கடந்த பல வாரங்களாக வட ஆப்பிரிக்கா மேற்கு ஆசியா நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. துனீசியாவில் ஆரம்பித்த மக்கள் எழுச்சி அந்த நாட்டின் ஆட்சியாளர் பென் அலி பாயை சுருட்டிக்கொண்டு (பணத்தையும் தான்) ஓட்டமெடுத்தார், அடைக்கலம் கொடுக்கவே இருக்கிறது சவுதியிருக்க பயமேன்.அதன் தொடர்ச்சியாக எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி நீண்டுகொண்டே சென்று கடைசியில் ஹோசினிமுபாரக் பதவி விலகினார்.எகிப்தில் நடந்த போராட்டங்களுக்கு facebook,orkut,twitter தான் காரணம் என்று பல நாடுகளில் வலைப்பக்கங்களை முடக்கும் வேலையும் நடப்பதாக செய்திகள் வருகின்றன. சொன்னமாதிரி வெறும் இணையவழி உரையாடல்கள் புரட்சியாக மாறவில்லை,கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே எகிப்தின் தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள் பிரசித்திபெற்ற தகிரீர் ச்துக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் 2010ம் ஆண்டில் ஆட்சிக்கெதிராக அதிக அளவு ஆர்ப்பாட்டங்களை அந்த சதுக்கம் கண்டிருக்கிறது. ஏமன், பஹ்ரைன் ஜோர்தான் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த சில மத்தியகிழக்கு நாடுகள் தம் மக்களுக்கு தாட்பூட் சலுகைகளை வழங்கியது.சவுதியில் குடிமக்களுக்கு எத்தனையோ பில்லியன் டாலர்களை சலுகைகளாக இறைத்தார்கள், அங்கு பணியாற்றுகிற இந்திய ஊழியர்களும் இரண்டு மாச போனசை பெற்றிருக்கிறார்கள். இப்படியாவ்து குக்கர் பிரசரைக் குறைக்கலாம்ன் தான்!
லிபியாவில் கடாஃபிக்கெதிராக ஆயுதமேந்தி போராட்டம் ஒருபகுதியில் நடைபெற்றுவந்தது, அவர்களை ஒடுக்கிய கடாஃபிக்கெதிராக மேற்கத்திய நாடுகள் no fly zone போடவேண்டும் என ஐநாவை கேட்டு ,பொருளாதார தடைபோட்டு கடைசியில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.இப்போது லிபியா இன்னொரு ஈராக்காக மாறிவருகிறது என்பதில் ஐயமில்லை. பென்காசி நகரில் கலகம் செய்பவர்கள் அல்-கயிதா என்கிறார் கடாஃபி, ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு யாரை ஆதரித்தால் என்ன எண்ணெய் வளம் கிடைத்தால் போதும் தானே? லிபியாவின் கிழக்கு பிரதேசத்தில் எண்ணெய்வளம் அதிகமாக உள்ளது, எனவே அந்தப் பகுதி கடாஃபியிடமிருந்து மீட்கவேண்டும் முடிந்தால் லிபியாவில் கடாஃபியை தூக்கிவிட்டு வேற ஆட்சியாளரை கொண்டுவரவேண்டும். இது தான் திட்டம்.பென்காசியில் ஆயுதமேந்திய போராட்டக்காரகளுக்கு யார் ஆயுதம் வழங்கியது இதெல்லாம் பார்க்கும்போது ஈராக் நாட்டை ஆக்ரமிக்க அமெரிக்கக் கூட்டாளிகள் செய்யும் தகிடுதத்தம் வேலைதானோ என பார்க்கவேண்டியதுள்ளது. ஆட்சிமாற்றம் கோருகிற கலகக்காரர்கள் நேட்டோ படையை வரவழைக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அந்த நாட்டை பீடித்துள்ள சோகம். லிபியாவில் தோண்டப்படாத எண்ணெய்க் கிண்றுகள் ஈராக்கைப்போல நிறைய உள்ளன. கடாஃபி இருக்கிறவரை அந்த எண்ணெய்வள்த்தை சூரையாடமுடியாது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
லிபிய அதிபர் கடாஃபிக் கெதிராக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் ஐ நா சபையில் கொண்டுவந்த தீர்மானம் வெற்றியடைந்தது. அதே நாள் ஏமனில் அரசுக்கெதிராக போராடியவர்கள் 60பேர் மன்னர் சலாவின் படையினரால் அநியாமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு ஒருநாள் முன்பு பஹ்ரைனில் அரசியல் சாசனத்தை சீர்திருத்தம் செய்யப் போராடியவர்களை மற்ற வளைகுடா படையினரை (சவுதியின் படைகள் என வாசிக்கவும்) வரவழைத்து சொந்தமக்களை ஒடுக்கினர். பாகிஸ்தானில் 44 பொதுமக்களை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது. இதெல்லாம் மனித உரிமைகள் மீறல் என்று ஐநாவிற்கோ உலகத்து ஜனநாயகம் என்றால் என்ன? என்று டியூசன் எடுக்கும் அமெரிக்காவிற்கோ தெரியவில்லை. எகிப்தில் முபாரக் பதவியிலிருந்து இறங்கியவுடன் இந்த பிரதேசத்தில் சவுதிஅரேபியா தான் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக மாறிவிட்டது. அரபு ஒன்றியத்தில் உள்ள ஒரு நாட்டிற்கு எதிராக பல நாடுகள் (வளைகுடா) Nato படைகளை வரவழைத்து ஆக்ரமிக்கச் சொல்கிறது. எந்த அளவிற்கு இவர்களின் ஒற்றுமை இருக்கிறது.
அமெரிக்காவிற்கு, இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக சவுதிஅரேபியா இருந்தால் பிடிக்கும் அதே பாணியில் ஈரான் இருந்தால் பிடிக்காது. பிரிட்டிஷ் பிடியில் இந்தியா இருந்தபோது இந்து-முஸ்லீம் பிரிவினை வைத்தே அரசியல் நடத்திய மேற்குலகம் இப்போது அரபு நாடுகளில் சியா-சுன்னி மோதலைத் தூண்டி அரசியல் நடத்துகிறது. ஈரானை ஒரு சியா நாடாகவும் சவுதியை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்களின் நாடாகவும் அமெரிக்கா பிளக்கிறது. இந்த சதியில் சிக்கிக்கொண்டவர்கள் சகோதர நாடுகளை எதிரிநாடாக பாவிக்கின்றனர்.பஹ்ரைனில் பெரும்பாலான மக்கள் ஷியா பிரிவினர் இயற்கையாக அரசியல் சீர்திருத்த சட்டத்திருத்திர்கு போராடியவர்களை சுன்னி பிரிவினரின் ஆட்சிக்கெதிராக போராடுகிறார்கள் என்று திரிக்கிறார்கள். ஏன் இந்த எண்ணெய் வளம் இங்கு கிடைத்தது என்ற அள்விற்கு வளைகுடா நாடுகள் நொந்து கொள்ளவேண்டியதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக