வியாழன், 29 நவம்பர், 2012

துளிர் - சிறுவர் அறிவியல் சஞ்சிகை


தமிழில் சிறுவர்களுக்காக அறிவியல் மாத இதழ் வருவதை ‘துளிர்’ இதழின் வெள்ளிவிழாவில் தான் அறிந்தேன். இன்னும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். தமிழில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன, அவைகள் பெரும்பாலும் இலக்கிய இதழ்கள் தவிற தொழிற்சங்கம், மத நிறுவனக்கள் வெளியிடுகிற பத்திரிக்கைகள் வருகின்றன, சில சிற்றிதழ்களின் ஆயுள் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் நின்றுபோனது என்று அந்த துறையில் இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். பத்திரிக்கை நடத்துவது என்பது எளிதான் காரியமல்ல அதுவும் விளம்ப்ரம் பெறாமல் இலாப நோக்கு இல்லாமல் தன்னார்வமாக சேவை போல செய்கிறார்கள். அதில் ‘துளிர்’ மாத இதழ் 25 ஆண்டுகளாக நிதி நெருக்கடிகளை சந்தித்தபோதும் மாதம் தவறாமல் மாணவர்களிடம் அறிவியல் சிந்தனைகளை கொண்டுசெல்வற்காக நெடிய பயணம் செய்திருக்கிறார்கள். அதை ஏற்று நடத்துவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். அவர்களுடைய சமூகமுன்னேற்றதிற்கான பணிக்கு  பாராட்டு என்று ஒரு வரியில் முடிக்கமுடியாது, தினமும் செய்திகளை வாசித்துவிட்டு எங்கும் ஊழல், லஞ்சம் அரசியல்வாதிகள் முதல் அதிகாரி, கடைநிலை அரசாங்க குமாஸ்தா வரை பழித்துவிட்டு தன்வேலை தானுண்டு என்பவர்கள் மத்தியில் அறிவியலை சமூகத்திர்கு கொண்டு செல்லவேண்டும், மக்கள் மூட நம்பிக்கைகளைலிருந்து விடுபடவெண்டும் என்று தங்களுடைய நேரத்தையும் வருமானத்தையும் சிந்தனையும் சமூகத்திற்கு செலவுசெய்கிறவர்களை ப் பார்க்கும்போது நாம் என்ன செய்தோம் என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது.

ஒரு நண்பர் கொடுத்த மின்னஞ்சல் மூலம் ‘துளிர்’ ன் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சியை இணையம் மூலாமக பார்த்தேன். அந்த நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் துறை (department of science govt of india) யின் இயக்குனர் முனைவர். இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அறிவியல் தேவையைக் குறித்தும் அவருடைய பால்யத்தை ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். பள்ளிப்பருவத்திலேயே அறிவியல் ஆர்வம் ஏற்பட்டு அவருடைய ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கை காரணமாக இன்றைக்கு விஞ்ஞானியாக இருக்கிறென் என்றார், இன்றைய சமூகத்தில் மத்தியதர வர்க்கம் தமத் பிள்ளைகள் விரைவில் வருமானம் ஈட்டக்கூடிய கல்வியை பெறவேண்டும் என்று தான் பார்க்கிறார்கள் அதனால் நகர்புறங்களிலிருந்து விஞ்ஞானிகள் கிடைக்கமாட்டர்கள் என்றார். 2025ம் ஆண்டில் இந்திய மக்களின் சராசரி வயது 29.5 இது இந்தியாவின் மனிதவளத்தை காட்டுகிறது, இதை வீணாக்குவதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் அரசின் கொள்கைகள் அல்லது ஆட்சியாளர்கள் கையில்தான். கி.பி.1750 உலகின் 45 சதமான பொருளாதார ப்லத்தை இந்தியாவும் சீனாவும் வைத்திருந்தது, ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி நிலைமை த்லைகீழாக மாற்றிவிட்டது, யாரிடம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் இருக்கிறதோ அவர்கள் தான் உலகை ஆள்கிறார்கள், இந்திய அரசின் அறிவிய்லதுறை 'Inspire' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் அறிவியலில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்கள், நாடு முழுதும் இருந்து சுமார் 3 லட்சம் மாணவர்கள் அந்த திட்டத்திற்க்காக ஒரு புராஜெக்ட் செய்திருக்கிறார்கள் சிறந்த பிராஜெக்ட் க்கு பரிசு உண்டு. அப்படி அனுப்பியதில் 1300 மாதிரிகள் தேர்ந்த்டுக்கப்பட்டு அதில் சுமார் 140 ப்ராஜெக்ட்கள் காப்புரிமை செய்வதற்கு அனுப்பட்டிருக்கிறதாம், எப்பேற்பட்ட திறன் நம் மாணவர்களிடம் இருக்கிறது. தேர்ந்துக்க்பபட்ட மாணவர்களில் கிராமப்புற மாணவர்களின் பங்கு அதிகம் அதிலும் பெண்களின் பங்கு மிக அதிகமாம்.  இதெல்லாம் நம்பிக்கை அளிக்கும் செய்திகளாக இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தில் உயர்கல்வி கற்ற ஒரு விஞ்ஞானியை இந்தியா தகுந்த மரியாதை கொடுத்து தக்கவைத்துக்கொள்கிறதா? என்பது கேள்விக்குறி!


விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் கிடையாது, சிற்றிதழ்கள், சில அரசியல் தத்துவார்த்த இதழ்களைத் தவிர வெகுஜன் ஊடகங்கள் என்று சொல்லபடும் எல்லா ஊடகங்களும் வாசகர்களை நம்பி தொழில் நடத்தவில்லை, பல பத்தாண்டுகளுக்கு முன்பு தினமணி யின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் சொன்னாராம், மூதாதையரின் செலவங்களை சிலர் சூதாடி அழித்தனர், சிலர் குடித்து அழித்தனர் நாங்கள் பத்திரிக்கை நடத்தி அழிக்கிறோம் என்றாராம். நிறைய சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா கட்டியவர்கள் அது அதன் ஆயுள் அற்பமாக போவதைப் பார்த்திருக்கிறார்கள். துளிர் இதழில் கேள்வி பதிலாக வந்ததை தொகுத்து சிறு நூலாக எதனாலே? எதனாலே? என்ற நூலை அறிவியல் வெளியீடு வெளியிட்டிருந்தது. என்னிடம் இருந்த அந்த நூலை இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் புரட்டிப்பார்த்தேன், அதிலிருந்த கேள்வி பதிலகள் சிறுவர்களுக்கு என்று ஒதுக்கமுடியாது, பெரும்பாலான கேள்விகளுக்கு விடை பெரியவர்களுக்கே தெரியவில்லை. அந்த இதழில் பணியாற்றி பின்பு வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய்வர்கள் பேசினார்கள். துளிர் 30000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன, பெரும்பாலும் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் இந்த ஆண்டு ஆயுள் சந்தா செலுத்தி வாங்கப்போகிறேன்,மாணவர்களுக்கு பரிசளிக்க புத்தகத்தைவிட சிறந்தது ஏதுமில்லை. மேன்மேலும் மக்களிடம் அறிவியல் சிந்தனைகளை எளிய தமிழில் கொண்டு செல்லும் துளிர் இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! பரமேஸ்வரன் M.P.என்று ஒரு அறிஞர் இருந்தார். மிகச்சிறந்த வீஞ்ஞானி மாஸ்கொவில் லுமும்பா பல்கலைகழ்கத்தில் Nucler Physics படித்து முனைவர் பட்டம் வாங்கினார். இந்தியா வந்து பார்த்த போது மூடநம்பிக்கையில் உழலும் மக்களைப்பார்த்து இவர்கள் கடைத்தேர என்ன வழி என்று யோசித்தார். கேரளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியா பூராவும் அறிவியல் இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபட்டார்.மதுரையில் அவர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு த்லைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. " தமிழ் நாட்டிலும் என்னை மாதிரிகிறுக்கன் யாராவது கிடைப்பார்களா? என்று தேடிவந்தேன்.என்றார் இந்த சமயத்தில் இந்த முன்னோடிகளை நினைவு கூறுவது அவசியம் என்று கருதுகிறேன்.---காஸ்யபன்.

Unknown சொன்னது…

ஐயா எவ்வாறு ஆண்டு சந்தா ?