திங்கள், 27 பிப்ரவரி, 2012

கனவிற்கு ஏது எல்லை......

வாசிப்பு தளத்தில் ஒரு நண்பர் அறிமுகமானார், புத்தகங்களை பகிர்ந்துகொண்டோம். நான் சில என்னுடைய வாசிப்பு அனுபவங்களை வலைப்பூவில் எழுதுவதை அவரும் வாசித்துவிட்டு என்னிடம் எப்படி வாசிப்பிற்க்கும், அதைப்பற்றி எழுதுவதற்கும் நேரம் கிடைக்கிறது என்று கேட்டார், கஷ்டமான கேள்வி தான். இப்படி செய்வதானேலேயே குடும்பத்தில் அமைதி கெடுகிறது. தனிக்குடும்பத்தில் குழந்தைகள் தாய்தந்தைகளுடன் மட்டுமே விளையாடும் சூழல், எல்லா சூழ்நிலையிலும் புறத்தே குழந்தைகளால் விளையாட காலநிலை உகந்ததாகயில்லை. அவர்களுடன் நாம் விளையாடவேண்டும், பாடம் சொல்லித்தர வேண்டும். கணவன் இந்த வேலையை செய்யாதபோது மனைவி செய்யவேண்டியுள்ளது, வழக்கமான வேலைகளுடன் கூடுதல் சுமையும் சேர்கிறது. அப்போது அந்த நண்பர் நாம் குழந்தைகளுடன் விளையாடக்கூடிய பருவத்தில் அவர்களுடன் நேரம் செலவழிக்காமல் விட்டால் பின்னர் வருந்துவோம் என்றார். என்னுடைய மகனும் என்னிடம் தன்னோடு விளையாடு என்று கேட்டுகொண்டேயிருந்ததை நான் பெரும்பாலான நேரங்களில் தவிற்த்ததை நினைத்துப்பார்த்தேன்.

இச்சமயத்தில் தான் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பில் ‘பிழைதிருத்துபவனின் மனைவி’ என்ற சிறுகதையை வாசித்தேன். தன்னுடைய கணவன் ஒரு பதிப்பகத்தில் எழுத்துப்பிழை திருத்தும் வேலையை விரும்பி எப்போதும் செய்துகொண்டேயிருக்கிறார். வீட்டில் மனைவி என்பவர் இருக்கிறார், அவருக்கும் சில ஆசைகள் இருக்கும் என்பதை நினைக்கவே இல்லை. காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் அவரின் வேலை இரவு சிலநாட்களில் பின்னரவு வரை நீள்கிறது. மனைவுயுடன் உரையாடுவ்தேயில்லை, அந்த மனைவி தான் படித்த காலத்தில் பாடபுத்தகத்தைத் தவிற வேறெந்தெ அச்சடித்த காகித்தை பார்த்ததேயில்லை. கடைசியில் அந்த பெண்ணிற்கு கணவன் மீது கொண்ட கோபம் அச்சடித்த காகிதத்தின் மேல் ஏற்படுகிறது, கடவுளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேண்டுகிறாள் இந்த அச்சடித்தகாகிதங்கள் ஒழியவேண்டும் என்பதுதான் அவள் பிரார்த்தனை. கடைசியில் அவளுக்கு பிறழ்வு ஏற்படுவதாக கதை முடிகிறது. ஏன் இலக்கியம் வாசிக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இதை நான் மற்றொருவருடைய அனுபவமாக பார்ப்பதற்கும் இது யாருடைய வாழ்விலும் இது நேராமல் இருக்கவேண்டும் என்பதை சொல்வதாக பார்க்கிறேன்.

குடும்பம் பற்றி பிரபஞ்சன் கட்டுரை ஒன்றை வாசித்தேன் ‘பறவைகள் பாடாத பகல்பொழுது’
குடும்ப அமைப்பைப் பற்றி கேள்வியெழுப்புகிறது. மனிதன் தோன்றியவுடன் குடும்பமும் தோன்றவில்லை, கணவன் மனைவி குழந்தை என்று வாழாமல் மக்கள் கூட்டம் சமூகமாக வாழ்ந்திருக்கிறது. தனிச்சொத்து தோன்றியவுடன் அதை தன்னுடைய வாரிசுக்கு மட்டுமெ சேர்க்கவேண்டும் என்ற நோக்கில்தான் குடும்ப அமைப்பு தொன்றியிருக்கிறது. அதுவரை சுதந்திரமாக இருந்த பெண் அடிமையாகிறாள். கணவனோ மனைவியோ அவர்களுக்கான வாழ்க்கையை வாழுவதில்லை. இந்த அமைப்புதான் நீடித்த அமைப்பு என்று மதநிறுவனங்கள் கற்பித்தாலும் இது நீடித்திருக்கப் போவதில்லை. எப்படி கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாக மாறியதோ அதேபோல் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் மானுடம் வாழ்வது சாத்தியம்தான். இந்தியக் குடுமப அமைப்பை மேற்கத்தியநாடுகள் பெருமையோடு பார்ப்பதாக இங்கே புழங்காகிதம் அடைகிறார்கள். தாய் தந்தையரை பேணாத குடும்பங்களும் இங்கே இருக்கின்றன. திருமணம் செய்யாத ஆணை ஏற்றுக்கொள்கிற இச்சமூகம் திருமணம் ஆகாத பெண்களை தப்பானவர்களாவே அணுகுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் குடும்பமானவர்கள் தயங்குகிறார்கள்.இரு பாலருக்கும் பொதுவான கற்பு , ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்று இலக்கியத்தில் ஏற்றிவிட்டார்கள். விபச்சாரம் பெண்களால் மட்டுமே நடத்தப்படுவாதாக சமூகம் கருதுகிறது. விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவிபோல் என்றான் பாரதி, சகமனிதனின் துன்பத்தை தனது துன்பமாக உணரவைக்கும் நிலை உய்யாதா? என்பது ஏக்கமாகவே யிருக்கிறது.நான் சில கற்பனைகளில் மூழ்குவேன், எல்லோரும் வாழ்வதற்காக செய்கின்ற வேலையை விருப்ப வேலையாக சமூகத்திற்கு செய்யும் நிலை வராதா? உடல் உழைப்பை கேவலமாக கருதும் சிந்தனை மாறவேண்டும். சேகுவேரா ஒரு நாட்டின் அமைச்சராக இருந்துகொண்டு கரும்புத்தொட்டத்திலும் ஆலைகளிலும் உடழுழைப்பு செய்ததை ஓர் முன்னோடியாக பார்க்கிறேன். அனைவரும் எட்டு மணிநேரம் உழைக்கவேண்டும், நாம் செய்கிற சமையல் கூட சமூக அடுப்பாக மாறவேண்டும். கல்வியையும் மருத்துவசேவையும் அரசாங்கத்தின் கடமையெனக் கருதவேண்டும் என்ற நிலை வரவேண்டும், எல்லாம் கனவு தான், கனவிற்கு ஏது எல்லை.

கருத்துகள் இல்லை: