சனி, 22 டிசம்பர், 2012

மதச்சார்பின்மையின் தேவை.

தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் ‘உதவிசெய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்றே எழுதப்படும் என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.- சுவாமி விவேகானந்தர்.

தான் சார்ந்துள்ள சமயத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாடுகாரணமாக அதனி மேன்மைப் படுத்திட அதனைப் பெருமைப் படுத்தி, மற்றவர்களின் சமயத்தை வெறுத்து எவரொருவர் செயல்பட்டாலும், அதன் மூலம் தான் சார்ந்துள்ள சமயத்திற்கே நாசம் விளைவிப்பார்- அசோகச்சக்கரவர்த்தி .
                                                  --------------------

மதச்சார்பின்மை என்ற கொள்கை இன்று வலதுசாரிகளாலும் சில சந்தர்ப்பவாதிகளாலும் கொச்சைப் படுத்தப்படுகிறது. வலதுசரிகள் பெரும்பான்மையினரின் மத சட்டத்தின் ஆட்சியை அமைக்கவிரும்புகிறார்கள். அது இந்தியாவிலும் சரி, எகிப்திலும் அதே மாதிரி தான். திமுக போன்ற சந்தர்ப்பவாத கட்சிகளாலும் மதச்சார்பினமை வாதம், மதவாதம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக எந்த கூட்டணியில் சேர்ந்தால் பதவியில் அமர்லாம் என்று தெரிந்துகொண்டு மதவாதிகளோடு குலாவிக்கொண்டும் அவர்களுக்கு எதிரான தேர்தல் கூட்டணி சேரும்போது `மதவாதம்` என்ற ஆபத்து வந்துவிட்டதைப் போல் பேசுவதுமாக சில கட்சிகள் உள்ளன.

இன்னும் சிலர் மதச்சார்பின்மை என்பது மேற்கத்தியவாதம் என்கிறார்கள். சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் விஞ்ஞானம் எல்லாம் மேற்கத்தியவாதம் என்பதற்காக யாரும் பேண்ட் சட்டை போடாமல் வேட்டி, கோவணம் அணிவதில்லை. எது சமூகத்திற்கு நல்ல கருத்தோ அது எங்கிருந்து வந்தால் என்ன? ஏற்றுகொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பதை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தமாதிரி வியாக்யானம் செய்கிறார்கள், அரசு எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கவெண்டும், அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ரி அடுத்தவர் மதம் குறித்து விமர்சிக்கக்கூடாது என்றும் சிலர் எழுதுவதை வாசித்திருக்கிறேன். உண்மையில் இது 'state' ச்மபந்தமான விசயம், பல்வேறு மதநம்பிக்கைகள் கொண்ட மக்கள் கூட்டத்தில் அரசு எந்த ஒரு மதத்தையும் தன்னுடைய ஆட்சி மதமாகவோ அல்லது நிர்வாகத்தில் மதத்தின் தலையீடோ இருக்கக்கூடாது என்பது தான். மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட விவகாரம், அரசு நிர்வாகத்தில் மதத்தை நுழைக்கக்கூடாது என்பது தான் மதச்சார்பின்மை.

மத அடிப்படையில் ஆட்சி நடபெற்றுவருகிற நமது அண்டை நாடுகளைவிட இந்தியாவின் ஸ்திரத்தன்மை நன்றாக உள்ளது, இப்போது எகிப்தில் நடைபெற்றுவருகிற மதக்கலவரங்களை அலசிப் பார்க்கவேண்டியதுள்ளது. பெரும்பான்மையினர் அவர்களின் மதச்சட்டத்தை ஆட்சியின் சட்டமாக நடைமுறைப்படுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது, அதற்கு எதிராகவும் மதச்சார்பற்ற அரசாக இருக்கவேண்டும் என்று சிறுபான்மையினரும் இதர ஜன்நாயகசக்திகளும் போராடுகிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால அங்கே மத அடிப்படையில் ஆட்சி அமைவது உறுதி. இந்தியா மற்ற நாடுகளிலிருந்து கிடைத்த படிப்பினைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.

வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள் 1857 வரை இந்தியாவில் மத நல்லிணக்கம் பேணபட்டது அதன்பின்னர் தான் இந்து-முஸ்லீம் மோதல்கள் ஆங்காங்கெ நடைபெற்று கடைசியில் அது 1947 ல் மத அடிப்படியில் பாகிஸ்தான் பிறந்தது. இன்று பாகிஸ்தானின் நிலைமை என்ன? பொருளாதார முன்னேற்றமும் அடையவில்லை, சமூக முன்னேற்றமும் அடையவில்லை. நிலையற்ற ஆட்சியும் பதட்டம் நிறைந்த வாழ்க்கையும் தான் மக்கள் அனுபவிக்கிறார்கள், சிறுபான்மையினரின் நிலைமை மோசமாக இரண்டம்தர குடிமகன்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி சிறுபான்மையினரை மோசமாகவும் இரண்டாம்தர் குடிமகன்களாகவும் நடத்த விரும்புகிற சக்திகள்தான் இந்துத்துவா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதற்கு வரலாற்றை சிறுபான்மையினரின் மீது வெறுப்புணர்வு தூண்டும் வகையில் எழுத முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக பிர்ந்த நேரத்தில் பண்டிட் நேருவுக்கு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கவேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதை நிராகரித்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்கும் என்று அறிவித்தார். நவீன இந்தியாவை நிர்மாணித்த இரு ஆட்சியாளர்கள் யாரென்றால் முதலில் பேரரசர் அக்பர், அடுத்து பண்டிட் நேரு என்று நீதிபதி.மார்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் அக்பர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார், அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தார். அதே நேரத்தில் மேற்கத்திய உலகத்தில் மதச்சண்டைகள் நடந்துவந்துள்ளன, கத்தோலிக்கள் பிராட்டஸ்டண்டுகள் மீதும் பிராட்டஸ்டண்ட்கள் கத்தோலிக்கர்கள் மீதும் கொலைகள் நடத்தினார்கள், இந்த இருபிரிவினரும் சேர்ந்து யூதர்களை அழித்தார்கள் என்பது வரலாறு.

இந்தியாவில் 1857ல் நடைபெற்ற `சிப்பாய்ப்புரட்சியை` ஆங்கிலேய வரலாற்றிசியர்கள் சிலர் `சிப்பாய் கலகம்` என்று எழுதினார்கள். மக்கள் எழுச்சியை கல்வரம் என்று இன்றும் எழுதுகிற போக்கு சில நாடுகளில் இருக்கிறது. சிப்பாய்புரட்சி தோல்வியில் முடிந்தாலும் அந்த படிப்பினைகளிலிருந்து பிரிட்டிஷார் மக்களை இந்து-முஸ்லீம் எனப்பிரிக்காமல் ஆட்சி நடத்தமுடியாது என்பதை உணர்ந்தார்கள். மத அடிப்படையில் பிரிதாளும் சூழ்ச்சியை கடைபிடித்து கலவரத்தை விதைத்தார்கள். ஆங்கிலேய கலெக்டர்கள் இந்துமத பீடங்களிடம் பணம்கொடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக பேசுமாரும் அதே பாணியில் மெளல்விகளுக்கு காசுகொடுத்து இந்துக்களுக்கு எதிராகவும் பேசுமாறும் செய்தார்கள். இந்தச் சண்டையை பயன்படுத்தி அவர்களின் ஆட்சி மேலும் ஒரு நூற்றாண்டுவரை நீடித்தது. B.N. Pandey என்ற பேராசிரியர் 1928ல் அலகாபாத் பழ்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சில மாணவர்கள் வரலாற்றுபுத்தகத்தை கொண்டுவந்து அதில் திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாமுக்கு மாறவேண்டும் இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று சொன்னராம், அதனால் அந்த மானமுள்ள 3000 பிராமணர்கள் தற்கொலைசெய்து கொண்டதாகவும் வரலாற்று பாடபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அந்த நூலை எழுதிய பேராசிரியர் ஹர்பிரசாத் சாஸ்திரியை தொடர்புகொண்டு இந்த தகவல்கள் எங்கே கிடைத்தன் என கேட்டிருக்கிறார் பாண்டே. அவர் மைசூர் அரசாங்க ஆவணத்திலிருந்து பெறப்பட்டதாக சொல்லியிருக்கிறார், மைசூர் பழ்கலைக்கழக பேராசிரியர் ஸிரீகாந்தியாவிற்கு கடிதம் எழுதி தகவலை கேட்டிருக்கிறார் , அப்படிப்பட்ட எந்த தகவலும் மைசூர் அரசாங்க ஆவணத்திடம் இல்லையென பதில் கிடைத்தது. ஆனால் திப்பு சுலதானைப் பற்றி இன்றும் மைசூர்பகுதி மக்கள் அறிவார்கள்,திப்பு சுல்தான் மைசூரில் மிகவும் பிரபலமான் வைணவக்கோயிலுக்கு வைரக்கீர்டம் அளித்திருக்கிறார், வருடந்தோறும் 156 இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருக்கிறார், அவர் மரியாதை நிமித்தமாக சிருங்கேரி மடத்திற்கு எழுதிய 30கடிதங்கள்  இன்றும் ஆவணமாக் உள்ளான. அவருடைய ஆட்சியில் பிரதம் மந்திரி ஓர் இந்து அவர் பெயர் புனையா, அவருடைய தளபதியும் ஒரு இந்து தான் அவர் கிருஷ்ணாராவ். வரலாற்றை இப்படி எழுதுவதால் இண்டியாவில் பெரும்பான்மை சமூக இந்து மாணவர்களிடம் முஸ்லீம் வெறுப்புணர்வு வளர்கிறது அதேபோன்று பாகிஸ்தானில் இந்து வெறுப்புணர்வு தூண்டப்படும்.

முதலில் படையெடுத்த மொகலாயர்களான கஜினிமுகம்மது ஓர் ஆக்ரமிப்பாளன், அவன் சோம்நாத் கோவிலை கொள்ளையடித்தான் இதைப்பற்றி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பாபருக்குபிந்தைய  மொகலாய அரசர்கள் இந்தியாவில் பிறந்தார்கள், மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் ஹோலி பண்டிகையும் தீபாவளியை கொண்டாடினார்கள் என்பதை பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை. இந்துக்கள் ஈத், மொகரம் பண்டிகைகளை இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள், சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் பண்டிகைகாலத்தில் பசுவதை கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள். 1857 சிப்பாய்ப்புரட்சி யில் பன்றியின் கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்து- முஸ்லீம் சிப்பாய்கள் சேர்ந்துதான் உபயோகிக்க  மறுத்ததுதான் புரட்சியின் முதல்விதை. அந்த புரட்சியில் வெள்ளை ஆட்சியால் பாதிக்கப்பட்ட இந்து மன்னர்கள் தாந்தியாதோபெ, ஜான்சிராணி போன்றோர் மட்டுமல்லாது சிப்பாய்புரட்சியின் நாய்கர்களும் மொகலாயர்களின் கடைசி சக்கரவர்த்தியான டில்லி பகதூர்ஷாவை புரட்சிக்கு தலைமைதாங்க சொல்லியிருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை என்பது எப்போதும் அவசியமானது, பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்று வ்ள்ளைக்காரர்களிடமிருந்து மதவெறி சக்திகள் கற்றுக்கொண்டார்கள். கலவரவிதைகள் விதைக்கப்படுவதையும் நாம் அறிகிறோம்.

கருத்துகள் இல்லை: