சனி, 11 ஏப்ரல், 2020

PPE ஒரு நினைவு

PPE ஒரு நினைவு
கொரோனாவிற்கு பின் எல்லோரும் personal protective equipment பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தொழிற்சாலையில் வேலைசெய்வதால் தினமும் PPE அணிந்துகொண்டே வேலைசெய்கிறேன்.பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையில் வேலைசெய்வதால் எப்போதும் 'escape mask ' எனப்படும் 'பையை' இடுப்பில் மாட்டிக்கொண்டு திரிவோம். ஏதாவது அவசர காலத்தில் கெமிக்கல் அது spillage அல்லது leak ஆகிவிட்டால் காப்பாற்றிக்கொள்ள 'escape mask ' பயன்படும்.

basic ppe என்றால் coverall எனப்படும் உடை, helmet , goggle அல்லது safety glass .safety shoes மற்றும் gloves என்பதும் கையுறை மிக அவசியம். நீங்கள் என்ன வேலைசெய்ய போக்கிரிகள் அது உடலை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்து மேலும் சில PPE தேவைப்படலாம். PPE என்பது costly ஆன பொருட்கள்தான், அதில் நிறுவனங்கள் மிச்சம் அல்லது சிக்கனம் வைக்க நினைத்தால் வேலைசெய்ப்வர்க்கு பாதிப்பு ஏற்படலாம். அது அந்தந்த நிறுவனத்தின் கொள்கை சம்பந்தப்பட்டது.

என்னுடைய முதல் PPE அனுபத்தை சொல்கிறேன், 2001ம் ஆண்டில் வேலையிழந்தேன், பின்னர் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி முறையில் சில மாதங்கள் இந்தியாவில் வேலைசெய்தென், அப்போது என்னுடைய நண்பர்களுடன் ஹல்தியாவிற்கு ஒரு மாத வேலைக்கு சென்றேன், தினமும் 200 ரூ சம்பளம், தங்குமிடம், உணவு, ot travel allowance உண்டு. வேலைக்கு சென்ற இடத்தில் 'coverall ' அணியவேண்டும் என சொல்லியிருந்தார்கள். அதுவரை என்ன உடை அணிந்தோமோ அதில் மோசமானதை வேலை செய்யும்போது அணிந்துகொள்வது வழக்கம். 'coverall ' மற்றும் PPE போன்றவற்றை நிறுவனம் வழங்கவேண்டும். ஒரு பெட்டியில் மொத்தமாக 50 coverall , 50 helmet போன்றவற்றை இட்டிருந்தார்கள் அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். நமக்குத் தேவையான அளவில் 'coverall ' கிடைத்தால் அதிர்ஷ்டமே, எனக்கு தேவை 'M' size கிடைத்தது XXL என்னசெய்வது கிடைத்ததை அணியவேண்டும், அதுவே ஆபத்தை விளைவிக்கும் என்றெல்லாம் நிறுவனம் யோசிப்பதில்லை. வேலை முடிந்தபின் அங்கேயே (உடைமாற்றும் அறையில்)போட்டுவிட்டு செல்லுங்கள் என்றார்கள் சரி என்றோம் , மறுநாள் அந்த துவைக்காத உடையை காணவில்லை வேறு யாரோ அதை எடுத்துக்கொண்டார்கள். site incharge என்பவன் எப்போதும் மிக்ஸர் தின்றுகொண்டேயிருந்தான், இதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை , தினக்கூலிகளாகிய நாங்கள் எதுவும் சொல்லமுடியவில்லை. அடடா ஒரு வேளை 'coverall ' costly ஆன உடை என்றே எண்ணியிருந்தேன், பின்னர் சில மாதங்கள் கழித்து குவைத் சென்றேன் அங்கே நீல நிறத்தில் இரண்டு 'coverall ' புதிதாய் எனக்கு பொருத்தமாக கொடுத்தார்கள் மதியழகன் என்ற மேனேஜர் நான் அணிந்திருந்த அதே டிசைனில் சட்டை போட்டிருந்ததால் என் பெயரை அவருக்கு நினைவிருந்தது ஆனால் சில வருடத்தில் குறைந்த வயதில் உடல்நலத்தால் இறந்துவிட்டார் நல்ல மனிதர் .
அந்த 'coverall ' என்ன விலை என்றால் 1 KD = 150ரூ (அன்றைக்கு) எனக்கு பழைய நிறுவனத்தின்மிது சீ ..என்றாகிவிட்டது என்ன செய்ய கசப்பான அனுபவங்களை கடந்துதான் வந்திருக்கிறோம்.




கருத்துகள் இல்லை: