ஞாயிறு, 6 நவம்பர், 2011

துருவ நட்சித்திரம் ஒன்று தெரிகிறது...

சமீபத்தில் இரண்டு முக்கியமானவர்கள் ஊடகங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்பதை விட சாடியிருக்கிறார்கள். ஒருவர் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான நீதியரசர். மார்க்கண்டேய கட்ஜூ, மற்றொருவர் ஆசியன் ஸ்கூல் ஆப் ஜ்ர்னலிசம் நடத்திவரும் திரு. சசிகுமார்.



Ibn live தொலைக்காட்சியில் கரன்தாப்பர் நடத்திவரும் ‘devil court' ல் மார்க்கண்டேய கட்ஜ...ூ அவர்கள் பங்குகொண்டு பேசியிருக்கிறார். நான் அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் க்கு அடுத்தபடியாக மதிப்பது மார்க்கண்டேய கட்ஜூ அவர்களைத்தான், அவர்கள் அளித்த தீர்ப்பு தான் அவர்கள் மீது மதிப்பு வைப்பதன் காரணம். தான் பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்துகொண்டு அங்கு மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கலகக்குரல் உயர்த்தியிருக்கிறார். இந்திய ஊடகங்கள் பொறுப்பற்று நடந்துகொள்கின்றன, இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சாமான்ய மக்களுக்காக செயல்படவில்லை, அறிவியல் பூர்வமாக மக்களை சிந்திக்கவிடாமல் ஜோதிடத்தையும் சினிமாவையும் பரப்புவது தான் முதல்வேலையாக இருக்கிறது என்றார். பெரும்பாலன பத்திரிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் மீடியாவை வர்க்கநலனில் செயல்படுகின்றன என்று சொல்வார்கள். நீதிபதி அப்படியொரு வார்த்தையை பிரயோகிக்கமுடியாமல் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்கிறார். ஊடகங்கள் மக்களாட்சியில் நான்காவது தூணாக இருக்கிறது, ஆனால் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியத்தில் இல்லை. தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 5 வருடங்களுக்கொரு முறை மக்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கைகள் வாசகர்களைவிட அவர்களுக்கு விளம்பரம்தரும் வியாபார பெருநிறுவனக்களுக்கு சேவை செய்வதில்தான் குறியாக இருக்கிறது. மேலும் பத்திரிக்கைகளே கார்ப்பரேட்களாகத்தான் இருக்கிறார்கள். Paid News என்கிற ஊழலை பத்திரிக்கைகள் செய்ததை நாம் மறந்துவிடமுடியாது. கரகாட்டக்காரனில் வரும் ‘ஒருவிளம்பரம்தான்’ என்கிற மாதிரி தேர்தலில் ஜெயிக்கவைக்க பணம்கொடுத்த வேட்பாளர்களின் செய்திகளை முதல்பக்கத்தில் போட்டார்கள் அதில் Time of India,Hindustan Times பத்திரிக்கைகளுக்கு பங்கு உண்டு. அதை வெளிச்சம் போட்டு காட்டிய சாய்நாத் அவர்களை மார்க்கண்டேய கட்ஜூ புகழாரம் சூட்டினார். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விலைவாசி உயர்வினாலும் வறுமையில் வாடுவதை கவனிக்காமல் நடிகைகளின் பேஷன் ஷோ க்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை சாடினார். காலை எழுந்தவுடன் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் சேனல்களும் கூட ராசிபலன் எனும் மூடநம்பிக்கையை பரப்புகின்றன. இந்த நாடு அறிவியலிலும் பொருளாதரத்திலும் முன்னேறியிருந்தாலும் மக்களின் சிந்தனை இன்னும் அடிமைச்சமூகத்தில் தான் இருக்கிறது.

அச்சு ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் இருக்கிற்து, ஆனால் காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த ஒரு அமைப்பு தேவை அந்த அமைப்புக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நிச்சயம் இந்திய பத்திரிக்கைகளிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றம் ஏறபடும், அந்த மாற்றம் பெரும்பான்மையான மக்களுக்காக இருக்கும் என்று நம்புவோம்.

மற்றொருவர் சசிகுமார் அவர்கள், இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் ‘ஊடகச்சுதந்திரமும், ஊடக்த்திலுருந்து சுதந்திரமும்’ என்ற உரையாற்ரியிருக்கிறார். அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை ஏற்கனவே குமரேசன் என்பவர் அவரின் வலைப்பூவில் எழுதியுள்ளார். அதன் இணைப்பு கீழே http://asakmanju.blogspot.com/2011/11/blog-post_05.html . நீதிபதி பங்குகொண்ட நிகழ்ச்சியின் காணொளி இங்கே .http://ibnlive.in.com/news/media-deliberately-dividing-people-pci-chief/197593-3.html .

1 கருத்து:

காமராஜ் சொன்னது…

ஆயிரமாயிரம் புரட்சிக்கான் காரணிகள் இருந்த போதிலும் இந்தியாவில் ஊடக புரட்சிதான் முதலில் தேவையானது.அன்னாவுக்கும்,ரதயாத்திரைக்கும்,ராசிபலன்களுக்கும் ஒதுக்குகிற பக்கங்களில் ஒருசிறுபங்காவது உண்மையான செய்திகளுக்கு ஒதுக்குவதில்லை.பொதுவுடமைக்கும்,மக்களெழுச்சிக்கும் எதிரான,இருட்டடிப்பு வேலைகளில் ஊடகங்கள் மிகக்கவனமாக இருக்கின்றன.இந்தச்சூழலில் சோசிய்ச்ல் மீடியாக்கள் என்கிற மிண்ணனு ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.அதாவது உங்களுக்கும் எனக்கும்.