சனி, 18 ஆகஸ்ட், 2012

கலாச்சாரக் காவலர்கள்


 விடுமுறையில் நான் கோவையில் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் எனது நண்பன் வீட்டிற்கு வந்ததால் மதிய உணவிற்கு சிக்கன் செய்யலாம் என்று கடைத்தேருவிற்கு சென்றிருந்தேன். வழக்கமாக வாங்கும் கடையில் கோழி ஸ்டாக் இல்லை. அடுத்த கடைக்கு போகலாமென்று நடந்தேன்.  வரிசையாக சிக்கன் ஸ்டால்கள் மூடப்பட்டிருந்தன. காரணம் தெரியாமல் சாலையில் தொடர்ந்தேன். அங்கு ஒரு சிக்கன் கடை திறந்து ஆட்கள் இருந்தார்கள். அருகில் சென்றபோது அவர்கள் கடையை முடச்சொன்னார்கள் இன்று கோகுலாஷ்டமி தெரியாதா உனக்கு? என்று கடைக்காரரிடம் 'காவி' வீட்டி கட்டியவர் பைக்கிலிருந்து சவுண்ட் கொடுத்தார். நான் சென்று ஒரு கிலோ சிக்கன் என்றேன். காவி ஆசாமி என்னுடைய 'அடையாளத்தை'  நோக்கினார். நான் சிக்கன் வெட்டும் வாகை பார்த்துக்கொண்டீயிருந்தேன். மீண்டும்  ஒரு கஸ்டமர் வந்ததால் இடத்தை காலி செய்தார். கடைக்காரரரிடம் பேசியபோது புலம்பினார், புதுசு புதுசா சொல்றானுங்க இப்ப ரெண்டு கஸ்டமர் வராட்டி இன்னைக்கு பொழப்பு போயிருக்கும் என்றார். 

அரசாங்கம் காந்தி ஜெயந்தி அன்றுதான் மதுபானம் கசாப்புக் கடைகளை முடச்சொல்லியிருக்கிறது, கர்நாடக சட்டசபையில் மக்கள் பனி என்றும் பாராமல் 'நீலப்படம்' பார்த்த கலாச்சாரக்காவலர்கள் தமிழகத்திலும்  தங்கள் அஜெண்டாவை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்துக்களில் கருப்பசாமியை மசான்க்கொல்லை தெய்வங்களை வணங்குபவர்களுக்கும் கோகுலாஷ்டமிக்கும்  என்ன சம்மந்தம்? இன்னும் இந்தியாவில் வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையுல்லாம் அவர்கள் காணவில்லை. கலாச்சாரக்காவலர்கள் ஒருபக்கம் ’’ஒருமுகப்படுத்துதல்’ வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! மும்பையில் கசாப்புக்கடை காண்ற்றாக்டர்கள் அத்துணை பெரும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள்! சிவசெனையோ,பா.ஜா.க.வோ அவர்களிடம் வாலாட்டமாட்டார்கள். அவர்கள் தான் இவர்களுடைய கஜானாவை நிரப்புவர்கள்!---காஸ்யபன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை... நல்லாச் சொன்னீங்க... நன்றி...