இதுவரைக்கும் நடந்த ஊழல்லேயெ பெரிய தொகையில சிக்கினது ஸ்பெக்ட்ரம் தான், அதை விசாரிக்கிறதுக்கு இப்ப மூனு அமைப்புகள் இருக்கு. உச்சநீதிமன்றம் தலையீட்டுலே சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில விசாரணை ஒரு பக்கம், அப்புறம் நாடாளுமன்றப் பொதுக்குழு முரளிமனோகர் ஜோஷி தலைமையில் ஒரு விசாரணை நடக்குது இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியெல்லாம் விடாப்பிடியா நின்னதால JPC பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இப்ப பிள்ளையார் சுழி போட்டிருக்காங்க. முக்கியமா சம்பந்தப்பட்ட டெலிகாம் மந்திரி ராசாவை திகார்ல போட்டுட்டாங்க, அப்புறம் தொலைதொடர்பு அதிகாரிகள், கொஞ்சம் கார்ப்பரேட் ஆளுக, கடைசியா கனிமொழி, கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார். இன்னும் பட்டியல் நீளும் போலிருக்கு.
ராசா மேல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சவுடனே charge sheet போட்டதாலே ஒருத்தரை குற்றவாளின்னு சொல்லமுடியாதுன்னு சொன்னாங்க, கலைஞரும் அப்புறம் பெரியாரோட சொத்துக்கு வாரிசான வீரமணியும் ராசா ஒரு தலித் என்கிறதாலேயெ அவர் மேலெ அபாண்டமா பழி சுமத்துறாங்கன்னு அங்கங்க மீட்டிங், சுப.வீரபாண்டியன்,நக்கீரன் கோபால், ஜகத்கஸ்பர் இவங்கெல்லாம் சேர்ந்து கருத்தரங்கம் நடத்துனாங்க. எல்லாம் பார்ப்பன சதி தான். ராசாவுக்கு ஒன்னுமே தெரியாது. இப்படியெல்லாம் பேசுனவங்க ராசாவுக்காக ஜாமீன் கேட்டாங்களா, ராசா உண்மையில அந்த ஊழலை செஞ்சது கலைஞரோட பேமிலிக்காகத்தான். அவரை ஒரு கருவியா பயன்படுத்தினாங்க. மீடியா ரெம்ப ஆவலா இருந்த விஷயம் கனிமொழியை அரெஸ்ட் பண்ணுவாங்கலா மாட்டாங்களா? சட்டசபைதேர்தல்ல் திமுக தோத்தவுடெனே திமுகவுக்கு பல் விழுந்துபோச்சு. கனிமொழியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நிருபர்கள் கலைஞர்கிட்ட கனிமொழி கைது பத்தி கேட்டபோது அவளும் பெண் தானேன்னு டயலாக் விட்டாரு. கைது நடவடிக்கையை தடுக்கமுடியலன்னு ஆனதாலே டெல்லியில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை என்ன விலை கொடுத்தாவது அப்பாயிண்ட் செஞ்சு வாதாடுனாங்க. அப்ப கனிமொழிக்கு ஒண்ணுமே தெரியாது எல்லாத்துக்கும் ராசாதான் காரணம் அப்படின்னு பழியை அவரு மேல போட்டாங்க. கனிமொழிக்காக ராம்ஜெத்மலானிய வைச்சு வாதாடிவரு ஏன் ராசாவுக்காக ஒரு துரும்பு கூட கிள்ளிப்போடல, இன்னுமா திமுக காரங்க அவர நம்பு’றாங்க?
இதுவரைக்கும் ராசா ஏன் காப்பதிறதுக்கு முயற்சி எடுக்கல? அவரு தலித் என்பதால் தானோ எங்கிற கேள்விக்கு கலைஞர் தான் பதில் சொல்லனும்.கனிமொழிக்கு ஒரு நியாயம், ராசாவுக்கு ஒரு நியாயமா? அப்புறம் கலைஞ்ர் டிவி நிர்வாக இயக்குனரை கைது பண்றவங்க 60 சதவீத பங்கை வச்சிருக்கிற தயாளு அம்மா மேல நடவ்டிக்கை எடுக்கல. அவரோட பையன் மத்தியில மந்திரியா இருக்கிறதாலயா?
மத்திய மந்திரி பண்றதுக்கு பிரதமரும் பொறுப்புதானே, அவரு மேல ஒண்ணயும் காணோம். இப்ப ஸ்பெக்ரமுக்கு முழுப்பொறுப்பு திமுக தான் ங்கிறமாதிரி காங்கிரஸ்காரங்க பேசுறாங்க. 2000ம் ஆண்டிலிருந்து தொலைதொடர்பு கொள்கை மாறியிருக்கிறதா சொல்றாங்க, அப்ப பாஜக காங்கிரஸ் தயாநிதிமாறன் வரைக்கு சிக்குவாங்க. அடுத்து எஸ் பேண்ட் எப்ப வெளிய வருமோ? தெரியல. எல்லாரையும் அரெஸ்ட் பண்றது மட்டும் போதுமா, கொள்ளையடிச்ச பணம் அல்லது வருமான இழப்பு எப்படி வரப்போகுதோ? பிரதம மந்திரியை கூட அரெஸ்ட் பண்ணிடலாம், கார்ப்பரேட் மேல கைய வைக்கமுடியுமா என்ன?
2 கருத்துகள்:
//அப்புறம் கலைஞ்ர் டிவி நிர்வாக இயக்குனரை கைது பண்றவங்க 60 சதவீத பங்கை வச்சிருக்கிற தயாளு அம்மா மேல நடவ்டிக்கை எடுக்கல//
கனிமொழியின் வக்கீல் ராம் ஜெத் மலானியும் இதையே தான் போட்டுக் கொடுத்தார்; "என் கட்ச்சிகாரர் மெஜாரிட்டி பங்கு தாரர் அல்ல; அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? " என்று!.
//கலைஞர்கிட்ட கனிமொழி கைது பத்தி கேட்டபோது அவளும் பெண் தானேன்னு டயலாக் விட்டாரு. //
அது மட்டுமில்லை. கனிமொழி விஷயத்தினால் மூன்று நாட்களாக "அந்த" வீட்டுக்கு போகவில்லை என்று கூட ஒரு நிருபரிடம் அவர் கூறினார். (துணைவி, அந்த வீடு என்பதெல்லாம் இல்லை மறைவு, காய் மறைவாக இருந்தது இமயம் முதல் குமரி வரை பேசப்படுவதற்கு காரணம் அவரே; இதற்கு ஆரிய சூழ்ச்சி என்று காரணம் சொல்ல முடியாது.)
கருத்துரையிடுக