வியாழன், 27 டிசம்பர், 2012

சர்.வில்லியம் ஜோன்ஸ்...



இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், கி.பி. 1600 முதல் வர்த்தக நொக்கத்திற்கு வந்து அதை மட்டுமெ 1757வரை செய்துவந்த காலம் பகுதி ஒன்று. இந்த பகுதியில் அவர்கள் வியாபாரம் மட்டுமெ செய்தார்கள். 1757க்கு முன்பிருந்தே இந்திய அரசர்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியாக இருந்த பிரிட்டிஷார் ராணுவவீரர்களை சப்ளை செய்தார்கள் அவர்கள் மொகலாய அரசர்களுக்காகவும் போர்செய்திருக்கிறார்கள். 1757ல் பிளாசிப்போர் நடந்துமுடிந்துஅதில் ப்ரிட்டிஷ் ராணுவம் வெற்றிபெற்றதை அடுத்து அதற்கான செலவுத்தொகையை பணமாக அளிக்காமல் வங்காளத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை மொகலாய அரசர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்துவிட்டார்கள்.

இரண்டாம் பகுதி என்பது 1757 முதல் 1857 சிப்பாய்புரட்சி வரையிலான காலகட்டம், இந்த காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவை பற்றி கற்றார்கள், வரலாறு, மொழி, இலக்கியம் எல்லாவற்றையும் மற்றும் மக்களை தெரிந்து கொண்டால்தான் அவர்கள்மீது ஆட்சி செலுத்தமுடியும்.

மூன்றாம் காலகட்டம் என்பது சிப்பாய்புரட்சி முதல் இந்திய விடுதலைவரை (1857 -1947) இந்தியர்களை கடுமையாக சுரண்டினார்கள், அடக்குமுறை செய்தார்கள். அவர்களுடைய ராணுவத்திற்கு ஏராளமான பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்தார்கள். இரண்டாம் காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொண்டதால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி ஆட்சி செய்தார்கள். இந்த கட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது பிரிட்டிஷ் வருகைக்கு பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு நம்மை தாழ்வுமனப்பன்மை கொள்ளச்செய்தார்கள். அதுதான் இன்றுவரை வெள்ளைக்காரன் செய்தால் அது நல்லாத்தான் இருக்கும் என்று நம்பிவருகிறோம். இங்கிலாந்தில் சாதாரணத்தொழிலாளியாக இருந்தவன் இங்கே வந்து நமக்கு எஜமானரானர்கள். இப்போதும் கூட வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனக்களில் இங்கிலாந்தில் ஓய்வுபெற்றவுடன் இங்கேவந்து மேனேஜராக வெலைசெய்கிறார்கள். நாம் அவர்களை மாஸ்டர்களாக ஏற்றுகொள்வதற்கு ஆங்கிலம் என்ற மொழியும் நம்முடைய் தாழ்வுமனப்பான்மையும் தான் காரணம்.

சர் வில்லியம் ஜோன்ஸ் 1783ல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக வந்தார், 1746ல் பிறந்த இவர் சிறுவயதிலேயே அருந்தினாளராக இருந்ததால் கிரேக்கம், லத்தீன், பாரசீகம்,ஹீப்ரு அரேபிய மொழிகளை மிகச்சிறிய வயதிலெயே கற்றறிந்தார். ஆக்ஸ்போர்டு பழ்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான ‘சம்ஸ்கிருதத்தை’ பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் ஆசியரை தேர்ந்தெடுத்தார். அந்த வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் சர்.வில்லியம் ஜோன்ஸ. தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதை பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சிபெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் லத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். லத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

 

1 கருத்து:

kashyapan சொன்னது…

kindly visit kashyapan.blogspot.com