செவ்வாய், 26 ஜூன், 2012

சத்யமேவ ஜயதே

சத்யமேவ ஜயதே..

அமீர்கான் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் நடத்திக்கொண்டிருக்கிற நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளை பார்த்தேன். ஒன்று, இந்தியாவில் பெண்கள் ஏன் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் இல்லை என்பதைக் குறித்த நிகழ்ச்சி. அதற்கு வெறும் கருத்துக் கணிப்பை ஆதாரமாகக் கொள்ளாமல் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்களை ஆதாரமாகக் கொடுக்கிறார். நண்பர்களிடம் இதுகுறித்து விவாதிக்கும்போது..

@ இயற்கையாக பெண் குழந்தைகள் குறைவான எண்ணிக்கையில் பிறக்கிறது

@ பெண் குழந்தைகளை கருவிலேயெ கொன்றுவிடுகிறார்கள்

@ ஆண் குழ்ந்தைகளுக்கு கொடுக்கும் மருத்துவம், உணவு போன்றவை கிடைக்காமல் பெண் குழந்தைகள் சத்துக்குறைவினால் இறக்கின்றன.

போன்ற கருத்துக்கள் வந்தன. இயற்கையாக பெண் குழந்தைகள் குறைவாக பிறக்கின்றன என்றால் ஏன் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உ.பி, பிகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், தில்லி, ம.பி, இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மட்டும ஆண் பெண் வித்தியாசவிகிதம் அதிகமாக இருக்கிறது? தமிழ்நாட்டில் தேனி, தர்மபுரி மாவட்டங்களில்  பல ஆண்டுகளுக்கு முன்னால் பெண் சிசுக்கொலை நடக்கிறதாக செய்திகள் வந்தன. 2001 கண்க்கெடுப்பின் படி  தர்மபுரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 826 பெண்களும் தேனி மாவட்டத்தில் 891 பெண்களும் மட்டுமே இருக்கின்றனர்.

தொலைக்காட்சி விவாத்தில் பெண்சிசுக் கொலை, கருவிலேயெ பெண்குழந்தைகளை அழித்துவிடல் போன்றவை யார் செய்கிறார்கள் என்று மக்களிடம் கேட்கும்போது பொதுமக்களின் கருத்து...

# கிராமப்புறங்களில் நடக்கிறது
# படிக்காதவர்கள் செய்கிறார்கள்
# வறுமையில் இருப்போர் செய்வார்கள்

இப்படித்தான் மக்களின் கருத்து நம்மிடையே நிலவுகிறது, ஆனால் புள்ளிவிவரம் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் எண்ணிக்கை வேற்றுமை அதிகமாக உள்ளது, படிக்காதவர்களைவிட படித்தவர்கள் தான் இந்தத் தவறுகளை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் சேரிகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது வறுமை காரணமாக பெண்சிசுக்கொலை, கருவிலேயெ பெண் குழந்தையை அழிக்கும் செயல் இல்லை. பொருளாதாரத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்த குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் சமூகவளர்ச்சி அடையவில்லை. இந்த ஆண் பெண் விகிதங்களின் வித்தியாசம் குறைந்துவருகிறது என்பது நல்ல செய்திதான். ஆனால் 0-6 வயதான பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டைவிட இப்போது குறைவாக இருக்கிறது என்பது தலைகீழான வளர்ச்சியாக உள்ளது.

இரண்டாவது நிகழ்ச்சி.. விவசாயத்தில் பூச்சிமருந்து தெளிப்பதால் ஏற்படும் விளைவுகள். பசுமைப்புரட்சியின் விளைவாக இந்தியாவில் வீரிய விதைகள், ரசாயண உரம், ரசாயண விஷம் நிறைந்த பூச்சி மருந்து பயன்பாடு இந்திய விவசாயத்தில் அதிகரித்திக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வில் எந்த மலர்ச்சியும் ஏற்படவில்லை என்பது கண்முன்னெ தெரிகிற சாட்சி. ரசாயண உரத்தை அதிகமாகப் ப்யன்படுத்தியதால் நிலத்தின் தன்மை மோசமாகியுள்ளது, பூச்சிமருந்து தெளிப்பதால் விவசாயிகள் அதிக உற்பத்தி அடையவில்லை மாறாக நுகர்வோரும் அதன் பக்கவிளைவுகளை சந்த்துவருகிறார்கள்.

எண்டோசல்பான் மருந்தை தேயிலை தோட்டத்தில் தெளித்ததால் கேரளாவில் அப்பகுதியில் பிறந்த குழந்தைகள் ஊனமாக பிறந்தன, பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பூச்சிமருந்தைப் பயன்படுத்துவதால் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புலி வாலைப் பிடித்தகதையாக விவசயிகளால் இரசாயண உரம், பூச்சிமருந்து ஆகியவற்றை விடமுடியாமல் திண்றுகின்றனர். ஆனால் மாற்று விவசாயத்தை சமூக ஆர்வலர்கள் நடத்தி விவசாயிகளுக்கு வெளிச்சம் காட்டுகிறார்கள். இன்று ஆர்கானிக் காய்கறிகள் அதிக விலை விற்கிறது. சமூகத்தில் வசதிபடைத்தவர்கள் நச்சில்லாத பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வாங்கி உண்கிறார்கள். ஆனால் சாமானியர்களால் அது எட்டாக்கனியாக இருக்கிறது.

சொந்தசெல்வில் சூன்யம் வைப்பது இதுதான், காசு கொடுத்து உரம்வாங்கி நிலத்தை பாழாக்கி, பூச்சிமருந்து வாங்கி விளைச்சலை விசமாக்கி அவனே விஷம் கொண்ட உணவை உண்டு, உடல் நலம் பக்கவிளைவிற்காக பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தயாரிக்கும் மருந்தைச் சாப்பிட்டு உயிர்வாழ்கிறோம். பசுமைப்புரட்சியால் விவசாயிக்கு ஒன்றுமில்லை, உரக்கம்பெனி, பூச்சிமருந்து உற்பத்தியாளன், விற்பவன், விதை நிறுவனக்கள் எல்லாம் வளருகிறார்கள். இதில் லாபமடைந்தவர்கள் இயற்கை விவசாயமுறையில் விளைந்த பயிர்களை அதிகவிலை கொடுத்து உண்கிறார்கள். ஹிந்தியை எதிர்த்த அரசியல்வாதியின் குடும்பம் சி.பி.எஸ்.இ முறையில் சென்று படிப்பது மாதிரி.


கடந்த பத்தாண்டுகளில் இலட்சக்கணக்காண விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது இடுபொருட்களின் விலை, பூச்சிமருந்து, விதை, உரம் போன்றவற்றை கடன் கொடுத்துவாங்கி அவர்கள் விளைச்சல் இல்லாமல் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்கள். வருடந்தோறும் விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.  பசுமைப்புரட்சி குறித்த விவாதங்கள் நடைபெறவேண்டும். உழுகுடி முன்னேறுவதற்கு பதிலாக பிழைக்க வாவது வேண்டும்.

3 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! பூச்சிகளைக்கொல்ல விஷ மருந்தத் தயாரிக்கும் கம்பெனி முதலாளி ஷெராஃப்.அவரும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். விஞானிகள்,சொல்வது பொய் என்று அடித்துச் சொன்னார். சிக்கிம் மாநிலத்தில் எந்தவிதனமான உரமும் விற்கக்கூடாது என்று தடை செய்துள்ளார்கள். ரசாயன உரத்தை பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் நடக்கும் இடத்திலிருந்து விளை பொருட்களை வாங்கி விற்று கொள்ளை லாபம் பெறும் கம்பெனி ஓன்று இருக்கிறது..ரசாயன உரம் தயாரிக்கும் கம்பெனி முதலாளி ஷராஃப் அவர்களின் தம்பி தான் அந்தகம்பெனியை நடத்துகிறார்.அண்ணன் ரசாயனம்..தம்பி இயற்கை---காஸ்யபன்

hariharan சொன்னது…

அந்த பூச்சிமருந்து முதலாளி பேசும்போது எல்லோரும் சிரித்தார்கள், ஒரு பொய்யை ஆயிரம் தடவை சொன்னால் உண்மையாகிவிடும் என்று அவர் சமூக ஆர்வலர்க்ளை விமர்சித்துவிட்டு தன்னெஞ்சரிய பொய் சொன்னார்.இலாபத்திற்காக எதிஅயும் செய்வார்கள்.

Unknown சொன்னது…

THE PROGRAMME ABOUT HOW PESTICIDES BEING USED BY OUR AGRICULATURAL PRODUCED WOUNDERED ME. IT KILLS US SLOWLY AND WEEKANING OUR COUNTRY. I START WORKING ON IT TO BU AGRIPRODUCTS PRDUCED WITHOUT USING INORGANIC. IF IN HELP PL FEEL FREE TO CALL ME I AM IN SALEM TAMIL NADU SHAJATH 09150459763 shajath@gmail.com