வியாழன், 22 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணத்தில் சென்னை...



சென்னை எல்லோரையும் வாழவைக்கும், தினந்தோறும் தமிழகத்தின் பல திசைகளிலிருந்து ஏராளமான பேருந்துகளிலும் ரயில்களிலும் மக்கள் சென்னையை நோக்கி வேலை தேடி சென்று கொண்டெயிருக்கிறார்கள். அப்படியே அரசாங்கமும் தமிழகத்தின் பட்ஜெட் பணத்தை பாதியை சென்னைக்கு ஒதுக்குகிறது , பன்னாட்டு தொழில்களும் அங்கே நிறுவதற்குத்தான் துணிகிறார்கள். அப்படித்தான் SPC என்ற நிறுவனம் மணலிக்கு அடுத்தே அமைந்தது. எங்களை பேட்ச் வாயிலாக வேலைக்கு எடுத்தார்கள், அதுவும ஒரேஒரு பேட்ச் தான். அதற்குள்ளே சங்கு சத்தம் கேட்டுவிட்டது. மொத்தம் 96 பேர் அன்று நினைவு , அது புரொடக்சன் மற்றும் மெயிண்டனென்ஸ் என இரு பிரிவுகள். முதல் ஆறு மாதம் பயிற்சி தூத்துக்குடியில் தாய் நிறுவனமான ஸ்பிக் உரத்தொழிற்சாலையில் தொடங்கியது. அது பசுமையான நினைவுகள். அந்த நகர் எங்குமே பசுமைதான். வெளியே வந்தால் வெயிலில் கண் கூசும் அளவிற்கு உப்பளம். மூன்று மாதப்பயிற்சி வகுப்பறைகளில் நடக்கும், அங்கே பயிற்சியளிப்பவர்கள் அந்த நிறுவந்த்தில் அந்தந்த துறைகளில்பணியாற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பயிற்று மொழி ஆங்கிலம், அந்த குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்தவுடன் அப்படி ஒரு தூக்கம் வரும் சொல்கிற விசயம் புரிந்தால் தூக்கம் வராது. அங்கே தரப்படும் பயிற்சி குறிப்புகளை சுண்டல் என்போம். அதை இன்னும் பாதுகாத்துவருகிற நண்பர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் தரமான நிறுவன பயிற்சிக்கூடமாக ஸ்பிக் ட்ரெய்னிங் செண்டர் இருந்தது ஒருகாலம். இப்போது என்ன நிலையோ. வட இந்தியாவின் உரத்தொழிற்சாலையிலிருந்து பயிற்சிக்காக இங்கே வருவார்கள் அப்படிப்பட்ட வசதிகள் கொண்டது. காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாற்றம் அடையவேண்டும் இல்லையென்றால் வெற்றியடையாது. இந்திய உரத்தொழிற்சாலைகள் எல்லாம் நாப்தா என்ற மூலப்பொருளிலிருந்து இயற்கை எரிவாயுக்கு மாறினார்கள். இங்கே இயறகை எரிவாயுக்கு மாற்றப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்காத எரிவாயு ஆலைக்கு கொண்டுவர அரசாங்கமும் ஆலையும் சிரமப்பரிகாரம் செய்யவில்லை அதனால் இன்று தமிழகத்தின் sick யூனிட்களின் ஒன்றாக ஸ்பிக் உரத் தொழிற்சாலை மாறியிருக்கிறது. நாங்கள் டிரெயின்ங் எடுத்த சமயத்தில் அங்கே ஸ்பிக் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தார்கள்,  தொழிற்சங்கத்தலைவர்கள் பலரை நிர்வாகம் வீட்டு அனுப்பியது.அது செல்லாது என்று சில மாதங்களுக்கு முன்பு இறுதித்தீர்ப்பு வந்தது. எப்பேர்ப்ட்ட நீதிமன்றங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் கனகராஜ் என்ற தோழர் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் உறுப்பின்ராக இருக்கிறார்.

நாங்கள் ஆறுமாதங்கள் கழித்து PTA, PFY உற்பத்தி செய்யவிருக்கும் ஆலைக்கு வருகிறோம், வருவதற்கு முன்பே நீங்களெல்லாம் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை, எனவே கூட்டாக சேர்ந்து அறை எடுத்து தங்குங்கள் அதுவும் நிறுவந்திற்கு அருகாமையில் இருந்தால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்றார்கள். அப்படியே சில சென்னைக்காரர்கள் முன்னமே வந்து வீடுபார்த்து வைத்தார்கள். அந்த வேலையை செய்தவர்களில் இந்த செட்டியார் என்றழைக்கபடுகிற சுந்தரும் ஒருவன். வந்து இறங்கிய நாள் safetyday அதற்காக ஒரு suitcase அளித்தார்கள். ஆங்காங்கே கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்துவந்தன. இந்த 96பேரை என்னசெய்வது என்று பிரித்து விட்டார்கள். அதில் நான் ஸ்டோர்ஸ் பிரிவுக்கு சென்றேன். அங்கே  என்ன வேலை, வருகிற சாமான்களை இறக்கிவைத்து அதை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.  என்னிடம் திடீரென்று அங்கே கண்டெய்னர்கள் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள் அங்கே சென்று கவனித்துக்கொள் என்றார்கள். டிரெய்லர்களிலிருந்து இறக்கிய கண்டெய்னர்களின் உள்ளேயிருந்து பெட்டிகளை வெளியே இழுத்தார்கள் அதை ஸ்டோரேஜ் பகுதியில் வரிசைக்கிராமாக அடுக்கினார்கள். கிரேன்கள் மற்றும் பிராஜெட்க்காக ஒரு மேலாளார் இருந்தார், அவர் கிரேனுக்கு ரிக்கிங் சிக்னல் கொடுத்தார். அதாவது சைகையில் கிரேன் ஆப்ரேடடருக்கு தெரிவிக்கும் மொழி. அதை ஒரு மேலாளார் செய்யவேண்டிய அவசியமில்லை அதற்கு தனிஆட்கள் இருப்பார்கள் ஆனாலும் எனக்கு அதுவும் தெரியும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதர்கு இரு வாய்ப்பு. அப்படித்தான் ஒரு பெட்டியை கிரேன் இறக்கிக்கொண்டிருக்கும் போது நான் சிக்னல் கொடுத்தேன் அவருக்கு வந்ததே கோபம், அப்ப நீங்க கொடுங்க என்றார், சாரி தெரியாமல் செய்துட்டென் என்றேன். அவர் பெயர் சர்புதீன். காலையில் கேண்டீனில் சாப்பிட்டு வெளியே வரும்போது அங்கே சாலை ஓரத்தில் நின்று பேசுவார் கிரேன் ஆப்ரேட்டர்கள், அவருடன் வேலைசெய்யும் பொறியாளர்கள் பவ்யமாக நின்றுகொண்டிருப்பார்கள். நாம் good morning என்று கை தூக்கினால் அந்த மேலாளர்கள் தலைதான் ஆட்டுவார்கள். கீழே இருப்பவர்கள் மேலே உள்ளவர்களுக்கு வணக்கம் சொல்லவேண்டும். ஒருவேளை அவர்கள் முதலில் நம்மை பார்த்துவிட்டாலும் அவர்கள் வாயிலிருந்தோ கையோ உய்ராது அது படிநிலை வணக்கம் தெரிவிக்கும் முறை அந்த முறையை காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

சென்னை வந்தாலும் எங்களுடைய பயிற்சி காலம் முடியவில்லை, அதனால் டிரெய்னீஸ் டைரி எழுதவேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கு உதவவேண்டும். நான் எழுதவேண்டும் என்ன எழுதுவது என்று மேலாளரைக் கேட்டேன். நீ டைரி எழுதுவதால் அன்றாட வேலையை எழுது என்றார். என்னுடைய டைரி முழுவதும் வந்துபோகும் கண்டெய்னர் எண்கள், அது எந்த டிரெய்லரிலிருந்து இறக்கப்பட்டது, அந்த கண்டெய்னரில் எந்த பெட்டிகள் இருந்தன அவை (ஒவ்வொன்றுக்கும் ஜெர்மன்காரன் எண் எழுதியிருப்பான்) களை எழுதினேன். பல நாட்கள் கழித்து என் அறைத்தோழன் ராஜாராமன் என்னுடைய டைரியைப் பார்த்தான். அடே, இந்த கண்டெய்னர் எண்களும், லாரி நம்பர்களும் எப்படி உன்னுடைய அறிவை வளார்க்கும் என்று கேட்டான்! ஒரே காமெடி தான். சென்னையில் ஏதாவது லாரி காணாமல் போய்விட்டால் கண்டெய்னர்கள் தொலைந்துவிட்டால் இந்த டைரி பயன்படும் என்று கிண்டலடிப்பான். ராஜா அந்த டைரிகள் அப்படியே பரணில் வைத்திருக்கிறேன் என் அருமை நண்பா!

தொடரும்.....

 

கருத்துகள் இல்லை: