என்னுடைய வேலை சம்பந்தப்பட்ட பதிவு தான்., கடந்தமார்ச் மாதத்தில் shutdown சமயத்தில் chlorine gas compressorஐ புதிதாக மாற்றினோம். அது ஜெர்மன் தயாரிப்புPGW என்ற நிறுவன தயாரிப்பு இப்போது Siemens நிறுவனத்துடன்
இணைக்கப்பட்டுவிட்டது .
புதிய இயந்திரத்தை மாற்றும் போதே பழைய compressor ஐ அந்த நிறுவனம் சரிசெய்து தரவேண்டும்அதை refurbishment என்கிறோம். பழய்ய இயந்திரத்தை அனுப்பும் முன்பு gas testing செய்து அந்தresult ஐ ஜெர்மனுக்கு அனுப்பியபோது இயந்திரத்தின் உள்ளே குளோரின் வாயு இருப்பதால்dismantle செய்து de contaminate அதாவது கெமிக்கல் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்து பின்னர்assemble செய்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த Compressor குளோரின் வாயுவை அதிக அழுத்தமடையச் செய்ய பயன்படுகிறது. பொறியாளர்இந்த பணியை என்னிடம் ஒப்படைத்தார் .
Workshop ல் ஒரே நாளில் top casing, rotor, bearings, labyrinth எல்லாவற்றையும் dismantle செய்தாகிவிட்டது. ஆனால் casingல் diffuser or diaphragm என்ற பாகத்தை நீக்கவேண்டும். நிறுவனம் ஆரம்பித்து 20 வருடகாலத்தில் பலமுறை maintenance வேலை நடந்திருக்கிறது ஆனால்ஒருமுறைகூட அந்த பாகத்தை dismantle செய்யப்படவில்லை பல ஆண்டுகளுக்கு முன்புமுயற்சித்தபோது dismantle செய்யமுடியவில்லை அப்படியே விடப்பட்டது.
இந்த முறை கண்டிப்பாக dismantle செய்யப்படவேண்டும் ஏனென்றால் அது ஜெர்மனுக்கு சுத்தம்செய்துதான் அனுப்பவேண்டும். அதற்கான special tools ஐ நாங்களே design செய்து fabrication செய்தோம். Special toolஐ fix செய்வதற்கு drill and tap செய்தோம். அதற்கு portable magnetic stand drilling machine பயன்படுத்தினோம் , dismantle செய்யவேண்டிய diaphragm cast iron material கொண்டு உருவாக்கப்பட்டது. Cast iron என்பது brittle தன்மை கொண்டது, அதிர்வை தாங்கும் சக்திஉண்டு , ductile குணம் கிடையாது, சம்மட்டி கொண்டு அடித்தால் bend ஆகாது உடைந்துவிடும்ஆனால் drill செய்வது எளிது.
Special tool ஐ stud bolt கொண்டு பொருத்தி அதற்காக 50 டன் எடை தூக்கும் இரண்டு ஹைடராலிக்ஜாக்கிகள் வைத்தோம். Hydraulic pump கொண்டு jack lifting செய்தோம் 500 bar pressure ஏற்றினாலும் ஒரு அசைவும் இல்லை.
எனவே casingஐ heat செய்தால் சிறிது expansion கிடைக்கும் அப்போது diaphragm release ஆகிவிடும், இரண்டு cutting set கொண்டு heating செய்தோம் top casing ல் 4 segments bottom casingல் 4 segments remove பண்ணவேண்டும்.
ஒரு diaphragm segment எடுக்க இரண்டு நாட்களாகிவிட்டது. ஒரு நம்பிக்கை துளிர்ந்தது. இனிஇதேபோல் heating செயது jack மூலம் எடுத்துவிடலாம். ஆனால் diaphragm க்கும் casing க்கும்இடையில் acid sludge கழிவு நிறைந்திருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை ஜெர்மன்காரனுக்கு தெரிந்திருக்கவேண்டும் அதனால் தான் dismantle செய்து அனுப்பு என்கிறான்.
இரண்டு casingல் இருந்து எல்லா diaphragm களை நீக்க ஒருவாரத்திற்கும் மேலானது , இந்தவேலையின் போது முதுகுவலி வேற இரண்டு நாட்கள் நிமிர்ந்து நடக்கவே இயலவில்லை. ஆனால்வேலை success ! பொறியாளர் என்னை பாராட்டினார் என்னுடன் வேலை செய்த சக டீம்நண்பர்கள்களையும் நன்றாக உழைத்தார்கள்.
ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது. பொறியாளர், டெக்னீசியன் , உதவியாளர் என கற்றுக்கொள்ள எல்லோரிடமும் ஞானம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக