இனவெறிக்கு உலகிலேயெ அதிகம் பாதிக்கப்பட்ட இனம் யூதர்கள். அதுவும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் இனவெறி அரசியல் அவர்களை சின்னாபின்னப் படுத்தியது. அதைப்பற்றி என்னற்ற இலக்கியங்கள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன. Gloomy Sunday படத்தை பார்த்தபின்பு Train of Life என்ற படத்தை பார்த்தேன். யூதர்கள் ஒட்டுமொத்த கிராமத்தை காலிசெய்துவிட்டு ஒரு ரயிலை உருவாக்கி தப்பிச்செல்வது தான் கதை.
அந்த கிராமத்தில் ஸ்லோமோ என்பவன் வெளியூர் சென்றுதிரும்புகையில் பக்கத்து கிராமத்தில் நாஜிப்படைகள் யூதகுடியிருப்புகளின் மீது நடத்திய அக்கிரமங்களை பார்த்தான். தனது கிராமத்துக்கு வந்தவுடன் மதத்தலைவரிடமும் ஊர்பெரியவர்களிடமும் விவரத்தை சொல்கிறான், ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது , நாம் தப்பித்தாகவேண்டும் என்று யோசனையில் மூழ்கியிருக்கிறார்கள். அப்போது ஸ்லோமோ ஒரு யோசனை சொல்கிறான், ஒரு ரயிலைப் பிடித்து கிராமம் முழுவதுமுள்ள மக்கள் காலிசெய்து பாலஸ்தீனம் அல்லது ரஷ்யா சென்றுவிடவேண்டும் என்கிறான்.
ரயிலை எப்படி வாங்குவது, அப்படி ரயிலில் போனால் நாஜிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்நிலையங்களுக்குத் தெரியாமல் எப்படி தப்பிப்பது என்றெல்லாம் யோசனை செய்கிறார்கள். முடிவில் அவர்களே சிலர் நாஜி ராணுவத்தினராக நடித்து யூதர்களை நாடுகடத்துவது போல ரயிலை வடிவமைக்கிறார்கள். யூதர்கள் ஐரோப்பாவெங்கும் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு கூட்டம் கூட்டமாக குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். எல்லோரிடமும் பணம் வசூலித்து பழைய ரயில்பெட்டிகளை காயலான் கடையிலிருந்து வாங்கி புதுபிக்கிறார்கள், ரயில் இஞ்சினும் அப்படித்தான். முதல் இரண்டு ரயில்பெட்டிகள் பச்சைநிறத்தில் நல்ல உள்கட்டமைப்புடன் நாஜி படைகளின் கமாடெண்ட்க்காக வும், படைவீரர்களுக்காகவும் அமைக்கிறார்கள். மற்ற பெட்டிகள் எல்லாம் யூதர்களுக்கு ஏதோ கூட்ஸ் வண்டியில் ஆளை ஏற்றுவது போல தயாரிக்கிறார்கள். நல்ல் ஜெர்மன் மொழி பேசத்தெரிந்த ஜெர்மானிய ஜாடை உள்ளவருக்கு கமாண்டெட் உடைகள், நாஜிப்படைவீரர்களைப் போல சில யூதர்களுக்கு மொழிப்பயிற்சி,ராணுவப் பயிற்சி அளிக்கிறார்கள்.
ரயில்பெட்டிகள், ரயில் இஞ்சின் கூட வாங்கியாகிவிட்டது, ரயிலை யார் ஓட்டுவது. யாரோ ஒரு யூதன் ரயிலை ஓட்டும் ஆசையில் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறான். புத்தகம்(Manual) பார்த்து ரயிலை இயக்க தீர்மானித்துவிட்டான். ஒட்டுமொத்தகிராம யூதர்களே குறிப்பிட்ட நாளன்று இரவில் இரயிலில் தப்பிச்செல்ல பயணிக்கிறார்கள். எப்படி வழியில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக