சிரியாவில் பள்ளிக்கு செல்லவேண்டிய குழந்தைகள், தாய் தந்தையரின் அன்போடும் பரிவோடும் வளர்ந்தவர்கள் கொடிய போரால் தினந்தோறும் அடுத்த வேளை உணவிற்காக எங்கோ வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு அமைதியாக இருந்த நாட்டின்மீது அநியாயமாக உள்நாட்டுப் போரை துவக்கி தினமும் அலுவலகம் சென்றவர்கள் கூலிப்படையினராக தெருவோரம் துப்பாக்கிகள் ஏந்தி ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்கள். யாருக்காக சண்டையிடுகிறார்கள்! ஆட்சி மாற்றத்தை பற்றி பேசுபவர்கள் முடியாட்சி மன்னர்கள் அதுதான் கேலிக்கூத்து. போர் எங்கு நடந்தாலும் கொடியது. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக