வியாழன், 20 டிசம்பர், 2012

I salute Justice.Markandey katju....

அரசாங்க உத்தியோகம் முடிந்ததும் அப்பாடா என்று ஓய்வு கொள்பவர்கள் தான் சாமானியர்கள், ஆனால் பதவியில் இருந்தபோதும் மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றியவர்களால் பணிஓய்வு பெற்றாலும் அவர்கள் சமூகத்திற்கு உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படி நீதித்துறையில் நான் மதிப்பிடுகிற இருவரில் முதல்வர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றொருவர் மார்க்கண்டேய கட்ஜு. அயோக்கியர்களுக்கு எதிராக தன்னுடைய கருத்தை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பால்தாக்கரே இறந்தபோது  “நான் ஏன் அஞ்சலி செலுத்தமாட்டென்” என்ற கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியது.  பத்திரிக்கைத்துறையின் கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்துகொண்டு நெறிபிறளும் பத்திரிக்கைகளை எச்சரிக்கிறார். பத்திரிக்கைகள் மக்களுக்கு தேவையான சமூக-பொருளாதார விசயங்களை எழுதுவதர்குப் பதிலாக சினிமா நட்சத்திரங்களையும் கிரிக்கெட் பின்னால் செல்வதை கடுமையாக விமர்சித்தார். இன்றைக்கு குஜராத்தில் மோடி அரசு பற்றி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்பு விமர்சனம் செய்துள்ளார். அவர் ஒருமுறை எழுதிய “ 90% Fools" என்ற கட்டுரையை வாசித்த இரு மாணவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக எழுதிவ்ட்டார் என்று வழக்கு தொடுத்தனர். அந்த மாணவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினார். வீண்பெருமைக்ளை சுமப்பவர்கள் உடைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அவருடைய வலைத்தளத்தில் எழுதிவருகிற விசயங்களின் மையப்பொருள் மனிதநேயமின்றி வேறொருன்ருமில்லை.

தான் யார்? என்றே அனேக பேருக்குத் தெரிய்வைல்லை.. இன்னாரின் மகன், இந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவன் என்று முடியலாம். ஆனால் ந்மது பூர்வீகம் என்ன? இந்தியா என்பது என்ன? என்பது குறித்து ஆழமான கட்டுரை எழுதியுள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையையும் தமிழாக்கம் செய்யவேண்டிய தேவையுள்ளது. மக்கள் ஒற்றுமையை சாதியின் பெய்ரால் மதத்தின் பெயரால் குலைக்கிற சக்திகள் குரூரமாகி செய்லபடுகிற நேரத்தில் அவருடைய எழுத்துக்களை இளைஞர்களிடம் கொண்டுசெல்லவேண்டும்.
 

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! மார்கண்டெய கட்ஜு பர்ரிய பதிவு அருமை ! ---காஸ்யபன்.!க்