ஞாயிறு, 27 மார்ச், 2011

தேர்தலோ தேர்தல்...

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் மனுத்தாக்கல் முடிந்துவிட்டது,இனி தேர்தல் முடிவுகள் வரும்வரை எந்தக்கட்சியும் அணி மாறமுடியாது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் செய்துகொண்டது கூட்டணியா? அல்லது தொகுதி உடன்பாடா? தெரியல. கூட்டணின்னு சொன்னா அதக்கு ஏதோ __________முண்ணனின்னு பேரு இருக்கனும், ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிடணும், அதுக்கு கொள்கையெல்லாம் ஒண்ணாயிருக்கனும் (இருந்தா).பார்த்தவரைக்கும் மேற்குவங்கத்தில் இடதுசாரி கூட்டணியில எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை ஏன்ன அதுல எல்லாமே இடதுசாரி கட்சிகள். தேர்தல்ல போட்டியிடுவதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் எதை செய்ய்னும் செய்யக்கூடாது எல்லாமே கூட்டா முடிவெடுக்கிறங்க, இங்க அப்படியா. இவங்க எந்த சாரின்னே தெரியாது, எப்பவும் ஆட்சியில பங்கு வேணும் குறிப்பா மத்தியில, அங்க தான அதிகாரம் குவிஞ்சிகிடக்கு.

இலவசங்களை போட்டி போட்டு அறிவிப்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் சளைத்தவர்கள் இல்லை இவங்க ரெண்டு பேருக்கும் தான் கொள்கையளவில ஒத்துப்போகுது. அதாவது ஊழல், குடும்ப ஆட்சி ( அந்தம்மாவோட ஃபிரண்ட் குடும்பமா இருந்தா என்ன?) மதச்சார்பற்ற கட்சி?? திராவிடக்கட்சி, சுயநல அரசியல், தனிமனிதர்களை ஏசி அரசியல் நடத்துவது எல்லாமே ஒத்துப்போகுது. இந்தக் கூட்டணி எப்ப அமையுமோ, நடக்காதுன்னு யாராவது சொல்லமுடியுமா?

தமிழகத்தைப் போல் எந்த ஒரு மாநிலத்திலும் வாக்களர்களையும் குடிமக்களையும் இலவசதிட்டங்களாலும் வாக்குக்குப் பணம் கொடுத்தாலாவது ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிடலாம் என்பது இல்லை. வாக்காளர்களை இந்த அளவற்கு இழிசினர்களாக எந்த நாட்டிலும் கருதுவதில்லை. முறையாக அரசியல் என்பது சமூகசேவை என்பதன் அடிப்படையில் குடிமக்களாகிய நாம் தான் அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு பணம் தரவேண்டும், ஆனால் தலைகீழாக உள்ளது. இலவச டிவி, அடுப்பு, மிக்சி, கிரைண்டர், ஆடு, பசுமாடு அரிசி லேப்-டாப்பு என்ன அவலமான தேர்தல் அறிக்கைகள். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இல்வச டிவியை திருப்பியளித்து முதலமைச்சருக்கே இந்த மாதிரி இலவசம் வேணாம் நீங்களே எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்னு ஒரு விவசாயி சொன்னாரு எந்த ஊர்ய் பேரு ஞாபகமில்லை. நாம அப்படியா இருக்கிறோம் கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்டு (அது மக்கள் பணம் தானேங்கிற வியாக்யானம் வேற) அப்புறம் லஞ்சம் வாங்கறான், அய்யோ ஊழல் செய்றான்னு ஓலம் போடுறது.

ஊரெல்லாம் சாலையோரத்தில் தட்டிவைத்து அதில் “ தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு’ நாமக்கல் கவிஞரின் கவிதையின் முதல் வரிகளை மட்டும் எழுதியிருக்காங்க அடுத்த வரி சொல்லுது “தானம் பெறக்கூசிடுவான் ,தருவது மேலெனப் பேசிடுவான்” திட்டமிட்டு மறைத்து விட்டார்களோ? ஆட்சியதிகாரம் பெறுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாக்க்கு வேண்டும், பதவிக்கு வந்தவுடன் பெரும்பான்மை மக்களின் பர்ஸிலிருந்து பிடுங்கி மிகச்சிறிய குறைந்த எண்ணிக்கையிலான வசதிபடைத்தோருக்காக திட்டம் போடுவது. இப்படி அடியாள்வேலை தானே முதலாளித்துவ அரசியல்! சிந்திப்போம் மாற்றத்தை நோக்கி.....

கருத்துகள் இல்லை: