சனி, 26 ஜூன், 2010

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. கச்சா எண்ணேயின் விலை சர்வதேச அளவில் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதற்கான அறிகுறி இல்லை. எப்போதும் போல தங்கத்தின் விலை ஊசலாடுவதைப் போல் தான் குரூட் ஆயிலின் விலையும் இருக்கிறது. பின்னர் ஏன் மத்தியஅரசு ஒருலிட்டர்பெட்ரோலுக்கு ரூ.3.50ம் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.00ம் சமையல் எரிவாயு சிலிண்டருக்குக்கு ரூ.35ம் உயர்த்தியது என்று பார்த்தால் அதற்கு பின்னால் Dr. Kirit Parikh வின் recommendataion தான் காரணம்.


பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியில் நஷ்டத்தை நோக்கி செல்வதால் இந்த விலை உயர்வாம். நாட்டில் ஏற்கனவே 17% பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து சாமான்யமக்கள் அல்லல்படுகின்றனர். ஏப்ரல் மாதத்தில் தான் பட்ஜெட் முடிந்தவுடன் பெட்ரோல்,டீசல் விலையை “ஒரு ரவுண்ட்” விலை ஏற்றினார்கள். இதற்கு திமுக மம்தா, சரத்பவார் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். இவர்களுக்கு மட்டும் இந்தக் கொள்ளையில் பங்கு இல்லையா் என்ன? காரணம் சமையல் எரிவாயுக்கு இன்னும் மானியம் தொடர்கிறதாம்.

இந்த விலையுயர்வு வந்தவுடன் பொதுமக்கள் தரப்பில் கடுமையான கோபம் கொண்டிருப்பார்கள், ஆனால் இந்திய கார்ப்பரேட்டுகளின் அமைப்பான CII, FICCI விழுந்தடித்து வரவேற்றுள்ளது, ஏனென்றால் இதற்கு முக்கிய காரணமே தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் கடை திறப்பதற்குத்தானே இந்த விலை உயர்வு. ரிலையன்சும் எஸ்ஸார் நிறுவனமும் நாடெங்கும் சில்லரை விற்பனை நிலையங்களை திறந்துவிட்டு பின்னர் கட்டுபடியாகாமல் மூடிவிட்டது. இப்போதைய “derugulaton" ல் மீண்டும் அவர்கள் சந்தையில் வருவார்கள். சென்ற மே மாதத்தில் தான் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக CNG எனப்படும் கேஸ் விலையை $1.8 / mmBtu விலிருந்து $ 4.2 வுக்கு உயர்த்தியது இதன் மூலம் கிருஷ்னா-கோதாவரி பேசினிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் $ 4.2 /mmBtu விற்கு விற்றுக்கொள்ளலாம். இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மத்தியரசின் மின்சாரம், உரம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ8000 கோடி அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது, அதுமட்டுமல்ல டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் எரிவாயு மூலம் போக்குவரத்தும் இயங்குகிறது, இதனால் கடைசியில் மக்கள் தலையிலும் சுமை. இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் “வர்க்க” ரீதியில் வகுக்கப்படுவது தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் லாபமே ஈட்டியுள்ளது, அது நஷ்டமடைந்தால் மத்திய அரசு மானியம் அளிக்கலாம். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக customs duty, excise duty, corporate tax, Dividend, sales tax என்று வருடத்திற்கு ரூ 1,61,798 கோடி (2008-09) கிடைக்கிறது. இதிலிருந்து அந்த நஷ்டத்தை தாங்கினால் யாருடைய குடி முழுகிப்போய்விட்டது. மத்தியரசு உண்மையிலேயெ மக்கள் மீது அக்கறை கொண்டால் தான் விதித்த வரியை சர்வ தேச அள்வில் கச்சா எண்ணெய் உயரும் போது மாற்றியமைக்கவேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் உண்மையான உற்பத்தி விலையை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். சர்வதேச விலையில் எரிவாயுவின் விலை ஒரு டன்னுக்கு 700 டாலர் விற்பனையாகிறது. அதை இந்தியபணத்திற்கு மாற்றி போக்குவரத்து செலவைச் சேர்த்தால் 14.2 கிலோ சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ.500 ஆகிறது, இதில் மத்தியரசு மானியம் கொடுப்பது உண்மைதான். ஆனால் டீசலுக்கும் மானியம் தருகிறோம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் வரிகள் இல்லாமல் 28ரூ தான். பெட்ரோலுக்கு மேலே எவ்வளவு சுமைகள்...

Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00

பொதுத்துறையை வலுப்படுவதற்காக இந்த விலை உயர்வு இல்லை, ஏற்கனவே Disinvestment மூலம் தனியார்மயப் படுத்துவதால் அந்த நிறுவனங்கள் லாபம் பார்த்தேயாக சூழலில் உள்ளது.இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய்யின் 74 சதவீதத் தேவையை இறக்குமதியின் மூலம் பெறுகிறது. ஆனால் உள்நாட்டில் கிடைக்கும் 26 சதவீதம் எண்ணெய் வளத்தை பொதுத்துறை நிறுவங்களே துரப்பணம் செய்யலாமே. கையில் உள்ள நெய்யை விட்டு விட்டு வெண்ணெய்க்காக ONGC, GAIL போன்ற நிறுவனங்கள் சூ்டானுக்கும், வெனிசூலாவிற்கும், ரஷ்யாவிற்கும் அலைகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் லாபமானாலும் நஷ்டமானாலும் சந்தையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச்செய்கின்றன. இந்தியாவில் லாபம் இல்லாவிட்டால் தனியார் நிறுவனங்கள் உடனே மூடிவிடுவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு காசு கொடுக்காமல் சாலையில் பயணிக்க முடியாது என்று கம்யூனிஸ்ட்கள் கூறினார்கள் அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கம் செலுத்தாமல் பயணிக்கமுடியவில்லை. எத்தனையோ வரிகள் சாலைகள் அமைப்பதற்கு அதை டீசலில்,பெட்ரோலில் செஸ் என்று விதிக்கிறார்கள். ஆனாலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்று சாலை, விமானநிலையம், ஹார்பர் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குகிறார்கள். எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.

5 கருத்துகள்:

Swaminathan K சொன்னது…

Write up is good. It exposes anti people approach of the GOI in simple words. It will be useful for activists for taking the campaign among the masses. In the last para no 5th line you have used a word "THURPANAM" which is not understandable.If it is typing error please correct it. Thank you for Sri KNG for recommending your site. K SWAMINATHAN

hariharan சொன்னது…

திரு.சுவாமிநாதன்,வருகைக்கு நன்றி.

துரப்பணம் என்பது exploration.

ஒன்று சேர் சொன்னது…

Very good article. I will join tomorrow with some more details
CHITHRAGUPTHAN (EMAIL: cgn.hrpc@gmail.com)

hariharan சொன்னது…

welcome to Shri.Chithragupthan.

Yesterday i see GOI's advt on fuel price hike justification about india's LPG price is cheeper than pakisthan,nepal,srilanka and bhutan.

where as we are developing country should be compare with china with morethan one billion populated. In china petrol rate Rs.31.30/Litre.

Hariharan

ஒன்று சேர் சொன்னது…

அன்பார்ந்த தோழர் ஹரிஹரன் அவர்களுக்கு,
நான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாம் என்று எதிர்பார்த்த தினத்தில் (ஒவ்வொரு முறை விலை உயர்வின் போதும் அரசியல் வாதிகள் ஆயில் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைப்பதற்காக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது என அறிக்கை விடுவார்கள் என்பதால்) எண்ணை நிறுவனங்களின் லாப விபரங்களை பார்ப்பதற்காக அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று பார்த்த போது தொடர்ந்து பல ஆண்டுகளாக கோடிக்கணக்கிலான லாபத்தில் தான் இருந்துவருவது தெரிந்தது. ஆனால் 2001 முதல் 2010 ஜூன் வரை 51 முறை டீசல் விலை மாற்றப்பட்டிருக்கிறது (32 முறை கூட்டப்பட்டிருக்கிறது- 19 முறை பைசாக்கள் அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது - விபரம் எக்செல் கோப்பாக அலுவலகத்தில் வைத்திருக்கிறேன் நாளை உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். சொல்ல வருவது என்னவென்றால் நஷ்டத்தைப் பாதுகாக்க என்பதெல்லாம் சும்மா காதில் பூ சுற்றுகிற வேலை. அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் எண்ணை நிறுவனங்களில் மிகுந்த பங்குகள் வைத்திருப்பதால் அந்த நிறுவனங்களின் லாபம் குறையாமல் பார்த்துக்கொள்வது அவர்கள் முதன்மை பணி. புலம்பியே சாகவேண்டியது நடுத்தர வர்க்கத்தின் சாபக்கேடு. தொடர்பிற்கு 9442036044