உத்திரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி அவர்கள் சட்டமன்ற மேலவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது மொத்த சொத்து மதிப்பு 88 கோடி ரூபாய் என தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அறிவித்த சொத்து மதிப்பு 52.27கோடி ரூபாயாகும். மூன்றாண்டு காலத்தில் 35கோடி சொத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது. தொண்டர்கள் அணிவித்த பண மாலைகளினால் சொத்து அதிகரித்துவிட்டதா?. தேர்தலில் போட்டியிடும் போது சொத்து மதிப்பு வெளியிடப்பட வேண்டியது வெறும்சம்பிரதாய நிகழ்ச்சி போலத் தெரிகிறது. எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தீர்கள் என்று கேள்விக்கேட்கவேண்டிய அரசு இலாக்கக்களின் கைகளில் அரசு பூட்டு போட்டு இருக்கிறது. அதை அவ்வப்போது சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏவி விடுவதும் அடக்கிவைப்பதும் மத்திய அரசின் வேலையாக இருக்கிறது.
பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். சில மந்திரிகளின் சொத்து மதிப்பு மாயாவதியின் சொத்து வளர்ச்சியை விட வேகமாக வளர்கிறது. இவர்கள் கடந்தகாலத்தில் அறிவித்த சொத்துமதிப்பு என்ன என்றோ, அதை ஆராயவோ யாருக்கு நேரமிருக்கிறது.
நாட்டில் அதிகமாக ஊழல் நடைபெறுகிற இடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன. இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று சொல்லுவார்களா?. ஆனாலும் சில நேர்மையான நீதிமான்கள் தாமாக தமது சொத்துமதிப்பை வெளியிட்டார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் கூட சொத்து மதிப்பை வெளியிட்டார்கள்.
கீழ்நிலையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்கூட சுயமாகத் தொழில் தொடங்கத் தடையாக இருக்கும்போது உயர்மட்டத்தில் மந்திரிகள் பல தொழில்கள் புரியும் தொழிலதிபர்களாக உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் கோடிகளை குவித்தார், தமிழுக்காகவே தொண்டாற்றிகொண்டே சினிமாவிற்கும் கதை எழுதுகிற முதல்வரின் குடும்பத்தினரும் ஆசியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெருகிறார்கள். கேள்விக்கேட்கவேண்டிய அமைப்புகளே லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக்கிடக்கிறது. இச்சூழ்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக யார் சொத்து சேர்த்தால் என்ன?
5 கருத்துகள்:
அரசியல்/வாதிகள் அநியாயம் பற்றிய
நியாயமான, சிந்திக்கப் பட வேண்டிய பதிவு,
பதிவாளர்கள் அனைவரும் ஒருமித்து உற்று
நோக்கிச் செயல்பட வேண்டிய தருணமிது.
செய்தி ஊடகங்கள், விளம்பர பணங்களால்
ஊமைகளாகி விட்ட இத்தருணங்களில்,
உண்மைகளை உரக்கச் சொல்ல இத்தகைய
பதிவுகள், புது மேடை போடட்டும்.
(அரசியல்வாதிகள் திருந்தாவிடிலும்,
செய்யும் தவறுகளை மக்கள் கவனித்து
கொண்டிருக்கிறார்கள் என்ற மனரீதியான
பயம்/வெட்கம் வரலாமல்லவா?)
திரு.வாசன் நன்றாகச் சொன்னீர்கள்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்க வேண்டிய ஊட்கங்கள் காசுக்காக செய்தியை வெளியிடும் கேவலத்தை நாம் பார்த்தோம். இன்றும் நீங்கள் கூறுகிறபடி மதிக்கின்ற முண்ணனி நாளிதழ்களிலும் இந்தியாவின் எல்லா மூலையிலிருந்தும் விளம்பரங்கள் வந்து சேர்கின்றன இவர்களும் வர்க்க பாசத்தையும் எப்படி திருப்பிச்செலுத்துவது?
Hari! mind this episode.Nehru was the interium P.M.He resigned on 14th morning and took office as P.M. of Independent India on the early morning of 15th.He received the salary for August in full.The Auditor General asked the P.M. to remit half a days salary back to the treshury.Nehru obliged him.The A.G. was promoted and made the first Comptroller and Auditor General of independent India.From Nehru to Mayavathy..What a fall? how it happened? are we not a part of this fall?...kashyapan
Dear Mr. Kashyapan,
Nehru might be good at half a month salary, but failed on Krishna menon`s 1948 UK-Jeep scandal.
He favoured his spoiled daughter instead of controlling. Handled the China War, projected him as a lay man rather a PM. He had not learnt what Nepolean said "to maintain PEACE, you should be prepared for, a WAR"
Dear Vasan,thank u for accepting Nehrus personnel itegrity.I dont give any brief for him.He was a bundle of contradiction and a mixer of confussion.He was a man who loved this country,and in reciprocation loved by the people in äbaendonce.Jeep scandal,and (Indias)China war are all to be dealt with in a seperate posting.Vasan I am prepared for that......kashyapan. ( it is not half month ,it is half days salary.)
கருத்துரையிடுக