ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தேசமென்பது மண்ணல்ல..

ஒரு தேசபக்தனா நீ?


சொல்லாதே சப்தமிட்டு அதை!

தற்புகழ்ச்சி நல்லதல்ல் ஒருபோதும்!

சாதனைகளை அமைதியய்ச் செய்!

மக்கள் முடிவுசெய்யட்டும் அதுகண்டு!



எலும்பு வரை நம்து தேசத்தைச் சுரண்டி

பிணந்திண்ணிகள் உறிஞ்சிவிட்டன,

நம்பாதே அந்தப் பிசாசுகளை ஒருபோதும்!

மற்றவர்கள் மகிழ்வதுகண்டு

மகிழ்ந்திடு சோதரா நீயும்.

வாழ்க்கைப் போரில் நீ

உணர்ந்து நட

ஒற்றுமையின் பாடத்தை.



ஆனந்தத்தில் செல்வந்தர் திளைக்க

நாள்முழுதும் அழும் பாவப்பட்டோர்,

ஆனந்தம் இவர்க்கு எப்படி வரும்?

ஆகவே நண்பனே! சுயநலத்தை மற,

சக மனிதர்க்கு உதவிக்கரம் நீட்டு,

தேசமென்றால் மண்ணல்ல, மக்களே!

தேசமென்றால் மண்ணல்ல, மக்களே!

மனிதர்கள், மனிதர்கள் அவர்களே தேசம்!

கரங்களோடு கரம் கோர்த்து

இணைந்து மக்கள் நடை போடட்டும்

அனைத்து நம்பிக்கைகள் நன்மைகளோடு

வாழ்ந்து,இயங்கி,நேசித்து சிரிக்கட்டும்!



வேறுபடலாம் மனித நம்பிக்கைகள்

ஆனால் அதர்கு அர்த்தமென்ன.

சமூகம் முழுவதன் ஆன்மா ஓர்நாள்

எழுந்து வள்ர்ந்து எப்போதும் பிரகாசிக்கும்.

ஒரு மரத்தைப்போல ஒரு தேசமும்

அன்பினால் பூத்துக் குலுங்கட்டும்!

உழைக்கும் மக்களின் வியர்வை அலைகள்

அந்த மரத்தின் வேர்களுக்கு நீரூற்றட்டும்

செல்வத்தை அது வாரிவழங்கட்டும்!

பசுந்தளிர் இலைகளின் மறைவில்

ஒரு பறவை கீதம் பாடும்!

அதைக்கேட்டு அனைத்து இதயங்களிலும்

தேசபக்திப்பாடல் பீறிடெழும்! ---------- குரஜாடா அப்பாராவ் (தெலுங்கு) எழுதிய கவிதை

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! 1957ம் ஆண்டு வாக்கில் ஹைதிராபாத்தில் வசித்தேன்! அப்போது குரஜாடா அப்பராவ் பற்றி தெரிந்து கோண்டேன். "தேசமிண்டே மனுஷலு" என்ற அவரதுபாடலை எனது தெலுங்கு நண்பர்கள் உணர்சிகரமாக அதெசமயம்மெல்லிய குரலில் பாடுவது இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவருடைய "கன்யாசுல்கம்" என்ற நாடகம் குழந்தைத் திருமனத்தின் கோரமுகத்தை சித்தரிக்கும் நாடகமாகும். அதன் நூற்றாண்டு விழாவை 1962ம் ஆண்டு நடத்தினார்கள்.---காஸ்யபன்