வியாழன், 30 டிசம்பர், 2010

நீதித்துறை : சீனாவும் இந்தியாவும்

அண்மையில் சீனாவின் நீதித்துறையைப் பற்றி செய்தி வந்தது, அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்டனை உறுதிசெய்யப்படுகிறதாம், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் சீனாவின் நீதித்துறை பார்வையிடச் சென்ற ICJ என்ற சர்வதேச நீதிபதிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட்டுள்ளார்கள். சீனாவில் 23 வயது நிரம்பியவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கமுடியும், ஒருவர் நீதிபதியாவதற்கு முன்பு வழக்கறிஞராக பணியாற்றவேண்டிய அவசியம் இல்லை. NJE எனப்படும் National Judiciary Examination தேர்வில் வெற்றியடைந்தால் சில மாதங்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றபின்பு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். NJE என்பது இந்தியாவின் ICS தேர்வுக்குச் சமமானது. பிரைமரி கோர்ட் லிருந்து சுப்ரீம் கோர்ட் வரை முழுவதும் கணணிமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்திற்கான வசதிவாய்ப்புகள் பிரைமரி கோர்ட், இண்டர்மீடியட் கோர்ட், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நீதிமன்றங்களுக்கும் சமவசதி வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.சீனா முழுவதும் 1,90,000நீதிபதி பணியிடங்கள் உள்ளன, அதில் 700 பேர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள். நீதித்துறைக்கான மொத்த பணியாளர்கள் 3,20,000 பேர். பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மீது ஊழல் புகார் எழுப்பபட்டால் நீதிபதிகளின் கமிட்டி பரிந்துரைக்குப் பின்னர் அரசு நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்துவிடுகிறது. சீனாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவும் சீன நீதித்துறையிடம் கற்றுக் கொள்ளவேண்டியதுள்ளது.

இந்தியாவில் எல்லாத்துறைகளைவிட நீதித்துறையில் அதிகமாக லஞ்சம் ஊழல் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஊழல்பேர்வழிகள் என்று பேட்டிகொடுத்ததால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானார். ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.
ஆனால் கடைசியாக உச்சிநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது இப்போது ஊழல் புகார் வந்துள்ளது. குற்றச்சாட்டை வைத்தவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தான்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”.
என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது தன்னுடைய சொத்துமதிப்பு ரூ25000 மட்டுமே எனகூறியவரின் சொத்துமதிப்பு இன்று பலகோடி மதிப்பு வாய்ந்தவை. தகவல் அறியும் உரிமச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்துவிபரம் வெளியிடவேண்டும் என்ற விவாதம் வ்ரும்போது உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி அதிலிருந்து விதிவிலக்காவார் என்று தப்பித்தவர். அண்மையில் மத்தியயமைச்சர் ராசா சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டதாக செய்தி வந்தபோது அதற்கு உடந்தையாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கும்,இல்லையென்றால் இவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பார்களா? கறைபடிந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிப்பாரா அல்லது நான் ஒரு ‘தலித்’ என்று தப்பிக்கப் பார்ப்பாரா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் அறிக்கைவிடவில்லையே?

2 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

தலித் என்பதால் தானே KGB நீதிபதியாகவும், ராசா மந்திரியாகவும் வர முடிந்தது. சலுகைகளை பயன்படுத்தி பதவிக்கு வந்த பிறகு அவர்கள் முன்னேறிய சமுதாயம் ஆகிவிடுகிறார்கள். ஊழல் என்று வந்தபிறகு தலித்தும் , அய்யரும் ஒன்றுதான்.
இது ஒரு தவறான மிக மோசமான முன்னுதாரணம். தலித்துகள் முன்னேறி, பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்றதொரு மாயத்தோற்றத்தை அது உண்டாக்கும்.

hariharan சொன்னது…

நன்றி, திரு.சிவகுமரன்..

இப்படி அவர்களை தாங்கள் தலித்கள் என பிரதிநிதித்துவப் படுத்துவதால் தாங்கள் செய்யும் ஊழல் போன்றவற்றைப் பார்க்கும் போது சமூகத்திற்கே தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டார்கள்.