கல்கத்தா காளி..
பயணக்குறிப்புகளை எழுதுவதற்கு என்ன காரணமென்றால், நான் மற்றவர்களின் அனுபவத்தை எங்கெங்கெ போனார்கள், எங்கே தங்கினார்கள், எங்கே சாப்பிடலாம் என்ன பொருட்களை வாங்கலாம் தெரிந்து கொள்ள கூகுளில் தேடினேன். Trip Advisor Google மிகவும் உதவியாக இருந்தது என்பதைவிட அங்கே தங்களின் அனுபவத்தை எழுதியவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். Kairali channel ல் Flavours of India என்ற நிகழ்ச்சியில் எந்தெந்த ஊர்களில் என்ன சாப்பாடு நல்லாயிருக்கும் அதாவது சாப்பாட்டு புராண நிகழ்ச்சி தான், கொல்கத்தாவின் உணவுகள், ஹோட்டல்கள் மட்டுமல்ல் சுற்றிபார்க்கவும் உதவியாக இருந்தது அந்த நிகழ்ச்சி. யூ டியூபில் தான் பார்த்தேன். ஒருவேளை தமிழில் கொல்கத்தா பயணம் என்றே யாரேனும் தேடினால் நம்முடைய அனுபவமும் பயன் தரலாம். நமக்கே சிலநாட்க\ளோ வருடங்களோ கழித்து நினைவுகளை வாசித்து அசைபோடலாம்.
வழக்கம்போல காலை 5 மணிக்கு எழுந்து டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என ஹோட்டலிலிருந்து கீழே வந்தேன், ஒருகடையும் திறக்கவில்லை. ராஷ்பிகாரி அவென்யூ சாலையை குப்பையை அள்ளி தூய்மைப் பணியில் மாநகராட்சி வண்டிகள் மட்டும் போய்க்கொண்டிருந்தது. கோமளவிலாஸில் டீ, காபி 6 மணிக்கு மேல் தான் ரெடியாகும். சரி கொஞ்சம் தூரம் நடக்கலாம் டீக்கடை இல்லாமல போகும் என்று சென்றேன் எதிரே ஒரு லேக் மார்க்கெட் ஏரியா இருக்கிறது அப்ப லேக் எங்கே? அது அங்கிருந்து தெற்கே ரபீந்திர சரோவர் ஏரி என்ப்படும் பெரிய நீர்நிலையும் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. அந்த லேக் மார்க்கெட் பகுதியில் டீக்கடை இருப்பதாக வாக்கிங் சென்றவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஓ தாதா ஏக் டா சா தீன் ! மண்குவளையில் தேனீர் கிடைக்கிறது. சில இடங்களில் 5 ரூ 4 ரூ க்கு எல்லா இடங்களிலும் மண்குவளைகளில் டீ கிடைக்கும். பெங்காலிகள் டீ குடிக்கும்போது கொஞ்சம் விலகியிருக்கவேண்டும் ! உறிஞ்சு குடிக்கும்போது ஒரு சததம்.. ஆகா. அப்படி குடிப்பதை பக்கத்திலிருப்பவன் வித்தியாசமாக உணர்ந்தால் அவன் வெளியூர்!
காலை 8 மணிக்கு பனானா லீபில் free breakfastக்கு காத்திருந்தால் பயணம் தடைபடுமென்று 6மணிக்கு இன்னொரு காபி குடித்துவிட்டு காளிகாட் காளியை பார்க்க போனோம். Rashbஎhari avenue சாலையில் மேற்கு நோக்கி நடந்தோம். ஒவ்வொரு சாலையின் பெயரும் வரலாற்றை நினைவுகூரும். ராஷ்பிகாரி போஸ் இந்திய விடுதலைப்போரில் ஒரு தீவிரவாதியாக இருந்தார், சுபாஷ் போஸோடு இணைந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவ்ர்களில் இவரும் ஒருவர். காளிகாட் மெட்ரோவைத்தாண்டி நேரே மேற்குநோக்கி நடந்தால் காளிகாட் சாலை என்றொரு வீதி குறுக்கிடும் அதிலே வடக்கு நோக்கி நடந்தால் காளிகாட் காளி கோவில். நம்மூர் தெரு பிள்ளையார் கோவில் சைஸ்தான். ஆனால் இது புராணா கோவில். காளிகாட் மெட்ரோவிலிருந்து 1 கி.மீ தூரம்தான். வரும்போது இன்னொரு வீதிவழியா வந்தோம், கொஞ்ச தூரத்துக்கு கார், ஆட்டோ ரிக்ஷா எதுவ்ம் போகமுடியாது அவ்வளவு குறுகலான சந்து. வழியில் யாருகிட்டயும் வழிகேட்டா கைபிடிச்சி இப்படிபோகனும் என்று சொல்கிறார்கள். கோவிலுக்கு பக்கத்துல போகும்போதே புரோக்கர்கள் ஓடிவார்கள், அங்க ஹிந்தில பேசுவாங்க .. வெளியூர்க்காரன் தான் சாதாரண நாள்ல வருவான்..செம்பருத்தி பூ மாலை வாங்கிக்கொ மாதாவுக்கு ஸ்ந்தேஷ் ஸ்வீட் வாங்கிக்கோ என்று நச்சரிப்பார்கள். எனக்கு ஏண்டா உள்ளே போனோம் ங்கிற நிலைக்கு வந்துட்டேன். வெளியூர் பார்ட்டி நல்ல டிரஸ் பண்ணியிருக்கான், அர்ச்சனை, தாயத்து, தகடு கட்டி 2000 ரூ 5000 ரூ யோ கறந்துடலாமுன்னு நினைச்சாங்க, இந்தா 101 டக்கா செம்பருத்தி பூ மட்டும் கொடுத்துட்டு பெங்காலி ஏதோ திட்டுனா.. சரி புரியலை சந்தோஷம். அடுத்து சாமிக்கு பக்கத்துல பூசாரி கருவறைக்குள்ள இழுக்கிறாரு! சாமி நான் உள்ள வரல.. நாங்கள்ளாம் அங்க வரப்படாதுன்னு எஸ்கேப். சரி காளியைபாத்தாச்சு! பாரதி கேட்டா.. என்னம்மா சாமி நாக்கை தொங்கபோட்டுகிட்டு இப்படியிருக்கு !
6மணிக்கு ரூம்லயிருந்து கிளம்பி 1கி.மீ நடந்து 7 மணிக்கு தரிசனம்! முடிச்சு திரும்ப 1 கி.மீ நடந்து Rashbehari சாலைக்கு வந்தாச்சு. டாக்சியில் ஹொரா போகலாமென்றால் டாக்சி ஸ்ட்ரைக் வைச்சு10 கி.மீக்கு 200 ரூ கேட்டான், தாதா மீட்டர் டாலோன்னா , ஆஜ் டாக்சி ஸ்ட்ரைக் மாலும்! சரி பஸ்ல போகலாமென்று பஸ் நிறுத்தத்திற்கு வந்தோம். சரி எந்த பஸ்ல ஏறுறது? ஓ தாதா கோன்ஸா நம்பர் பஸ் ஹொரா ஜாச்சி? அமி ஹொரா ஜாச்சி! என் கூட ஏறுன்னார், ஆகா நம்ம கேட்டது அவருக்கு புரிஞ்சாச்சு.
அந்த காலை நேரத்தில் அவ்வளவா சாலை நெரிசல் இல்லை, ஹொரா பாலத்தை கடந்து ரயில்நிலையம் அருகில்லுள்ள பஸ்நிலையம் வந்தோம். ஹொரா பாலத்தின் பெயர் ரபீந்திர சேது. உலகின் மூன்றாவது நீளமான கேண்டிலீவர் பிரிட்ஜ் சுமார் 500மீ இடையில் எந்த பில்லரும் கிடையாது. ஒரு அதிசயம்தான் 1942ல் கட்டிமுடித்திருக்கிறார்கள். எவ்வளவோ இரும்பு .. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வண்டியாவது அதை கடந்து போகும் .. நடந்து போறவங்களும் நிறைய போய்க்கிட்டேயிருக்காங்க..
ஹொரா ரயில்நிலையத்திலிருந்து பேலூர் மடத்திற்கு லோக்கல் ரயில் உள்ளது, 7 கி.மீ தூரம் தான் 1வது நடமேடையிலிருந்து கிளம்பும். பேலூர் என்ற பெயரிலும் பேலூர் மடம் என்ற பெயரிலும் ஸ்டேசன் உள்ளது. பேலூர் மடத்தின் ஸ்டேசனுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் தான் இராமகிருஷ்ண மடம் உள்ளது. இந்தியாவெங்கும் உள்ள இராமகிருஷ்ண மடத்தின் தலைமை நிலையம் அது தான். ஒரு தியான மண்டபத்தின் இராமகிருஷ்ண பரம்கம்சரின் உருவச்சிலை உள்ளது. பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் இருந்தார்கள். ஹூக்ளி நதியின் கரையில் உள்ளதால் படித்துறை உள்ளது ஹூக்ளியில் குளிக்க ஆசையாக இருந்தது. அங்கிருந்து படகு மூலம் தட்சினேஷ்வர் சென்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக