வியாழன், 31 மார்ச், 2011

பகிர்வு-1

எந்தத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பே அரசு நிர்வாகத்தை கையிலெடுத்துக் கொண்டது. காவல்துறையில் உயர் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். வாக்களர்களுக்கு பூத் ஸ்லிப் தேர்தல் ஆணையமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த,எல்லாரும் வாக்களிக்கவேண்டும் என்ற செய்தியுடன் நிறைய விளம்பரங்களையும் தேர்தல் ஆணையம் தயாரித்து அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்கிறது. பொதிகையில் அப்படிப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. சன்,ஜெயா,கலைஞர் போன்ற டிவிசேனல்களில் வருகிறதா என தெரியவில்லை. முக்கியமாக அந்த விளம்பரங்களில் பணத்திற்காக உங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை விற்காதீர்கள் எனவும், மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என செய்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயித்ததைப்போல் நடக்கப்போற தேர்தல்ல தில்லுமுல்லு பண்ணமுடியாம இந்தத் தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி போடுதேன்னு முதல்வர் தேர்தல் ஆணையத்தை திட்டுறாரு. நல்லவேளை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ’பார்ப்பனர்’ அல்லாதவராக இருக்கிறார். இல்லையென்றால் இது பார்ப்பனர்களின் சதி என்று தமிழர்? தலைவர் வீரமணியும் சேர்ந்திருப்பார். மேற்குவங்கத்தில் மம்தா சவுரவ் கங்குலி தேர்தல் ஆணைய விளம்பரத்தில் நடிக்கக்கூடாது ஏன்னா அவரு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்ன்னு குற்றச்சாட்டு. பணம் விநியோகத்தை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் ரெம்ப கறாரா பணம் கொண்டுபோன எல்லாரையும் பிடிச்சாங்க, உடனே அய்யோ பாவம் வியாபாரிகளை பாடாய் படுத்துறாங்களேன்னு கலைஞர் கண்ணீர் விடுறாரு. மத்திய அரசு சில்லரை வணிகத்தில அந்நிய மூலதனத்த அனுமதிச்சப்ப இந்த வியாபாரிங்க கஷ்டமெல்லாம் தெரியல. இப்ப திமுக விற்கு தேர்தல் ஆணையமும் எதிர்க்கட்சியாக மாறிவிட்டது.

மதுரையில் மு.க.அழகிரியின் ஓட்டுக்குப்பணத்தை பார்த்துவிட்டு அதற்கு ‘திருமங்கலம் பார்மூலா‘ன்னு பேரே வைச்சுட்டாங்க. இதப்பார்த்து தான் அமெரிக்கக்காரனுக்கே இந்திய அரசியல்வாதிகளை ஈஸியா விலைக்குவாங்கிறாலாம்னு தெரிஞ்சி 2008ல மன்மோகன்சிங்கை அவன் காப்பாத்தினான். தமிழக்த்தில் நேர்மைக்காக மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஆட்சியர் சகாயம் இவங்கலுக்கு வளைஞ்சு கொடுக்கல,வுடனே ‘மாற்றம் வேணுமின்னா ஓட்டுப் போடுங்க’ ஒரு மாவட்ட ஆட்சியரே சொல்ராறுன்னு பதறுராங்க. அவருடைய நேர்மையை நாமக்கல் வாசிகளிடம் கேட்டா தெரியும். தங்களுக்கு சாதகமாக இல்லாத கண்ணியமான ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை என்ன பாடு படுத்தினாங்கன்னு மக்களுக்குத் தெரியும். தேர்தல் ஆணையம் ரெம்ப கெடுபிடியா இருக்காங்கன்னு வேற எந்த மாநிலத்திலயும் கேரளா, மேற்குவங்கம்,அஸ்ஸாம் அங்கிருந்தெல்ல்லாம் புகார் வரல, தமிழ்நாட்ல தான ஸ்பெக்டரம் காசு புழங்குது அத வச்சு ஜெயிச்சறலாம், இப்ப அதுல மண்ணைபோட்டா கோபம் வரத்தான் செய்யும்.

இன்னைக்கு கருத்துக்கணிப்பு வேற வந்திருச்சு. இதுக்கு ஏன் தேர்தல் ஆணையம் தடை போடலைன்னு தெரியல. இது அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு கருத்துக்கணிப்பு தானே? இந்தியாடுடே,ஹெட்லைன்ஸ் டுடேக்கு கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியா இருக்கிறாங்க இல்லன 44% ஓட்டுவாங்கப்போற திரிணாமூல் கூட்டணி 182 இடத்திலயும் ,அவங்களை விட 1 சதவீதம் கம்மியா வாங்குகிற இடதுமுண்ணனி 101 சீட்லயும் ஜெயிக்கும் சொல்வாங்களா. இன்னைக்கா சொல்றாங்கா,இதுக்கு முன்னாடி நடந்த ரெண்டு சட்டமன்றத்தேர்தல்கள் கருத்துக்கணிப்பிலயும் திரிணாமூல் காங்கிரஸ் தான் வரும்னு அவங்க ஆசைய்ய சொன்னாங்க அது வர்க்க பாசம். இந்தியாவில் இருக்கிற பெருமுதலாளிகளின் சங்கம் ‘FICCI' அதோட தலைவர் அமித் மித்ரா திரிணாமூல் வேட்பாளரா இருக்கிறாரு ஏன்னா அவாங்க அரசியல் அப்படி. திமுக வந்தாலும் அதிமுக வந்தாலும் ஆள்கிற வர்க்கத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்ல. தமிழக முதல்வர் கருணாநிதி இப்ப பத்திரிக்கைகளை எல்லாம் ‘பார்ப்பனர்’ பத்திரிக்கை இது இப்படித்தான் எழுதும்ன்னு சொல்றார். ஜெயலலிதா அராஜக ஆட்சி செய்த போது இவங்க எதிர்க்கத்தான் செஞ்சாங்க, அத வசதியா ‘முரசொலி’ மறந்துபோயிடுது. திமுகவை விமர்சித்த தினமணியின் கார்ட்டூனுக்கு பதில் சொல்லமுடியாம வைத்தியநாத அய்யர்! ஒரு பார்ப்பனர் அப்படித்தான் எழுதுவார்ன்னு சொல்லுது.ஆனந்தவிகடனில் வந்த கலைஞரின் குடும்ப ஆல்பத்தை வெளியிட்டு ஆக்டோபஸ் குடும்பம் என்று கட்டுரை போட்டதற்கு விகடன் குடும்பம் ஒரு பார்ப்பனக்குடும்பம் அதான் அவங்க இன ஜெயலலிதா ஆட்சிக்கு வர ஆசப்படுறாங்கன்னு முரசொலி எழுதுகிறது. ஸ்பெக்டரம் ஊழலை ஊழலே இல்லை ராசா ஜெயிலுக்கு போனபின்னாடியும் இன்றும் முரசொலி அப்படித்தான் எழுதுது. அத வாசிக்கிறவங்களப் பத்தி என்ன நினைச்சாங்களோ? திமுக தொண்டர்கள் அநியாயதுக்கு விசுவாசமா இருக்காங்களே!!!

கருத்துகள் இல்லை: