வித்தியாசம் இருக்கிறது ஆனால் எறிய முடியவில்லை!!

தொழிலதிபர்கள் தங்களுக்கு வெண்டியவர்களை மத்தியில் அமைச்சர்கள் ஆக்குவார்கள், அப்படி ஒரு வாய்ப்பு ஜெவுக்கு கிடைத்து வாழ்ப்பாடியார் பெட்ரோலியத்துறை இலாகாவில் அமர்ந்தார். அவராலும் தூக்கி நிறுத்தமுடியவில்லை. இப்படி எத்தனை நாட்கள்தான் சம்பளம் என்ற வகையில் தெண்டச் செலவு செய்வது? இடையில் டெக்னீசியன்களை, பொறியாளர்களை வாடகைக்கு விடுவது அதன் மூலம் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது அது அறுந்து விழபோவதை அறிவித்தார்கள், வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்ற வாய்ப்பை சொன்னார்கள். பலர் அப்போதே நல்ல வேலைக்கு சென்றார்கள். முயற்சி செய்து கிடைக்காதவர்கள், எதிர்காலத்தை எண்ணி புலம்பியவர்கள் இரவில் தூக்கமின்றி வாடியவர்கள் என பலர் இருந்தார்கள். அந்த கத்தி விழுந்த நாள் 31-12-2001.


 

2 கருத்துகள்:

kashyapan1936@gmail.com சொன்னது…

ஹரிஹரன் அவ்ர்களே! நிறையதகவல்கள்,! நிறைய விஷ்யங்கள்! கொஞ்சம் clarity இருந்தால் நலமாக இருக்கும்!வாழ்த்துக்களூரன் ---காஸ்யபன்.

hariharan சொன்னது…

தோழர் காஷ்யபன் அவர்களே , நான் சென்னையில் ஸ்பிக் நிறுவனத்தில் 1995-2001 வரை வேலை செய்தேன் , செட்டியாரால் துவக்கப்பட்ட ஒரு திட்டம் ரிலையன்ஸ் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. போட்டியாளர் உருவாவதை அம்பானி விரும்பவில்லை. 2001ல் எங்களை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியது. மாற்று ஏற்பாடு எதுவுமில்லாமல் அதை எதிர்க்க சூழலை உருவாக்கவில்லை. வேலையில் சேரும்போது எங்களுக்கு 20 முதல 22 வயது. கிட்டத்தட்ட 100 பேர் இருந்தோம். இப்போது ஒவ்வொருவரும் ஒரு திசையில் இருக்கிறார்கள். அந்த நினைவை நான் பதிவு செய்தேன். என்னுடன் வேலைபார்த்த நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுதினேன் . அப்போது தான் இடதுசாரி இயக்கம் பற்றி அறிந்தேன் . இப்போது எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள், அதன் பின்னால் அவர்கள் சந்தித்த கஷ்டங்கள் இருக்கிறது.