புதன், 2 ஜனவரி, 2013

Feudel to Modern Industrial socity.....


சமீபத்தில் அவரது 125வது  பிறந்தநாளை தேசமெங்கும் கொண்டாடினார்கள் அவர் கணிதமேதை ராமானுஜன். அவர் இறந்தபோது ஈமச்சடங்கு செய்வதற்கு அவரது சொந்தபந்தங்கள் வரமறுத்துவிட்டார்கள் ‘ஹிந்து’ பத்திரிக்கையின் அப்போதைய ஆசிரியர் கஸ்தூரிரங்கனின் முயற்சியால் அவரது ஈமச்சடங்கு நடைபெற்றது, அவரை சாதிவிலக்கம் செய்ய அவர் ஒன்றும் பாரதியைப் போல் புரட்சி கவிகளை பாடிவிடவில்லை பிராமணர்கள் ‘கடல்கடந்து’ செல்லக்கூடாது என்பதை சாஸ்திரம் கூறுகிறதாம். இதை அவர் மீறியதால் அந்த நிலைமை அவரது இறுதி ஊர்வலத்தில்.

1857 முதல் இந்திய சுதந்திரப்போர் என்றழைக்கப்படுகிற சிப்பாய்ப்புரட்சியை துவக்கியவர்கள் வெள்ளை ராணுவத்தில் விசுவாசிகளாக இருந்துகொண்டு அவர்களுக்கு சேவைசெய்துவந்த சிப்பாய்கள்தான். பன்றி மற்றும் பசுவின் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த மாட்டோம் என்று இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் வெகுண்டெழுந்தார்கள். அந்த புரட்சியின் நாயகன் மங்கல் பாண்டே வங்காள ராணுவத்தில் பாரக்பூரில் பணிபுரிந்தான், வெள்ளை ராணுவத்தில் ஏராளமான படித்த பிராமணர்கள் சிப்பாய்களாக இருந்தார்கள், இஸ்லாமியர்களும் இருந்தார்கள். அப்போது வெள்ளை  ராணுவத்தில் இருந்தால் அப்படியொரு செல்வாக்கு. பிராமணர்கள் ‘கடல்கடந்து’ செல்லக்கூடாது என்பதை மனுஸ்ருமிதி சொல்கிறது என்பதற்காக அவர்கள் வங்காளராணுவம் சார்பாக பர்மியப்போரில் பங்கு பெற மறுத்ததற்காக 1830 வாக்கில் பீரங்கியின் வாயிலில் கட்டிவைத்து சுடப்பட்டார்கள், தப்பியவர்கள் கடலில் விழுந்து மாண்டார்கள். வெள்ளை ராணுவம் தங்கள் மதத்தை அவமதித்த செயல் அவர்கள் மனதில் குடிகொண்டது . அந்த சிப்பாய் புரட்சியில் அதே கொழுப்பு தடவிய குண்டுகளை இந்து- முஸ்லீம் சிப்பாய்கள் கடித்து வெள்ளை ராணுவத்திற்கு எதிராக போரிட்டார்கள். சமூகத்தேவை என்று வந்துவிட்டால் மத ஆச்சாரம் தூக்கியெறியப்பட்டது.

சுதந்திரப்போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை வெள்ளை அரசாங்கம் 1906ம் ஆண்டில் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை விதித்து பர்மா மாண்ட்லே சிறையில் அடைத்தது. கிரோல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையாளர் ‘திலகர் இந்திய வன்முறைப் புரட்சியின் தலைவர்’ என்று எழுதியதால் அவர்மீது மானநஷ்ட வழக்கு போடுவதற்கு 1918ம் ஆண்டு திலகர் லண்டன் சென்றார். 13 மாதங்கள் கழித்து இந்தியா திரும்பியவர் பம்பாய்க்கு வந்ததும் அவர் செய்த முதல் காரியம் 1000 பிராமணர்களுக்கு உணவளித்து ‘சகஸ்கர பிராமண பூஜை’ என்பதை நடத்தினாராம். எதற்காக? பிராமணர்கள் கடல்கடந்து சென்றால் பாவம் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் இருந்துள்ளது.

அப்போது  சாதிவிலக்கம்  செய்யப்பட்டவர்கள் இப்போது  கொண்டாடப்படுகிறார்கள்,  ஏனென்றால் சமூகத்தின் தேவைக்காக எல்லாம் மாறும் .
 

1 கருத்து:

kashyapan சொன்னது…

Wednesday, January 02, 2013
ஹரிஹரன் அவர்களே!
நீதிபதி கட்ஜு சொன்னது சரிதான் ...!

பதிவுலக நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கத்தாரிலிருந்து தோழர் ஹரிஹரன் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு "சம்ஸ்கிருத மொழி 5சதம்,"மதம்" 95 சதம் "அறிவியல்" என்று அவருடைய வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

எண்பது வயதை (77) நெருங்கிக் கொண்டிருக்கும் நான் இன்றும் மார்க்சிய மாணவன் தான்.எந்த ஒருமொழியும் அதன் தோற்றம்,வளர்ச்சி ஆகியவற்றை கணக்கிட்டால் அறிவியல் ரீதியானது தான்.பயன்பாட்டில் அதன் அழுத்தம் முன்பின்னாக மாறலாம்.

சம்ஸ்கிருதம் தேவ பாஷை என்றும் அது அந்தணைரகளின் மொழி என்றும் கிருத்துவத்தை வளர்க்கவந்த பாதிரிமார்கள் சொன்னார்கள். அன்றைய இனவாத அரசியலுக்கும்,பிரிட்டிஷ் அடிவருடிகளுக்கும் அது சௌகரியமாகப்போனது..

உண்மையில் அறிவியல் கருத்துக்கள்,தத்துவ விசாரணைகள் சம்ஸ்கிருத மொழியில் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் :

பொருட்களில் உயிருள்ளவை உயிரற்றவை என்று உள்ளன ! உயிருள்ளவகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதாவது உயிர் என்றால் என்ன? இதை இன்றய அறிவியல் விளக்கியுள்ளது!


"எந்த ஒரு பொருள் தனக்கு தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறதோ , எந்த ஒரு பொரூள் தனக்குத் தேவையற்றதை தன்னிலிருந்து வெளியேற்றி கொள்கிறதோ அது உயிருள்ள பொருளாகும் "
இதனை ஆங்கிலத்தில் catabolism ,metabolism என்கிறார்கள்.


எல்லா மதத்தினரும் "நீத்தார் நினைவினை" சடங்காக அனுசரிப்பார்கள்.இந்துக்கள் புரோகிதரை வைத்து இதனை செய்வார்கள். அவர் "பிராணோவா அன்னம்!
தத் வ்ரதம் !
அன்னம் ந நிந்தயேத் !
அன்னமேவ பிராணன் !
என்று ஓதுவார். அதன் அர்த்தம் அவருக்கும், திருப்பிச் சொல்பவருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருள்
உயிர் என்பது உண்வு மட்டுமே !
அதிகமாகவோ குறைவாகவோ உண்ணாதே !
உணவை வெறுக்காதே !
உணவுதான் உயிர் !
கடவுளை நம்பாதவர்கள்,வேதத்தை மட்டும் நம்பி கடவுளை நம்பாதவர்கள், என்று தத்துவ வாதிகள் உள்ளனர். கபிலர்,ய்க்யவல்கியர்,பதஞ்சலி என்று அறிவியல் ரீதியாக சிந்திப்பவர்கள் உண்டு .

ஹரிகரன் அவர்களே ! நீங்களோ,நானோ அவனோ அவர்களோ எற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீதிபதி கட்ஜு சொன்ன உண்மை பளிச்சிடவே செய்கிறது..!