வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு-2009இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பங்கேற்று தேர்தல் செலவீனங்களை இன்னமும் ஆணையத்திடம் தாக்கல் செய்யாத பாஜக உள்ளிட்ட 16 கட்சிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. தேர்தல் செலவுகளை மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெற்ற பணத்தின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெறவேண்டிய விவரங்களை தாமாகவே முன்வந்து வெளியிட்டுள்ளதை வரவேற்கவேண்டும். இதே அணுகுமுறையை மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சரகமும் தங்கள் துறை சார்ந்த விவரங்களை வெளியிட முன்வரவேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியிடத்தும் நாம் கணக்கு வழக்குகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறமுடியுமா என தெரியவில்லை ஆனால் அதற்கான யோக்கியதை பொதுமக்களாகிய நமக்கு இருக்கிறதா என தெரியவில்லை, ஏனைன்றால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நிறுவனங்களைப் போல செயல்படுகின்றன. அவற்றிற்கும் பொதுமக்களுக்கும் சம்பந்தம் இல்லை இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் பொதுமக்கள்/கட்சி உறுப்பினர்களிடம் நிதி பெறுவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களிடம் பெற்று வருகின்றன. அந்த கட்சிகள் ஆட்சியில் அமரும் போது நிதி வழங்கிய நிறுவனத்திற்கு ஏதாவது ஒரு வகையில் திருப்பி செலுத்தியாகவேண்டும் மட்டுமல்லாது கட்சியின் வளர்ச்சிக்கும் ஆட்சியிலிருந்து அறிவியல் பூர்வமாக! மக்கள் பணத்தை முறைகேடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.


சில அரசியல் கட்சிகளின் 2009க் கான மக்களவை தேர்தல் செலவைக் காண்போம்.

காங்கிரஸ் கட்சி
* கட்சியின் தேர்தல் செலவு மொத்தம் : 380 கோடி

இதில் விளம்பர செலவு : 207 கோடியே 88 இலட்சம்
பயணச்செலவு (தங்குமிடம் உட்பட) : 112 கோடியே 33 இலட்சம்
பாக்கியுள்ளவை இதர செலவீனங்கள்

பாரதீய ஜனதாக் கட்சி
* விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
* கட்சியின் தேர்தல் செலவு மொத்தம் : 10 கோடியே 26 இலட்சம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 26 கோடியே 16 இலட்சம்

பகுஜன் சமாஜ் கட்சி
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 21 கோடியே 23 இலட்சம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 4 கோடியே 10 இலட்சம்

திராவிட முன்னேற்றக் கழகம்
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 7 கோடியே 76 இலட்சம்

பாட்டாளி மக்கள் கட்சி
* விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை

தெலுங்கு தேசம்
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 8 கோடியே 74 இலட்சம்

சிவசேனா
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 8 கோடியே 15 இலட்சம்

கருத்துகள் இல்லை: