சனி, 11 டிசம்பர், 2010

அமெரிக்க ஆணவம்

அமெரிக்காவிற்கான இந்திய தூதரான மீரா சங்கர் அமெரிக்க உள்நாட்டு பயணத்தின் போது விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை என்ற பேரில் அவமானப்படுத்தப்படுள்ளார். தான் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் என்ற அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் அவர்கள் சட்டை செய்யவில்லை. இது போன்று இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் அவமரியாதைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. அமெரிக்கப் பயணத்தின் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் ஆடைகளை கழைந்து சோதனைக்கு உள்ளானதை நீண்ட நாட்கள் கழித்து வெளியில் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஷூ வைக் கழட்டச் சொல்லி சோதனைக்கு உள்ளாக்கினார்கள். வழக்கமாக இந்தியத் தரப்பில் கண்டன அறிக்கை வாசித்தபின்பு ஏதோ தெரியாமல் நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சோதனைகள் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பற்றி அவர்களின் எண்ணமும் நமது எண்ணமும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் தோழமையாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஏகாதிபத்திய நோக்கில் பார்க்கிறார்கள்.இது போன்ற செயல்களுக்கு பதில் நடவடிக்கை தேவை, இந்தியாவும் அமெரிக்க அமைச்சர்களை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்குள்ளாக்கவேண்டும். இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கத் தூதர்களை இதே போன்ற சோதனைக்கு உள்ளாக்கவேண்டும்.



அவர்கள் கொடுக்கும் நிலையிலும் இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் நிலையிலும் ஏதும் இல்லை,பரஸ்பர உறவு தான் தேவை. மாறாக இப்போது அமெரிக்க பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பை உருவாக்காவும் இந்திய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு தேவை. மன்மோகன் சிங் இந்தியாவை தலைநிமிர வைப்பாரா?

1 கருத்து:

சிவகுமாரன் சொன்னது…

அமேரிக்கா பெரியண்ணன் மனப்போக்கில் நடப்பதும் நம்மவர்கள் அவர்களுக்கு பல்லக்கு தூக்குவதும் வாடிக்கையாகி விட்டது. மன்மோகன்சிங்கின் ஜட்டியை கழட்டியதை இன்னும் கொஞ்சம் காலத்திற்குப் பிறகு சொல்வார். அடிமைத்தனம் நம் மனங்களில் இருந்து இன்னும் போகவில்லை.