
இன்றைய ஜனரஞ்சக ஊடகங்கள் எதுவும் மக்களை அல்லது அதன் வாசகர்களை நம்பி இல்லை, ஒரு தொலைக்காட்சி ஆகட்டும் அல்லது பத்திரிக்கையாகட்டும் அதன் விளம்பர வருமானம் தான் அதன் பலம் அதைமட்டும் நம்பியிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிற நிகழ்ச்சி உங்களுக்கு பரிசு தருமா? அல்லது 10ரூபாய் மதிப்புள்ள வார இதழ் 10ரூக்கும் மேலே பரிசுப்பொருள் தருமா? சிமகார்டும் தருகிறது? அது செய்வது பிரச்சாரம் பிரச்சாரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது அதன் ரேட்டிங். அதற்கு விள்ம்பரம் தருகிறவர்கள் மிகப்பெரும் நிறுவனக்கல் பன்னாட்டு நிறுவனங்கள். அரசின் நடவடிக்கை எல்லோருக்குமான அரசு என்பது இல்லை, சமூகத்தின் குறைவான எண்ணிக்கையுள்ள சிலரை மில்லிணியர்களாகவும் பெரும்பாலானவர்களை தரித்திரம் பிடித்தவர்களாவும் மாற்றுவதற்கு அதன் கொள்கைகள் தான் காரணம். இத்தைகைய கொள்கைகளை ‘நல்லது’ என்று வாசிக்கிறவர்கள் மேல் திணிப்பதற்கு உண்டான கருவி இந்த ஊடகங்கள். அதனால் அது வாச்கர்களின் நிலமையை ஆதரிப்பதில்லை மாறாக நம்மை சலுகை பெறுபவர்கள் என்ரு இழிவுபடுத்்துகிறது. பெரும் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிற வரிச்சலுகைகளை சரிதான் அப்போது தான் நாடு முன்னேறும் என்று நியாயப்படுத்துகிறது. சாய்நாத் அளித்துள்ள பட்டியலைப் பாருங்கள் 2004-05 ஆண்டிலிருந்து 2010-11 ஆண்டுவரை எத்தனை லட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை. இதை நீங்கள் வாசித்துவருகிற பத்திரிக்கைகள் தகவல் அளித்ததா? நமக்கு பெட்ரோல்,எரிவாயு வுக்கு மானியம் தருகிறேன் என்று இழிவுசெய்கிறது இறக்குமதி செய்யப்படுகிற கச்சா எண்ணைக்கும் வரி, அதை சுத்திகரிப்புசெய்தபின்பு சுங்கவரி, கலால்வரி, அது மாநிலத்திற்குள் விற்றால் விற்பனைவரி, நெடுஞ்சாலைக்கு ஒரு செஸ், கல்விக்கு ஒரு செஸ் அப்புறம் சாலையை மேம்படுத்த டோல்கேட்டில் தெண்டம். இவற்றையெல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு தான் இந்த ஊடகங்கள் உதவுகின்றன.
வாசகர்களை மட்டும் நம்பி வெளிவருகிற பத்திரிக்கைகள் தான் நம்முடைய நலன்களை பிரதிபலிக்கும். மற்றவையெல்லாம் நடிக்கும். பத்திரிக்கை, ஊடகங்கள் வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிரார்கள். எங்கும் போகவேண்டாம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சன் டிவி எப்படி உதவியது என்று நமக்குத்தெரியும், இப்போது கலைஞர் டிவி அந்த வேலையை செய்கிறது அதற்கு 2Gலிருந்து பணம் வந்ததுவரை. இதற்கு போட்டியாக ஜெயா டிவி இரண்டையும் ஒருவர் மாறிமாறி பார்த்தால் பைத்தியம் தான் பிடிக்கும் மூன்றாவதாக நேற்று முளைத்த தேமுதிகவுக்கு ஒரு சேனல். பிரான்சில் சர்கோசி ஆட்சிக்கு வந்ததற்கும் இத்தாலியில் பெர்லோஸ்கோனி பதவியில் நீடிப்பதற்கும் சார்பு ஊடகங்கள் தான் காரணம். விளம்பரவருமானம் என்பது நம்மால நினைத்தும் பார்க்கமுடியாத அளாவிற்கு வருகிறது, இல்லையென்றால் சன் இத்தனை சேனல்கள் தொடங்கமுடியுமா அரசியல் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும் வருமானம் பெருகியதற்கு அது மக்க்ளை சென்றடைந்தது தான் காரணம்.