கொல்கத்தா பயணம்..
சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன் பார்த்த கொல்கத்தா இப்போது எப்படி இருக்கும் என்ற ஆவல், இந்த விடுமுறையில் சுற்றுப்பயணத்திற்காக எங்கே தங்கலாம், எந்த இடங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டேன். கொல்கத்தாவை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே நினைவில் அகலாது நிற்கும் ஹல்தியாவை பார்க்கவேண்டும். ஐஓசி ல் பணியாற்றும் நண்பர் செல்வத்திடம் பேசினென் நீ..ண்ட வருடங்களுக்குப் பின் சந்திக்கும் ஆவல் அவரிடம் அதிகமிருந்தது.
நவம்பரின் நடுவிலே சென்னையை கலக்கிய மழை, வெள்ளம் நிற்குமா? என்ற சந்தேகம் இருந்தது. மிண்டும் மழை, வெள்ளம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு. போக்குவரத்து தரைமார்க்கம், இரயில் மார்க்கம் ஆகாயமார்க்கமும் துண்டிக்கப்பட்டது சென்னை. இந்த மழையில் பயணம் தேவைதானா? எத்தனை மக்கள் வெள்ளம் வடியாத வீடுகளோடும், தங்கள் வீடுகளை இழந்தும் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை இந்த மாமழை நீக்கியது. ஆன்லைனில் ஆர்டர் செய்தும், கிரடிட் கார்டுகளை சாப்பிடமுடியாது, இயற்கையை சீரழிக்கக்கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொடுத்தது. இந்த மழையில் எல்லா இடத்திலும் மனிதத்தை பார்க்கமுடிந்தது. எல்லா அவசர காலத்திலும் நீளும் கைகளும் இணையும் உள்ளங்களும் சாதாரண காலங்களிலும் நிலைக்கவெண்டுமென்பதே அவா!
கோவையிலிருந்து சென்னை வழியாக போகவேண்டிய விமானம் சென்னைவிமான நிலையம் மூடப்பட்டதால் நேரடியாக கொல்கத்தா சென்றது. விமான்நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ பயணம் செய்து காளிகாட் சென்றோம். பழமை மாறாத மஞ்சள்நிற அம்பாசிடர் கார்கள் கொல்கத்தாவில் மட்டும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.. அந்த வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்கிறதா? என்னவோ! கொல்கத்தா டாக்சிகளில் பயமின்றி செல்லலாம், மீட்டருக்கு மேலே எவ்வளவு கேப்பானொ? சூடுவச்சிருப்பானோ என்று பயப்படவேண்டாம். சாலைகளில் டிராபிக் ஜாம், காரன் சத்தம் பழகிக்கொள்ள வெண்டும். ஒரு வண்டிக்கும் அடுத்த வண்டிக்கும் இன்ச் கேப் இடைவெளியில் நிப்பாட்டுகிறார்கள். நமக்குத்தான் எங்கே போய் இடிச்சிருவானோ? என்ற பயம்.
நவம்பரில் வரவெண்டிய குளிர் திசம்பர் முதல் வாரம் வரை வரவேயில்லை, தாமதம் கடந்த ஆண்டைவிட குறைந்தபட்ச வெப்பநிலை 7டிகிரி அதிகம் என்பதை நாளிதழில் பார்த்தேன். காளிகாட்டில் கோமளவிலாஸ் ஹோட்டல் தமிழரால் நடத்தப்படுகிறது, அந்த ஹோட்டல்காரர்களே பனானா லீப் என்ற உணவகத்தை நடத்துகிறார்கள். கொல்கத்தாவில் முதல்தர தென்னிந்திய உணவு இங்கே தான் கிடைக்கிறது. காலையில் நல்ல காபியை அருந்துவதற்கு நடைபயிற்சி செல்வோர் 6 மணிக்கு வந்து செல்கிறார்கள். நாங்கள் சுவையான காபி குடிப்பதற்கு இங்கே தினம் தவறாமல் வருவதாக வயதான தம்பதிகள் சொன்னார்கள். ஆம் சரவணபவன், அன்னபூர்ணா காபியை விட சிறந்த காபி என் எனது மனைவியும் சொன்னார்கள். ’ கோமளவிலாஸ்’ காளிகாட் மெட்ரோவிலிருந்து நடக்கிற தூரம்தான்.
எந்த இடங்களை பார்க்கவேண்டும் என்ற லிஸ்ட் முன்னமே தயாரித்திருந்தேன் .
விக்டோரியா மெமோரியல்
காளிகாட் கோவில்
ஹொரா பாலம்
தட்சினேஸ்வர் கோவில்
பேலூர் மடம்
மெட்ரோவில் பயணம்
மில்லினியம் பார்க்
நியூ மார்க்கெட்
சயின்ஸ் சிட்டி
காலெஜ் ரோடு
இந்தியன் காபி ஹவுஸ்
ஜெயின் மந்திர்
பி.பி.டி பாக்
ரைட்டர்ஸ் பில்டிங்
அன்னை தெரஸா நினைவில்லம்
ட்ராமில் பயணம்
இந்தியன் மியூசியம்
தாகூர் இல்லம்
மார்பிள் பேலஸ்
பிரின்சிப் காட்
இரபீந்திரசரொவர் ஏரி
பிர்லா கோளரங்கம்
- இன்னும்சுற்றுவேன்
---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக