வெள்ளி, 25 மார்ச், 2011

கிறுக்கல்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எழுதுகிறேன், தினமும் வலைப்பூவின் பக்கம் வந்தாலும் சோம்பலோ, மனக்குழப்பமோ களைப்போ காரணமாக பதிவிடமுடியவில்லை. நான் தொடரும் சில வலைப்பூக்களை தினமும் வாசித்தாலும் கருத்திடமுடியவில்லை.பெப்ரவரி 13ம்தேதி எனது துணைவி பெண்மகவை ஈன்றாள், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணோ பெண்ணோ ‘பாரதி’ யின் பெயரை சூட்டியாயிற்று.

மிகுந்த கூட்டணி கணக்குகள் முடிந்து அரசியல்கட்சிகள் ஒருவழியாக தேர்தல்களம் காணுகிறார்கள், வழக்கமான தேர்தல் போல இந்த தேர்தல் இல்லையென்று செய்திகள் மூலம் தெரிகிறது.தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு அன்பளிப்பு வழங்கமுடியாமல் தவிக்கிறார். காங்கிரஸ் கட்சி சிபிஐ என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி திமுகவை அடக்கிவிட்டது, காங்கிரஸ்காரர்கள் 63 நாயன்மார்களை ஸ்பெக்ட்ரம் உதவியால் பெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதுபோல உக்காந்து யோசிப்பதற்கென்றே நிறைய பேரை அப்பாயிண்ட செய்திருகிறார்கள், அங்கெ எல்லோருமே அப்பாயிண்ட்மெண்ட் மூலம் தானே பதவியில் இருக்கிறார்கள். திமுக அணி எதிர்பார்த்தது போல அதிமுக கூட்டணி சுக்கு நூறாக உடையவில்லை, இந்த தேர்தல் கூட்டணி அமைவதற்குள் நம் அரசியல் கட்சித்தலைவர்கள் எத்தனை இரவுகள் தூக்கத்தை கழித்தார்கள்.ஏப்ரல் 14ம்தேதியிலிருந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்கலாம் இடதுசாரிகள் தவிற்த்து. அவர்கள் கட்சி அலுவலகம் சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பாமக, அதிமுக தேமுதிக திமுக இன்னும் எத்தனையோ தேர்தல் காலத்தில் புதிதாக முளைத்த கட்சிகள் தேர்தல்கள், பதவிகள், காண்ட்ராக்டுகளுக்கு என்றே இயங்குகின்றன, அவர்கள் அரசியல் அப்படி ஏதோ பிரைவேட் லிமிடேட் கம்பெனியில் சேரும் பங்குதாரர்கள் மாதிரி அதன் தலைவர்கள். இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்கள் 10சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் இந்த சுயநல அரசியல்வாதிகளிடம் கெஞ்சவேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை என்றால் மக்கள் offer இருக்கிற கடையைத் தானே மொய்க்கிறார்கள். கடந்த தேர்தலில் நடந்த ஒரு கூத்து, மதுரையில் திமுகவினர் நாளிதழ்கள் வழியாக ஓட்டுக்குப்பணம் கொடுத்திருக்கிறார்கள் அதை கண்டுபிடித்த போலிசில் புகார் செய்த மார்க்சிஸ்ட்கட்சியின் ஆபிசில் பொதுமக்கள்! ரகளை செய்திருக்கிறார்கள் என்ன செய்வது எரிகிற வீட்டில் பிடுங்குவது போல அலைகிறார்கள். நண்பர் ஒருத்தர் இதுக்கு விளக்கம் கொடுத்தார், அதாவது ஊழல் செய்த மக்கள் பணம்தானே யார் கொடுத்தாலும் வாங்குவம் , பிடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுவம் , இப்பிடி யோசிச்சா என்ன பண்ரது. இந்த விவகாரம் அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது நமது அஞ்சாநெஞ்சனின் புகழும் சிதம்பரத்தின் ‘குலக்கொழுந்தின்’ புகழும் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது. பின்னே நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் விலைபோகமாட்டார்களா?

விக்கிலீக்ஸ் புயல் அமெரிக்காநாட்டை ஆட்டிவிட்டு இப்போது இந்தியாவை ஒரு வழி பண்ணுகிறது, இதற்கு ‘ஹிந்து’ நாளிதழ் என்ன பாடு படப்போகிறதோ?மடியில் கணமில்லையென்றால் வழியில் பயமில்லை. ‘ஹிந்து’வின் நேர்மை ‘சாயாத தலை’ மக்களை தெளிவுபெறசெய்தமைக்காக அதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.இதுவரை மன்மோகன்சிங் அரசின் வெளியுறவுத்துறை ஹிலாரிகிளிண்டனின் கட்டுப்பட்டில் இயங்குவது ஆச்சரியம் அளிக்கவில்லை, ஒருவேளை Disinvestmentல் அதை அமெரிக்காவிற்கு கொடுத்தாகிவிட்டதோ? மத்தியமைச்சரவை மாற்றியமைத்தால் அவர்களுக்கு பிடித்தமாதிரி, அத்வானிஜி வெளிய ஒருமாதிரி பேசுறாறு, அமெரிக்கத் தூதர்கிட்ட ஒருமாதிரி பேசுறாரு. அவங்க கொள்கையே அப்படித்தான! முதல் ஐக்கியமுண்ணனி ஆட்சியயின் கடிவாளம் இடதுசாரிகளிடம் இருந்ததால் பிரகாஷ்காரத்தைப் பார்த்து பேசியிருக்காங்க ,அங்க பப்பு வேகுமா, நல்லுறவு வைச்சுக்குவம் தப்பில்லை, அதுக்காக நாட்டை அடகு வைக்கிற மசோதாவை நாங்க அனுமதிக்கமாட்டோம்ன்னு நின்னார். அமெரிக்க கூடஅணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் சொன்னபின்னாடி ஆட்சியை தாங்கிப்பிடிக்க அமெரிக்கத்தூதரக ஊழியரே பட்டுவாடா செய்திருக்கார்ன மசோதாவாலா யாருக்கு பலன்கிடைக்கிற ஒப்பந்தமோ? பின்ன என்ன பன்றது அந்தக் கட்சியை உண்டு இல்லண்ணு பன்ற வேலைதான் இப்ப மேற்குவங்கத்தல மம்தா மாவோயிஸ்ட் மூலமா செய்றாங்க போல.

ஜப்பானில் நடந்த சோகமான நிலநடுக்கம்,சுனாமி ஆபத்து எல்லாத்தையும் விட சுனாமியால் உடைந்த அணுமின் நிலைய ரியாக்டர் வெடித்ததில் ஏற்பட்ட பாதிப்பு தான் அதிக கவலையளிக்கும் செய்தி. இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உடனே பிரதமர் ஆய்வு செய்யனும்னு பாவலா காமிக்கிறாரு, உடனே ரிட்டயரான அணு விஞ்ஞானி அனில் காகோட்கர் தூக்கத்திலிருந்து எ்ழுந்துவந்து அப்படியேல்லாம் இந்தியா அணு உலைக்கு பாதிப்பு வராதுன்னு சொல்றார். ஒருவேளை போபால் மாதிரி வந்தா நம்ம சாகமாட்டம்ன்னு நினைக்கிறாரா? படித்தவன் சூதும்வாதும் செய்கிற காலம் தான! அனல்மின்சாரம் செய்யத்தேவையான கனிமவளம் நம்மிடம் இருக்கிறது, வாய்ப்பு இருக்கிற இடத்தில் நீர்மின் நிலையம் அமைக்கலாம், சூரியசக்திக்கு அரசு மானியம் அளித்து இலவசங்களுக்கு பதில் கலைஞர் அதைக் கொடுக்கலாம் (அதிலஎங்க மானாடா மயிலாட வருது). மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஜெய்தாப்பூரில் மிகப்பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டு நிறுவன் உதவியுடன் 10,000 மெஹாவாட் அமைய உள்ளது, கொங்கன் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதி மட்டுமில்லை விவசாயமும் மீன்பிடியும் அங்கு முக்கிய தொழில். நிலநடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பும் அங்க இருக்கு அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். இங்க சிலர் என்னபன்றது நமக்கு தடையில்லா மின்சாரம் குறைந்தவிலை?யில் வேணுமே சொல்றாங்க. ஐரோப்பா நாடுகளில் அணு உலைகளுக்கு பலத்த எதிர்ப்பு வருகிறது, என்ன செய்ய அதுக்கு தான் third worldன்னு நாம இருக்கமே! தொடர்ந்து பயனிக்கமுடியும் என்ற நம்பிக்கையில்...

கருத்துகள் இல்லை: