இந்தியாவில் இருபெரும் இதிகாசங்கள் என்று மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் கூறுகிறார்கள் ஆனால் இப்போது கீதை தான் மிகவும் பிரபலமடைந்துவருகிறது. கீதையை ஒருமுறை கூட படிக்காதவர்கள் அதன் ஒரு சுலோகத்தைக் கூட முழுமையாக கேட்காதவர்கள் கூட அதன் பெருஞ்சிறப்பை பேசிவருகிறார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தவர்கள் வெளியிட்ட கீதை வாசித்துப் பார்த்தேன். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை அதை வாசிப்பதற்கே அடிப்படை ஞானம் வேண்டும் போல். அதிலுள்ள சில சுலோகங்கள் டிவியில் மகாபாரதம் போடும்போது சில நிமிடங்களுக்கு வசனம் வரும் அது தான் ஞாபகத்தில் இருக்கிறது. யதா யதா தர்மஸ்ய.... இதை கேட்டால் சேகுவேராவின் வரிகளில் உலகில் எந்த மூலையில் அநியாயத்தைப் பார்த்து நீ கோபம் கொண்டால் என்னுடைய தோழனே என்று சொன்னமாதிரி இருக்கும். ஆனால் பகவான் கிருஷ்ணன் மோசமான கலியுகம் தோன்றுவதற்கு முன்பே த்வாபர யுகத்தின் முடிவில் மரணமடைந்து விட்டான். எப்போது தோன்றுவான் என்று தெரியவில்லை. சில ஊர்களில் பாறைகளில் இயேசுவருகிறார் என்று எழுதியது ஞாபகத்திற்கு வருகிறது, எனக்கு எல்லாம் ஒன்று தான்.பகவத்கீதை சுதந்திரப் போராட்டகாலத்தில் திலகர், அரவிந்தகோஷ்,பங்கிம் சந்திரர் போன்றோர்களுக்கு ஆதர்சமாக விளங்கியது.
ஜோசப் இடமருகு என்ற பகுத்தறிவுவாதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார், அவர் பகவத் கீதையைப் பற்றி ஆய்வு நூலை எழுதியுள்ளார். 1953ல் ‘கிறிஸ்து ஒரு மனிதன்’ என்ற நூலை எழுதியதற்காக அவரை இயேசு மதம் அவரை மதநீக்கம் செய்தது, இதைப் பார்த்த காலடி ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த சுவாமி ஆக்மானந்தர் அவருக்கு கடிதம் எழுதி தன்னை சந்திக்குமாறு கூறியிருந்தார். அவருடன் விவாதித்தபிறகு அங்குள்ள நூலகத்திலுள்ள சுவாமி விவேகானந்தர், இந்துமத பண்டிதர்கள் நூல்களை படிப்பதர்கு வாய்ப்பளித்தார். கீதையின் விளக்க உரைகள் பல்வேறு அறிஞர்கள் எழுதியா நூலகளை படித்திருக்கிறார் அதற்குப் பின்னர் தான் ஆய்வு நூலை எழுதியுள்ளார். இவருடைய மகன் தான் சணல் இடமருகு சில மதங்களுக்கு முன்பு மும்பையில் இரு தேவாலயத்தில் மேரியா? இயேசு ? தெரியவில்லை ஒரு சிலையின் கண்களிலிருந்து நீர் வந்திருக்கிறது, அதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து அதனால் சர்ச்சை? க்குள்ளானார்.
ஜோசப் இடமருகு எழுதிய “ பகவத் கீதை ஓர் ஆய்வு” என்ற நூலில் ஒரு தகவல் தருகிறார். பகவத் கீதையின் புகழை இன்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகமெல்லாம் சென்று சேர்ப்பதற்கு முன்பே கீதை புகழ்பெறுவதற்கு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காரணமாக இருந்துள்ளனர் என்கிறார். 18ம் நூற்றாண்டில் உண்டான தொழிற்புரட்சியால் ஐரோப்பாவில் பல புதிய கொள்கைகள் தலைதூக்கின. அரசர்களுக்கும் மதத்திற்கு எதிராக பேசுவதில் மக்கள் திறமை காட்டினார்கள். 1789 ல் பிரான்சில் புரட்சி ஏறப்ட்டதை அடுத்து அதன் அலைகள் பிரிட்டனையும் அடைந்தன. இந்த அலைகள் வேகமாக பிரிட்டிஷ் காலனிகளில் தங்கள் ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங் அதற்காக கண்டுபிடித்த மார்க்கம் இந்தியர்களை அவர்களுடைய பழைய மதங்களின் பால் திருப்புவதேயாகும். வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு “ஏசியாட்டிக் சொசைட்டி” தொடங்கியதன் பிண்ணனி இதுதான். 1785ம் ஆண்டிலேயெ வாரண் ஹேஸ்டிங்க் வேண்டுகோளுக்கிணங்க சார்லஸ் வில்கின்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் ஆரம்பிக்கப் பட்ட போர்ட் வில்லியம் கல்லூரியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் முதலிய நூலகளின் ‘மகத்து’வத்தை வெளியே கொண்டுவர பிரிட்டிசார் முயற்சித்தபோது அதன் ஒருபக்கத்தைத்தான் நாம் பார்த்தோம். இந்தியாவுக்கு ஏற்றது இந்த மத நூல்களின் அடிப்படையில் அமைந்த பழைய நாகரீகம்தான் என்றும் , வெளிநாட்டில் உண்டாகின்ற புதிய சிந்தனைகளைவிட அது மகத்தாஅது என்றும் அவர்கள் பிரச்சாரம் காரணம், ஐரோப்பாவில் வளர்ந்துவந்த புரட்சிக்கருத்துகள், பகுத்தறிவ்ய் சிந்தனைகள் இந்தியாவில் பரவிவிடக்கூடாது என்ற எண்ணம் தான். இது ஓரளவுவரை நிறைவேறவும் செய்தது. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத சிந்தனை தோன்றுவதற்கு காரணமாக இருந்தார்கள் கடைசியில் மத அடிப்படியில் இருகூறாக பிரித்துவிட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போது ஏசியாட்டிக் சொசைட்டி மிகப்பெரிய நூலகமாக காலத்தின் பெட்டகமாக இருந்துவருகிறது என்பது நல்லசெய்தியும் உண்மையும் கூட.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக