வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கடவுளுக்கு காணிக்கையா? லஞ்சமா?

திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு காணிக்கையாக ‘சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்கள் அளித்த கீரிடத்தை திருப்பிக்கொடுக்க ஒரு வாரத்தில் தேவஸ்தானம் முடிவு செய்யும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த கீரிடத்தின் மதிப்பு ரூ45 கோடி, 2.5 அடி உயரமுள்ள அந்த கீரிடம் 30 கிலோ தங்கத்தாலும் 70,000 வைரக்கற்களாலும் செய்யப்பட்டு இரண்டு வருடத்திற்கு முன்பு பணக்காரக் கடவுளுக்கு காணிக்கை செய்துள்ளனர். இந்த ரெட்டி சகோதரர்கள் இந்த வருடத்தில் காளஹஸ்தி கோவிலுக்கும் ரூ 15கோடி மதிப்பிலான ஆபரணங்களை காணிக்கை செய்துள்ளனர். கோடிகோடியாக யாரால் காணிக்கை அளிக்க இயலும் என்பதை முன்பே தேவஸ்தானம் யோசிக்கவேண்டாமா? இப்படி முறைகேடாக சம்பாதித்தவர்கள் அளித்த காணிக்கையை திருப்பியளித்தால் கோவிலில் அசையாத சொத்துக்கள் தான் மீதமிருக்கும்.



இந்தியாவின் இயற்கை வளத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தனிச்சொத்தாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கொள்ளையடித்து சேர்த்த பணம் தான். இந்தப் பணம் தான் கர்நாடக்த்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. இவர்கள் எத்தனை ஆண்டுகளாக சட்டத்திற்க்கு விரோதமாகவும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். அரசியல் சதுரங்க விளையாட்டில் இன்று மாட்டிக்கொண்டவர்கள், இன்னும் எத்தனையோ எத்தன்கள் இயற்கை வளத்தை சூறையாடியவர்கள் கம்பிகளுக்குள் செல்லவேண்டியவர்கள் புனிதர்களாக இருக்கிறார்கள், சென்செக்ஸில் அவர்கள் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் இருக்கும்வரை நம்முன் புனிதர்கள்தான். 2G விவகாரத்தில் தயாநிதியை குற்றமற்றவர் என்று வாசித்துவிடுவார்கள். அவர் சங்கத்தில் இருக்கிறாரோ என்னவோ? கடவுள் முன்பு இவர்களும் பக்தர்கள், இவர்கள் செய்யும் சட்டவிரோத தொழிலால் வாழ்க்கை இழந்த சாமான்யர்களும் பக்தர்கள், கடவுள் யார் பக்கம்? பாவம் கடவுள்.

கருத்துகள் இல்லை: