செவ்வாய், 29 டிசம்பர், 2015

கொல்கத்தா பயணம்-1

மதியம் 1 மணிக்கு விமானம் தரையிறங்கியது, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பெயர்தாங்கிய கொல்கத்தா விமான நிலையம் எங்களை வரவேற்றது. சென்னை மும்பை அளவிற்கு பிரம்மாண்டமானது அல்ல சிறியதும் அல்ல. Indigo Airlines ல் தண்ணீர் மட்டும் இரண்டு கிளாஸ் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். உணவிற்காக ஆன் லைனில் புக் செய்திருந்தென். இதுதான் domestic விமானத்தில் முதல்பயணம். ஹைதராபாத் பிரியாணி வேண்டும் என்றான் பாலா, சரி வாங்கிக்கோ என்றால் packed food, அதை என்றோ தயாரித்து பாக்கெட்டில் கெட்டுப்போகாமல இருப்பதற்கு பல சேர்மானங்களை சேர்த்திருப்பார்கள்.பாக்கெட்டின் மூடியைத் திறக்கவெண்டும், அவர்களே வெந்நீர் இலவசமாக ஊற்றுகிறார்கள் 8 நிமிடம் கழித்து சாபிடவேண்டுமாம். கேவலம், இந்தியாவின் எந்த விமான நிலையத்திலும் உணவு தயாரித்து வழங்க உணவகங்களே இல்லையா? Srilankan விமானத்தில் மட்டுமல்ல, வளைகுடாவிலிருந்து இருந்து சென்னை வந்து திரும்பும் விமானங்கள் அந்த பிரதேசவாசிகளின் ப்ரெஷ் உணவை வாங்கி கொடுக்கிறார்கள் சிறிய தோசை, உப்புமா , வெஜிடபிள் பிரியாணி, சிக்கன் பிரியாணி எல்லாம் உண்டு.


தெரியாமல் ஆர்டர் செய்த ஹைதராபாத் பிரியாணி! இனிமே சாப்பிடுவ!, அப்புறம் பிரட் சாண்ட்விச் அதுவும் மகாமோசம். சரி அதான் லஞ்ச்க்கு கொல்கத்தா banana leafல் சாப்பிடலாம் என்ற திருப்தியோடு பயணம் செய்தோம்.ப்ரீபெய்டு டாக்சியின் பணத்தை 350ரூயை ஏர்போர்ட்டிலேயெ கட்டிவிட்டோம், ஒருவேளை அதிகமானால் ஓட்டுனரிடம் தரவேண்டும், கட்டியதைவிட குறைவான பில் காமித்தால் ரிடன்மணி தருவாரா? டாக்சி ஓட்டுனர். டாக்சியில் 90 நிமிடப் பயணத்தில் kalighat rashbihari avenue  வந்து சேர்ந்தோம். எதிர்பார்த்ததை விட 50 ரூபாய் குறைவாகத்தான் பில் வந்தது, மீதமும் நான் கேட்கவில்லை, அதிக புன்னகையோடு எங்களை இறக்கிவிட்டார். மதிய உணவை திருப்தியாக சாப்பிட்டோம். கோமளவிலாஸின் கட்டிடம் கொல்கத்தாவின் நூறாண்டு பழமைவாய்ந்த கட்டிடங்களில் ஒன்று அதை நவீனப்படுத்தியிருக்கிறார்கள்.


விக்டோரியா மெமோரியலுக்கு மெட்ரோவில் செல்லலாம் Maidan மெட்ரோ ஸ்டேசனில் இறங்கினால் 1 கி.மீ நடந்தால் போதும். மாலை 4:30யோடு விக்டோரியா மெமோரியல் ஹாலின் நுழைவு டிக்கெட் கவுண்டரை மூடிவிடுவார்கள் என்ற அவசரத்தில் டாக்சியை பிடித்துக்கொண்டு கிளம்பினொம். மறுநாள் ஒருபிரிவு டாக்சிகளின் 48 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு முந்தைய நாளே மீட்டர் போடாமல் தயாராகிவிட்டார்கள் இருந்தாலும் 6 கி.மீ பயணத்திற்கு 100 ரூபாய் பரவாயில்லை தான். ராஜாஸ்தான் மார்பிளை வைத்து அந்த மாளிகை விக்டோரியா ராணியின் நினைவாக 1921ம் ஆண்டில்  கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 64 ஏக்கர் பரப்பள்வில் சுற்றிலும் பூங்கா, நீர்நிலையும் அமைத்திருக்கிறார்கள். கொல்கத்தாவில் பார்க்கவேண்டிய இடங்களில் விக்டோரியா நினைவகம் முக்கியமானது. மாலை 4:30 மணிக்கே கதிரவன் மறையத்தொடங்கிவிட்டான் அதுவும் குளிர்காலம் அல்லவா? அப்படியே வெளியேவந்து இரபீந்திரசதன் என்ற கொல்கத்தாவில் திரைப்படவிழா நடக்கும் இடத்திற்கு வந்தொம், தேசிய நாடகவிழாவின் நிறைவு நாளில் நஷ்ரூதின் ஷா இயக்கிய நாடகம் நடைபெறவிருந்தது, கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருந்தார்கள்.அத்தோடு அங்கிருந்து நியூமார்க்கெட் சென்றோம், நடந்துசெல்லலாம், பேருந்து , டாக்ஸி, மெட்ரோவிலும் செல்லலாம். Rabindra sadan என்ற மெட்ரோ ஸ்டேசன் நந்தன் ப்லிம் செண்டரிலிருந்து 200 மீட்டர் தூரம் தான், அங்கிருந்து டம்டம் நோக்கி செல்லும் மெட்ரோவில் ஏறினால் 5 ரூபாய் டிக்கெட்டில் எஸ்பிள்னேடு மெட்ரோ ஸ்டேசனில் இறங்கினால் 1/2 கி.மீ தூரத்தில் நியூ மார்க்கெட் உள்ளது. பெங்கால் காட்டன் புடவைகள், தோலினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். Sree Leathers  என்றொரு பெரிய கடை உள்ளது அங்கே தோலினால் செய்யப்பட்ட பொருட்களை ஷு, பெல்ட், பேக், லெதர் ஜர்க்கின் எல்லாமே நல்ல விலையில் வாங்கலாம், நிறைய கலெக்‌ஷன் உள்ளது. கொல்கத்தா நினைவாக அப்பாவுக்கு ஒரு ஸ்வெட்டரும் அம்மாவுக்கு ஒரு புடவையும் எனக்கு ஒரு லெதர் பெல்ட்டும் நியூ மார்க்கெட் ஷாப்பிங் முடித்து மெட்ரோவைத்தேடி நடந்தோம், எஸ்பிளனேடுக்கு பதிலாக பார்க் ஸ்டீர்ட் மெட்ரோவிற்கு போய்விட்டோம் கொஞ்சம் அதிக நடை 750 மீ. பார்க் ஸ்டீர்ட் மெட்ரோவிலிருந்து காளிகாட் மெட்ரோவிற்கு பயணம் 7 கி.மீ தூரம் 5 ஸ்டேசன்கள்  5 ரூபாய் டிக்கெட். மெட்ரோவில் யாரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திடமுடியாது, டிக்கெட்டிற்கு பதிலாக டோக்கன் தருகிறார்கள், அதை ஸ்கேன் செய்தால் தான் வழிவிடும் கேட், மெட்ரோவில் எல்லா நேரமும் கூட்டம்தான்.மெட்ரோவில் ‘அடுத்த’ ஸ்டேசன் என்னவென்பதை பெங்காலியில் அறிவிப்பார்கள், Rabindra sadan க்கு  ரொபீந்திரசொதன், Maidan க்கு மொய்தான் என்ற உச்சரிப்பு பாலாவுக்கு காமெடியாக இருந்தது. kalighat  ஸ்டேசனிலிருந்து இறங்கி 1/2 கி.மீ தூரம் நடந்தால் லேக் மார்க்கெட்டிலுள்ள கோமளவிலாஸை சென்றடையலாம். ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேசனிலும் வெளியே செல்ல மூன்று அல்லது நான்கு வழிகள் இருக்கும், ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு பிரதான சாலையின் மேற்பகுதிக்கு செல்லும், சரியான வழியில் சென்றால் குறைந்த நடை இல்லையென்றால் சாலையை கடக்க  இன்னும் கொஞ்சம் சிரமேற்கொள்ளவெண்டும். சாலையின் ஓரங்களில் நடைபாதையெங்கும் குடியிருப்புகள், கடைகள், கடைகளின் முகப்பே தெரியாமல் சாலையோரக்கடைகள் மறைத்திருக்கும், கடைகளை இரவு 9 மணிக்கு முன்பே அடைத்துவிடுகிறார்கள். இரவு  ‘பனானா லீப்’ ல் தோசை சாப்பிட்டுவிட்டு அடுத்த நாளைக்கு திட்டமிடலும் பின்பு உறக்கம். ட்ராமின் சத்தம், கார்களின் ஹார்ன் ஓசை, எல்லாம் இரவு 10 மணிக்கு அடங்கிவிட்டது.
---------------------------------------------------------------------- இன்னும் நாளைக்கு சுற்றலாம்..
கருத்துகள் இல்லை: